ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

16. (605) பா விதையொன்று








       
பா விதையொன்று

பூவிதை ஒன்று எனக்கு வேண்டும்
பூவாகக் கவிதை  மலர வேண்டும்
பாவிதை ஒன்று எனக்கு வேண்டும்
கவிதைக் கருவொன்று எனக்கு வேண்டும்.
கிளர்ச்சியுற்ற மனதில் எனக்கு இன்று
கிட்டவில்லை கவிதைக் கரு ஒன்று
கருவுக்காய் சிலர்  இடம் தேடுவார்
விலை போட்டு இளைப்பாற ஓடுவார்

மலர்  இதழ்களாய் மகிழ்வு பிரிய
மனம் நிறை அமைதி மதுரமாக
கலை கமழும் கவிபாட நாடி
மலை வாசம் தேடிக்  கூடுவார்
அலை புரளும் கடற்கரை நாடி
நிலை கொள்வார் கரு தேடி
காற்றை கடலை கனமற்ற இடமாக
கவியெழுத கருத்தாய் நாடுவாராம் கவிஞர்.

காதல் தென்றலில் கலந்து நனைந்து
கூதல் காயப் பலர் உவந்து
காதல் கவிதை சுவைத்து வாசிப்பார் 
மோதலுடை வாழ்வின் மணம் கனம்
பாதம் நனைக்க சிலர் விரும்புவார்
ஓயாத கவி உணர்வு வடிகாலாக
ஏதாகினும் கருவொன்று எனைத் தூண்டிட
தூயதாய் உடன் மலரட்டும் இன்று

22-10-2002
(தமிழ் அலை ரி.ஆர் ரி வானொலியில் சகோதரர் கே.பி லோகதாஸ் கவிதை பாடுவோம் நிகழ்வில மாலை 19.00-20.00 ல்; ஒலிபரப்பானது)







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...