புதன், 6 பிப்ரவரி, 2019

12. (601) இரட்டைக்கிளவி









 இரட்டைக்கிளவி

கலகல காட்சியில்
திமு திமுவென மழலைகள்
சுறுசுறுப்பாக  ஓடுவதேன்!
சுளீர் சுளீரெனும் வெயிலில்
மளமளவெனப் பொறுக்குவதென்ன!

வளவளவெனப் பேசாது
துறு துறுவெனப் போட்டியை
கடகடவென முடித்தால்
கொட்டு கொட்டென்று பரிசுகள்
பொல பொலவென விழுமே.

 7-12-2017

இரட்டைக்  கிளவி

கடகடவென ஓடும் ஓட்ட வாழ்வில்
சடசடவென முறியும் இல்லற அமைதி
வெடவெடவென நடுங்கும் உறவு நெருக்கம்
தடதடவென ஆடும் நேசம் பாசம்;.

படபடக்கும் மனதால் தினம் தினம்
தொடவிடாது நகரும் எரிச்சல் சினம்.
சிடுசிடுத்து வெடி வெடித்துக்; குளப்பும்
கடுகடுப்பான சொற் குமிழ்; வளையங்கள்

எங்கு பார்த்தாலும் மழைக் காளான்களாய்ப்
பொங்கி வெடிக்கும் நவீன இணைகள்.
பங்கு கொண்டு சமரசம்  செய்யவியலாத்
தொங்கு பாலமான புரிந்துணர்வுக் கனதி.

நான்கு தசாப்தங்களிற்கும் மேலான என்
தேன் கூட்டு வாழ்வில் பொறுக்கிய இந்த
நான்கு தர இரண்டு (8) பட வரிகள்
வான் குருவியின் கூடாக உருப்பெற்றதிங்கு.

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.  28-10-2014.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

546 (1066) langa vetha 1967

        in 1967       comments;--     Sundrakumar Kanagasundram Very NICE. 11y Rajaji Rajagopalan வேதா, எப்படிக் கண்டுபிடித்தீர்கள் இந்தப் ...