வெள்ளி, 31 டிசம்பர், 2021

370. (943) புதுவருட 2022 வாழ்த்துகள்

 









புதுவருட  2022     வாழ்த்துகள்


உனக்கென்று கன்னற் தமிழ் தேடி
கணக்காகக் கவினுறக்  கலந்திணைத்து
கவித்தேனில் நனைத்தெழுதி இணைக்கும்
கருத்தான  புதுவருடம்  மலரட்டும்.
உருத்தான புதுவருட வாழ்த்துகள்
00
கூடல் தமிழால் இணைந்து திறமையில் 
பாடல் ஆடல் இன்னும் பல
தேடல் முயல்வாற் தலை நிமிர்ந்து
கோடலின்றி மானுடம் சுயகாலூன்றி
சூடட்டும் திறமையால் வெற்றி மாலை
00
வாடல்    வருந்துதல்   முற்றாய் மறந்து
நாடல்    உயர்வு   ஒன்றேயாகட்டும்
கேடலற்ற புதுவருடம் மலரட்டும்.
கோடலற்று ஆணும் பெண்ணும்
கூடி மகிழ்ந்து மாண்புற வாழட்டும்
00
வண்ண  மீன்களாய்  மண்ணிலே சுழலும்
கண்ணிற்குப்   புலப்படாத் திரைமறைவு வாழ்வின்
எண்ணற்ற  கோணல்கள்  நிமிரட்டும்! இன்பம்
விண்ணுயரும்   நம்பிக்கை பெருக விடியட்டும்
தண்ணளி வெண்ணிலவாகட்டும் புது வருடம்
00


கவித்தாமரை - வேதா. இலங்காதிலகம் - டென்மார்க் - 31-12-2021


ஞாயிறு, 5 டிசம்பர், 2021

369. (942) இமைக்கா நொடிகள்.

 




                             இமைக்கா நொடிகள்.



இமைக்கா   நொடிகள்    இமை     தாண்டி 

அமைவாய்   மலர்த்துமா!  எதிராய்   வருத்துமா!

குமைத்தலாக    இன்றிக்    குதூகலம்    தரட்டும்.

சமைக்கட்டும்   சித்திரமாய்!  இலகுவாய்   முத்தமீயட்டும்!

00

அமையட்டும்    அற்புதமாய்   அசையும்  கனவாய்.

சுமையற்ற    கணங்களாய்  சுழரட்டும்   வியப்புகள்!

தமை   வெளிப்படுத்தி    தண்மை     மொழியாய்

சமைவு      தரட்டும்   சரித்திரம்    ஆகட்டும்.

00

பகைக்காத  பதறாத  பரிவுடை   விநாடிகள்.

தொகையாகி   என்னைத்   தொந்தரவு   செய்யட்டும்

முகையவிழும்    மெல்லிய   முறுவலாய்  இன்பம்

வகையாகி   அவிழ்ந்து   வரையின்றி   நிறையட்டும்.

00

இமைக்கா   நொடி   இசைந்த காற்றை

இனிமை     நாதசுரத்துள்    இணைக்கட்டும். இசையாக

இசைத்     தமிழ்     இசைந்து     விரிக்கட்டும்

இசைப்   பயணம்   இடுக்கண்    களையட்டும்.

00

குருமணலின்  மென்மையாய்   குளுகுளு   காற்றும்

குளிர்ந்த   மழையாய்க்   குளிப்பாட்டட்டும்   என்னை

குறுஞ்சிரிப்பாய்க்    காதல்   குலவட்டும்   என்னோடு

குறளடிகள்   குவியட்டும்   குளுகுளுப்பாய்  முழுநொடியும்.

00


                       கவிமலை -வேதா- இலங்காதிலகம் - டென்மார்க் 5-12-2018.





 

திங்கள், 29 நவம்பர், 2021

368. ( 941) நேர்மை

 





                                            நேர்மை



நேராக உண்மையாக நடத்தல்

நேர்மை - அவனே நேர்மையானவன்

சீர்மிகு மானிட குணவியல்பு

சார்பான மனிதப் பண்பு

00

பார்வைக்கு இது தெரியாது

பேரெடுக்கலாம் வாழ்விலும் மறைவிலும்

தருவதைச் சமனாகச் சீர்தூக்கும்

தராசுக்கோல் என்பது நேர்மையாம்

00

யார் இவ்வழி தெரிவாரவர்

பேர் சொல்லிட வாழ்வார்.

சீர் பெறுவார் பாராட்டில்

ஊர்போற்ற வாழ்தல் உயர்வு

00

உண்மை நேர்மை  மனதின் 

வெண்மை,   ஒரு வகையில்

உண்மை இயற்கை நிலை

வெண்மை பலருக்கு ஒவ்வாமை

00

                 சாரல் குயில்  -  வேதா. இலங்காதிலகம் - டென்மார்க்  29-11-2021








ஞாயிறு, 21 நவம்பர், 2021

367. (940) கடப்பாடுடன் கடைத்தேற வேண்டாமோ!!!!!

 




கடப்பாடுடன் கடைத்தேற வேண்டாமோ!!!!!

