ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

296. (859) Radio - என் மனதை வாசித்தேன்- மேலும் கட்டுகிறேன்.

 


என் மனதை வாசித்தேன்-  மேலும் கட்டுகிறேன்.


என்னுள்ளத்து அரசாட்சி, அதிகாரம்

என்னிடமே உள்ளதை நினைப்பதே

இன்கோலாம் செங்கோல்! தன்னம்பிக்கை.!

வன்செயல் அழுத்தத்தால் வெளியுலகம்

தன்சுயம் மாற்றும் செயலின்

தன்மையை நானுணர்ந்து துணிவதே

துன்பம் அழிக்கும் சக்தி!

இன்ப வாழ்வின் வெற்றி


உள்ளதையெழுதி இறகு விரித்து

உயரே  பறக்கும் எத்தனம்!

துயரம் நிறை மனமல்ல!

துறுதுறுத்த  சுறுசுறுப்பு மனம்!

அறுதியற்ற ஆழ்கடல் ஆழம்!

உறுதி பெறும் இயற்கையனுபவத்தில்!

இறுப்பூது கொண்டெழும் தமிழ்

இறுமாப்படைய வேண்டுவதே ஆர்வம்!.


ஏமாற்றும் சுனாமி எதிர்ப்படும் போது

ஏற்றமிகு வலிமை நங்கூரம்!

எதிர்ப்பை வெல்ல மனவலிமை,

விடாமுயற்றி, சுயவிழிப்புணர்வு துடுப்பு!

கட்டுப்பாடுடை   எண்ணம், செயல்

விட்டு    விடாது   வாசிக்கும்

அடடா! அழகிய புத்தகம்! இரண்டாம் பாகம்

கட்டுகிறேன் மேலும் அழகாக....


 7-8-2020





4 கருத்துகள்:

  1. 13 Comments ---2020

    Masilamani Benjamin
    வாழ்த்துக்கள்
    2020
    ஆண்டியூர் நிதன்
    வாழ்த்துகள்....
    2020
    Mariathas Gnanapragasam

    சுவர்ணா கௌரிபாலா
    வாழ்த்துக்கள்

    Karnan Sinnathamby
    வாழ்த்துகள்
    ·
    Vetha Langathilakam
    என் மனதை அழகாக வாசித்தீர்கள்
    மனமார்ந்த நன்றியும் மகிழ்வும் சௌந்தரி.--------------
    Ruban Shiva
    வாழ்த்துக்கள் அக்கா.
    · Reply · 1y
    கவிதா கவி
    அருமை வாழ்த்துக்கள் அக்கா

    Siva Sivanthini
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. Sarvi Kathirithambi
    உணர்வும் உண்மையும் நமபிக்கையின் தளம்....தத்துவார்த்த விவாதங்களில் கலந்து
    தன்னையே தான் ஆளும் பக்குவம்.....மிளிர்கிறது. வாழ்த்துக்கள் அக்கா

    Manjula Kulendranathan

    Sujatha Anton
    வாழ்க தமிழ்!!!!!

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு