ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

297. (860 ) இன்பம் தேடு

 



இன்பம் தேடு


துன்பம் விரட்ட இன்பம் தேடு!

அன்பு பெருகும் இன்பம் தேடு!

சக்தி பெருக்க இன்பம் தேடு

சதைகள் இளக இன்பம் தேடு

சங்கமம் பெருக இன்பம் தேடு

பொங்கும் ஆரோக்கியம் இன்பம் தேடு


சந்தப் பாட்டு இன்பம் தரும்

சந்தண மணம் இன்பம் தரும்.

சந்திக்கும் காதல், சதங்கை ஒலி

அந்தி மாலை, சந்திர ஒளி

மல்லிகை மணம், மதுர வீணை

அல்லி மலர், எதிலே பஞ்சம்!


வீசும் கடற்  காற்று இன்பம்

வீட ஓர் ஆலயம் இன்பம்.

ஆடும் ஊஞ்சல் அனுபவம் இன்பம்

ஆதவன் உதயம் அழகு இன்பம்.

கேசவன் குழுலோசை மயக்கிடும் இன்பம்.

கேட்காது தேடுங்கள் எங்குமே இன்பம்.


21-12.2005 தீபம் தொலைக்காட்சி  'அன்புள்ள நிநேகிதியே 'க்கு அனுப்பியது.

22-8-2005ல் நந்தவனம் இதழுக்கு அனுப்பியது. பிரசுரமானதோ தெரியாது.

அப்படியான தொடர்பு 







ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

296. (859) Radio - என் மனதை வாசித்தேன்- மேலும் கட்டுகிறேன்.

 


என் மனதை வாசித்தேன்-  மேலும் கட்டுகிறேன்.


என்னுள்ளத்து அரசாட்சி, அதிகாரம்

என்னிடமே உள்ளதை நினைப்பதே

இன்கோலாம் செங்கோல்! தன்னம்பிக்கை.!

வன்செயல் அழுத்தத்தால் வெளியுலகம்

தன்சுயம் மாற்றும் செயலின்

தன்மையை நானுணர்ந்து துணிவதே

துன்பம் அழிக்கும் சக்தி!

இன்ப வாழ்வின் வெற்றி


உள்ளதையெழுதி இறகு விரித்து

உயரே  பறக்கும் எத்தனம்!

துயரம் நிறை மனமல்ல!

துறுதுறுத்த  சுறுசுறுப்பு மனம்!

அறுதியற்ற ஆழ்கடல் ஆழம்!

உறுதி பெறும் இயற்கையனுபவத்தில்!

இறுப்பூது கொண்டெழும் தமிழ்

இறுமாப்படைய வேண்டுவதே ஆர்வம்!.


ஏமாற்றும் சுனாமி எதிர்ப்படும் போது

ஏற்றமிகு வலிமை நங்கூரம்!

எதிர்ப்பை வெல்ல மனவலிமை,

விடாமுயற்றி, சுயவிழிப்புணர்வு துடுப்பு!

கட்டுப்பாடுடை   எண்ணம், செயல்

விட்டு    விடாது   வாசிக்கும்

அடடா! அழகிய புத்தகம்! இரண்டாம் பாகம்

கட்டுகிறேன் மேலும் அழகாக....


 7-8-2020





சனி, 15 ஆகஸ்ட், 2020

295. (858 ) நாமெதைக் கண்டு ஊன்றி நிலைப்பது

   



நாமெதைக் கண்டு ஊன்றி நிலைப்பது


புலம்பெயர் வாழ்வு போர்க்

களம் புகும் வாழ்வு ஒரு

நிலம் பண்படுத்தி உழுது

நிதம் பாடுபட்டு அழுது

கல், மண், காற்று நீர்

புல் பசளை பணமெனப் 

பல்வேறு  அல்லல் தாண்டி

பலன் பெறும் உழவன் நிலை


நிறபேதம் இங்கு நம்மை

நிதம் கொல்லும் சமர் உண்மை

மொழி பேத முரண்பாடு

இழிவு தரும் பெரும் பாடு

ஏற்றத் தாழ்வு வர்க்கபேதம்

எந்நாளும் தர்க்க வாதம்.