00


தீர்க்க அறிவின் நுண்ணுனர்வின்

கோர்க்கும் அதிகாரம் கோணலாகும்

பார்க்கும் பார்வைத் தெளிவுடன் 

நீர்க்கும் விவாதங்கள் தகர்ந்திடும்.

00

வண்ணங்களாகட்டும் மன எண்ணங்கள்

திண்ணமாய் மாறும் தடுமாற்றம் நிலைமாற்றத்தால்

எதையும் மனங்கொண்டு ஏற்று 

எதிர்நிச்சலாடலாம் நல்லதை விதைத்து.

00

போதிமரம் ஆகலாம் பனுவல்

சோதியெழும்  கவி தவமாகலாம்

பாதியெழுதிய இதுவும் தவமாகுமோ!

பார்க்காது நீவிட்டால் அவமாகாது

00

தமிழீயும் போதை கவிதை

நிமிர்ந்திடும் மாருதமாயுன் பாதையில்

நருமதையாய்த் தொடர்!

பெருநிதியாய் வியாபிப்பாய் உயர்!

00

ஊரெல்லாம் ரீங்காரமிடுமோவென் கவிதை

ஊஞ்சலாடுமோ இறக்கை விரித்து!

ஏ! என்னைப் பாரென்று

ஊற்றுக்கண் திறக்குமோ ஊன்றுகோலாகுமோ!

00

கவிதையென்னுள் பூத்துக்கொண்டிருப்பது

உவிதலற்ற இன்பம் ஊர்தலாக

விதவிதமான சொற்பிழைகளால் வேதனை!

பவித்திரம் தமிழில் பழுதடையுதே!

00

எழுத்துப் பிழை எழுந்தால் 

கழுத்து இறுகுவதான கடுப்பு!

கடைத்தேற வேண்டாமோ கடப்பாடுடன்!

களிம்பேறாமல் மொழியைக் காப்பாற்றுங்கள்!

00

நிலாக்கவிஞர் - வேதா. இலங்காதிலகம் டென்மார்க் - 21-11-2021








வெள்ளி, 12 நவம்பர், 2021

366, (939) புது விழிவாசல்

 




புது விழிவாசல்

00


திருத்திய கண்களில் ஒளிக் கூச்சம்

பொருத்திய புதுவில்லையின் சக்தியது.

இருத்திய ஈரக்கணம் - ஒளடதம்.

அருத்தமானது  மூவேளைத் துளிகளால்

00

பார்வை மங்கல் பயணஈரத்தில்

பாங்குடன் சிறகுலர்த்தும் பறவையாய்

பாசுரமாய் ஆசுவாசமாய்  மைவிழியில்

வடம் பிடிக்கும் ரசனையின் உச்சம் (கண்கள்)

00

மனிதனை மனிதனாக மனிதனுக்கு

மதித்திடவும் தேவை கண்கள்.

ஓவியம் எழுத்து சிற்பத்திற்கு

ஆவி  ஈவது நயனம்.

00

குடித்தனமாகும் புது விழிவாசல்

படிப்படியாகப் பார்வைத் தெளிவு

அடியொற்றி மன  நிருத்தம்

விடிவெனும் மருத்துவ அதிசயமிது!

00

மெத்தெனச்  சிலிர்த்துச் செழித்த

புத்திறகு! கனவுகளின் தொடர்ச்சியிது

பொத்தெனும் மழைச்சிறகுகள் மனதுள்

புத்திளம் மலர்களை மலர்த்துகிறது.

00

எண்ணியாங்கு எழிலாய் வாழப்

புண்ணியம் சூனியப் போர்வையில்லை

கண்ணெனும் கவிதையாம் ஆகாயவீடு

கண் துடித்துயிர்க்கும் வேர் மானுடர்க்கு!

00

கவியருவி – வேதா. இலங்காதிலகம் 

டென்மார்க்   5-11-2021








ஞாயிறு, 31 அக்டோபர், 2021

365. (938) கண்கள்

 






கண்கள்

00
சொற்கள் இல்லை அற்புத நாதமில்லை
பொற்பதமாய்க் காண்பதை நற்பதமாய் இரசிக்கும்.
பழுதற்ற காதலையும் எழுதும் கண்கள்
பார்க்கும் - சிரிக்கும் - பேசும் கண்கள்
00
அதிசய உறுப்பால்  இரவுப் பார்வையுண்டு
அதிசயம் விலங்குகளிற்கு அதிக சக்தியமைந்தது
கண்கள் பார்வையால் எண்ணம் உணரலாம்
கண்கள் மீன்களாகக்  கற்பனையில் மலருமாகிறது
00
தென்றலில் மயங்கும் கண்களின்
எடை ஏழு புள்ளி  ஐந்து கிராம்
கட்டிப் போடும் அச்சுறுத்தும்
பொக்கிசமாகப் பாதுகாக்கலாம்
00
தண்மைப் பனித்துளி கண்கள்
கண்ணுக்குக் கண்ணோக்கிக் கருத்திட்டால்
உண்மையின் அளவீடு தெரியும்
கண்ணாடியாய் மனதைக் காட்டும்
00
இளமைக்கு விருந்தாகும் மருந்தாகும் கண்கள்
களமான பள்ளியாகும் பார்வை விருந்து
அம்சுடர் நெடுவேல் - மானின் விழி
மனித இச்சைகளைப் பார்வை தீர்க்கிறது
00
கண்கள் ஓவியம் காவியம் வரையும்
கண்ணுக்கு விருந்து கள்ளப் பார்வை
கண்புரை முதுமையில் கடின தொல்லை
கருத்தாயுதவும் கணிக்கும் அறுவை சிகிச்சை
00
செந்தணல் கவி -  வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்  28-10-2021







