நாமெதைக் கண்டு ஊன்றி நிலைப்பது
புலம்பெயர் வாழ்வு போர்க்
களம் புகும் வாழ்வு ஒரு
நிலம் பண்படுத்தி உழுது
நிதம் பாடுபட்டு அழுது
கல், மண், காற்று நீர்
புல் பசளை பணமெனப்
பல்வேறு அல்லல் தாண்டி
பலன் பெறும் உழவன் நிலை
நிறபேதம் இங்கு நம்மை
நிதம் கொல்லும் சமர் உண்மை
மொழி பேத முரண்பாடு
இழிவு தரும் பெரும் பாடு
ஏற்றத் தாழ்வு வர்க்கபேதம்
எந்நாளும் தர்க்க வாதம்.
உழவன் உவகையில் உரிமையுண்டு
உழைப்பின் பலனில் ஆனந்தமுண்டு
உரிமையற்ற நாட்டில் நாமெது கண்டு
ஊன்றி நிலைப்பது உல்லாசம் என்று
4-5-2002
(ரிஆர்ரி – வணக்கம் தமிழ் அலையிலும், சங்கமம் நிகழ்விலும் ஒலிபரப்பானது. )
புலம்பெயர் வாழ்வு போர்க்
பதிலளிநீக்குகளம் புகும் வாழ்வு
உண்மை உண்மை