உழவன் உவகையில் உரிமையுண்டு

உழைப்பின் பலனில் ஆனந்தமுண்டு

உரிமையற்ற நாட்டில் நாமெது கண்டு

ஊன்றி நிலைப்பது உல்லாசம் என்று


4-5-2002

(ரிஆர்ரி – வணக்கம் தமிழ் அலையிலும், சங்கமம் நிகழ்விலும் ஒலிபரப்பானது. )





வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

294. (857 ) இடைவெளிகள் நெருங்கட்டும்

 




இடைவெளிகள் நெருங்கட்டும்


நட்பில் இணைந்தால்   மௌனமேன்.

நடிப்பின்றிக் கேளுங்கள் ஏன்

துடிப்பின்றி  மௌனம் என்று , ம்..ம்..ம்...

வேடிக்கையன்றோ!


தாமரை இதழின் ஈரத்தில்

தாகம் தீர்க்கும் மோர்ச்சுவையில்

மோகம் குறையாத் தமிழ்ச்சுவையை

மாந்தி உணர்ந்து வெளியிடுங்கள்! 


கனியும் மனமாய்க் கலவுங்கள்

கங்குகரையற்ற அலையாய்க் கசடின்றிக்

கல்லாகும் நடிப்பை உதறுங்கள்!

கடைசியில் காவுவது ஏதுமில்லை. 


உலகில் அன்பிப்பதிலும்  பார்க்க .

அலட்சியம்இ உதாசீனம் செய்வது..

அவமானப் படுத்துவதில்

மனிதன் நேரம் செலவழிக்கிறான்.


ஒருவரை  யொருவர் மதிப்பது 

மிகக் கடினமான ஒன்றாக 

மனிதனுக்கு  உள்ளது  இது 

பிரபலமாக   சாதாரண மனிதனாக 

இருந்தாலென்ன பொருந்துதல் ஆகுமோ



  31-12-2019





செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

293. (856 ) தலை தாழாதுயருதல் தவம்

 


               தலை தாழாதுயருதல்   

                                 தவம்


கலைகளில் பரதம்.  


பரதமுனிவர் அறிமுகமாக்கிய உயரிய கலை

பாவம்,   ராகம்,   தாளமிணைந்த சொல்

தேவதாசிகளின் சதிராட்டத்தின் நெறிப்படுத்திய

வடிவம். சின்ன மேளம்.  கூத்தாடல்

தாசி ஆட்டம். எழுபதாண்டுகளாகிப் பரதமானது.

-----------------  

கவிதையில்    தகாத   சொற்கள்

களங்கமாம்  போட்டிக்கு நிராகரிப்பு

தரமான சொற்களின் தமிழர்த்தம் 

தெரியாதவர்கள் நடுவர்களான நிலை.


தமிழ்க் கவிதைப்  போட்டியைத் 

தவிர்த்த நிலை   ஆனது

தகவுடன் தமிழோடு வாழ்தல் 

தரமானது..தடம் பதிக்க


தடுக்கும் தடைகள் தாண்டுதல்,

தணிக்கை நிலை. தண்ணளி 

தரும் பாதை     தத்துவமானது.

தலை     தாழாதுயருதல்   தவம்


. 11-8-2020





 






சனி, 8 ஆகஸ்ட், 2020

292. (855 ) மனப் பிரசவம்.--- எழுதுகோல்

 





மனப் பிரசவம்.

விதமான சொற்கள் வண்ணமாய்
பதமான எண்ணப் பகுப்பில்
மிதமான சுவடுகள் மகத்துவமாய்
மத மதவெனப்  புரண்டது  மங்கலமாய்
வித்தகச் சிறு விதைகள்
புத்தம்புதுக் கந்தருவப் பனுவலாகிறது.
புத்தகம் விசிறிடும் உற்சாகச் சாரல்
மொத்தமான அங்கீகார மதர்த்தலேயிது.

உறவு உணர்வு வழி மனப்பிரசவமிது.
பறவைச் சிறகுத் துடுப்பென 
இறகு எழுதுகோல் இணைத்து
எழுதுகிறேன் மனதிற்குத்   திருவேற்ற
நிகழ்தலாகிறது விசையுறு பந்தினைப் போல்
மேதகு நன்மைகள் வாகை சூடும்
சமன் குலையாத  மனம் பிளவுபடாது
மேம்பாடு இன்ப மரகதமாகும்.

