வெள்ளி, 25 மார்ச், 2022

378. (911) புல்லறிவாளர்

 





புல்லறிவாளர்


கல்லு முள்ளுப் பாதையிலே

தில்லு முல்லு உலகிலே

அல்லும் பகலும் முயன்றாலும்

நெல்லுத் திருடும் குருவியாய்

அல்லாமை (தீயகுணம்) காட்டி வருத்துவார்

00

இல்லாக் குடியாகக் காரியமாக

நல்லதாக நடித்து உரசுவார்.

கல்லுளிமங்கனாக அருவருப்புடன்  உறவாடுவார்.

வல்லமையாய் பிடிவாதம் பிடிப்பார்.

வில்லத்தனமாய் மாயமாய் தாக்குவார்.

00

புல்லறிவாளருடன் (அறியாமை) என்றும் மறந்தும்

மல்லாட்டம் ( சண்டை) செய்தல் பழுது.

நல்லதும் பேசுதல் வழுது.

வல்லாளரென்ற பொல்லாங்கில் முடிந்து

உல்லாசம் தொலைத்தவர் பலர்.


வேதா. இலங்காதிலகம்   டென்மார்க் - 25-3-2022 



சனி, 12 மார்ச், 2022

377 (910) ஓவியம் - சிற்பம்

   


               




ஓவியம் - சிற்பம்

00 ( தண்ணிய – குளிர்மை. )

தொல்பழங்காலத்துக் கலைமரபு ஓவியம்.
தெளிக்கும் எண்ணங்கள் - மனக்கண்ணாடி.
திண்ணிய கற்பனைத்தேர் - கலையமுது
வண்ணக் கோட்டுக் கிறுக்கல்கள்
நுண்மை விரிப்புக் கற்பனை மழை
தண்ணிய சாய அப்பல்கள்
நண்ணும் நுண்ணிய கூர்மை
வண்ண வடிவக் கலையலங்காரம்.
00
கற்பனைக் கவின் பூவாணமிது
தென்றல் வரவின் நறுமண முன்றல்
உன்னத கருத்தியல் வெளிப்பாடு.
இன்சுவர் - மர - மட்பாண்ட – ஓவியம்.
இறகாக விரல்களசைய தயக்கமில்லா
உறவின் நாடி நரம்புச் செயற்பாடு.
பொறுமை சந்தேகமற்ற மெதுவான
பெறுமதி முன்னேற்றம் உயர்வாகும்.
________________
சிற்பம்

( வியனுலக – பரந்த உலகம். )

விசுவகர்மாவாம் சிற்பமரபினரது கலைத்தொழில்.
வியனுலகத் தொன்மை வரலாறு
விரிவாய் அறியும் வாயில்.
ஆத்ம தாகம் ஆதமதேடலின்
அருமை வடிகால்கள் கலைஞானம்.
அறுபத்துநான்கு மரபுடைய இந்துக்
கலைகளில் தலையாயது சிற்பக்கலை.
தெய்வச் சிற்பி மயன்.
00
சிற்பம் நான்கு வகைகளான
பிரதிமை – தெய்வம் - கற்பனை
இயற்கை உருவங்கள் - மெய்மறத்தல்
மரமோ கல்லென (திருமந்திர வரிகள் 2290)
;;'' மரத்தை மறைத்தது மாமதயானை
மரத்தில் மறைந்தது மாமதயானை ''
கலைநயத்துடன் கண்கவரும் பல்லவ
பாண்டிய சோழ சிற்பங்கள்.
00
(உள்ளார்ந்த ஆற்றலாக வெளிப்படும் கலைகளில் நுண்கலைகளாவன – கட்டிடக்கலை – சிற்பம் - ஓவியம் - இசை – நடனம் - நாடகம்.) சிற்பம் விக்கிரகவியல் கலையின் தாயூற்று.
இந்துக்கலை மெஞ்ஞானம் மிளிர்கின்ற மெய் சுடராய் விஞ்ஞானமாகி வியக்கும் விந்தையைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்கின்றனர்.

கலைமடியில் கண்மூடாப் படைப்புகள் தருபவர்கள் விசுவகர்மா சிற்ப மரபினர். உருவில் ஒரு புறம் காட்டுவது புடைப்பு சிற்பம்.
இங்கு நாம் காண்பது. முன்புற பின்புற உருக்காட்டுவது முழுவடிவச் சிற்பம். சிற்பக்கலை ஓவியப்புகழ் சாதனையாளர் மைக்கலேஞ்சலோ.

கவிச்சுடர் - வேதா. இலங்காதிலகம் -டென்மார்க் - 12-3-2022








428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...