மனமுடையும் நேரத்தில் மதுரச்சாரல்
கனமுடைத்துக் களிப்பை விசிறும்.
வனமுடைந்து வீழும் மழை போல
அனந்த சக்தி ஆளுமை விருத்தி
கனன்று விரிந்து கதிர் பரப்பும்.
தமிழ்  அருவியாகிட கொடுப்பனவு
வரமாகிறது   கரமிணைய மனமும் தேவை    
தரம் முன்னிலையில் வேண்டும்

;( மத மதவென- வலிமை,    மிகுதி,     அழகு
மதர்த்தல் - செழித்தல். அனந்தம் - அளவற்ற)

 19-2-2020

வேறு:-  

எழுதுகோல்

எழுதுகோல் ஒரு ஆயுதமே
எழுச்சியாளன் வலுக்கரத்தில்
விழுவது காதல் பூக்களானால்
எழுதுகோலொரு துப்பாக்கியோ!
எழுத்தாளன் பண்படுத்தும் உழவனானால்
எழுதுகோலொரு கலப்பையோ!
புவி சிறக்கத் தமிழ்த்தோப்பாக வருக
புகழோடு  புதிதாய்ப் புனிதமாக வருக

2010




புதன், 5 ஆகஸ்ட், 2020

291. (854 ) ஊடகம் -ஞானம் - புதுச் சொல்லைப் படிக்கலாமே!-




ஊடகம் -ஞானம் - மனமார்ந்த நன்றி ஞானம் இதழுக்கு

புதுச் சொல்லைப் படிக்கலாமே!-  

அறிவுச் சொல் அகழ்ந்து புது
அறிமுகச் சொல்லொன்று அவசியம்! இது
அறிவீனம் அல்ல அறிவு பெருக்கலே
அறிவுடன் ஆக்கத்தில் ஆர்வமாய் இணைத்தேன்

எல்லோரும் பாவிக்கும் எழுத்தின்றிப் புதியதாய்
நல்லதாக  விதைப்பதை உள் வாங்காது
பில்லி என்று உணர்ந்து புல்லறிவால்
தொல்லையென்று விளங்கினர் தொடர்ந்த பலர்

வார்த்தை விளையாட்டு, வரி எழுதல்
கேர்த்து மாலையாக்கல், கவி எழுதல்
வார்த்து வகிடெடுத்தலும் அறிவு உயர்வே
சேர்த்துச் சொல்லாடும் சதுரங்கமும் இதுவே!

பாவித்துப் பாவித்துப் பழகிய சொற்களின்
ஆவி பிடித்து அலுத்துக் களைப்பதிலும்
பூவிரிப்பது நலமென்று புதுச் சொல்லை
ஏவி விடுதல் இன்பமென்பேன் நான்.

என்று புதுச் சொற்கள் படிப்பீர்கள்!
நன்றா முப்பது சொற்களுள் வட்டமிடுதல்!

 14-8-2019








ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

290. (853 ) Radio...பொறாமை....






பொறாமை.... 

காற்றின் கட்டற்ற வேகம்
மழையின் வஞ்சகமற்ற பொழிவு
பயங்கர கரும் இருட்டு, 
காற்று மரங்களின் காதலால்
பொறாமைப்பட மாட்டேன் நான்.

மகிழ்வடையாதவனும், தன்னைப்பற்றிப் 
பெருமை கொள்ளாதவனும் தனது
வெற்றியைப் பெறாதவனுமே என்றும்'
பொறாமை கொள்ளுகிறான்  அறிவீர்.
சிறுமைக் குணமே பொறாமை

பல விடயங்களை அழிக்கும்
பொறாமையால் நற்கனவுகளும் தொலையும்.
காமம், ஆளுமைச் சிதைவடைபவர்
தாமும் பொறாமை கொள்கிறார்
பொறாமையொரு கறுப்புப் போர்வை.

ஒரு வானம் ஒரு பூமி
இரவு கூட இதை இணைப்பதில்லை
நான் யாரென்பதைப் பொறாமையால் எடுக்க முடியாது
எனது ஒளியை எவரும் திருட முடியாது.
அது மாயையின் ஆடை.

தசை,  நார்கள் இறைச்சியால்  
மூடப்பட்ட துணிச்சலானது பொறாமைப் போர்.
பிறரை முட்டாளாக்கும் மந்திரவாதியானது
பிறரை அச்சுறுத்தும் குணமுடைய து.
ஆனந்தமாக இருங்கள் பொறாமையழியும்.
ஆனந்தம் சொர்க்கத்தின் பறவை


 24-7-2020







428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...