வெள்ளி, 15 அக்டோபர், 2021

364. (937) வான் புலம் வளர்க்கலாம்

 





வான் புலம் வளர்க்கலாம்


(வான் புலம் - உண்மையறிவு)

00

வள்ளல்   தன்மையாய்

வடிவாகச் சமைத்தலும்

வள்ளிசாக அலங்கரித்தலும்

வாழ்வு   அல்ல!

வான் புலம் வளர்க்கலாம்!

00

வரம்பின்றி  அறிவு

வசீகரித்தலும்  மொழிசார்ந்த

வல்லமைத்   தகைமையும்

விசுவருபமாய்   வளர்த்தெடுத்தலும்

வழுதலற்ற விதைப்பாகட்டும்

00

உள்ளாடும் அறிவை

உயர்த்து!  உக்கும்   உடல்

உள்ளதைச் சொன்னால்

உள்ளம் வலிப்பதேன்!

உயிர்ப்பாகுமறிவு  உச்சாணிக்கேற்றும்!

00

கவியருவி  வேதா. இலங்காதிலகம் - டென்மார்க் 15-10-2021.









செவ்வாய், 5 அக்டோபர், 2021

363. (936) (ஊடகம் . மனிதர்கள்.)

 







-(இலங்கை   சஞ்சிகை ஜீவநதி  யில்.  ஜீவநதிக்கு  மிக்க நன்றி  22-3-2021)


மனிதர்கள். -

00


மனிதர்கள் மனம் கடல்

புனித  குணவிரிப்பில் அசுத்தங்களை

வனிதமாகச் சுத்திகரிக்காது அதனுள்

விழுந்து அழிகின்றனர் சிலர்

அறிவோசைi அன்போசையை நிதம்

குறியாக அத்திவாரமாக்கும் பெற்றவர்.

பொறியாகி அனுபவங்கள் பொசுக்கியும்

தறித்தும் வீழ்த்தப் பார்க்கிறது. எம்மை.

00

பொல்லாத் துரோகங்களும்  அவமானங்களும்

வல்லமையாய் ஏமாற்றித் துகிலுரிய

செல்லாது இது என்னிடமென்று

நல்ல அத்திவாரத்தை உணர்ந்து வாழ்!

வேடிக்கை மனிதராக இன்றி

வாடி வீழாது---------இரக்கம்     

கூடிய அன்பு கருணையோடு

தேடித் தலைவனாகு! தெய்வமாவாய்!

00

வள்ளலாகித் தியாகி ஆகு!

எள்ளலற்ற வாழ்வை நோக்கு!

கொள்முதலான பகுத்தறிவை வளர்த்து

குள்ளமனமற்ற பேரறிவாளன் ஆகு!

மனிதநேயம் நிறைந்தவன் மனிதன்.

மனிதம் எங்கே தேடுகிறோம்.

மனிதம் பாதி மிருகம் முழுவதுமாய்

புனிதம் கெட்ட  மனதர்களாகிறாரே   இன்று.

00


  6-11-2020





வெள்ளி, 1 அக்டோபர், 2021

362. (935) விரலோவியம்.

 





விரலோவியம்.
00

அபிநயமும் ஓருவகை விரலோவியம்
அற்புத நான்கு பிரிவுகளாய்
ஆகார்ய, வாசிக, ஆங்கிக, சாத்வீகமாய்
கருத்தை உணர்வை கலையாக்குதல்.
விரலோவியம் (கைமுத்திரை) நாட்டியத்தில் முதன்மை.
00
ஓவியம் விரலோவியக் கவின்கலை
ஆவியுருகப் பாளை விரியும் வனப்பு
தாவி மனமீடுபடும் கலை
நீவுதலால் (பூசுதலால்) கருத்து நிறப்பூச்சால் வெளிப்பாடு
ஆவணமாகியது மோனலிசா ஓவியமும்.
00
கனவுகளின் கூடாரமாக நர்த்தனமிடும்
தினவெடுக்கும் விரல்கள் அர்த்தமுடனசைந்து
ஆனந்த விருந்திடும் விரலோவியம்.
ஆனந்தித்து அப்பும் குழந்தைக் கிறுக்கலும்
ஆனந்தபரவசம் வண்ணக் கலவையால்
00
புள்ளியிட்டுக் கோலமிடுதல் மனம்
அள்ளும் வல்லவொரு விரலோவியம்.
கொள்ளையிடும் கவிதைக்குப் பெயரென்ன!
தள்ளமுடியாத விரலோவியம் அன்றோ!
தையல் பின்னலென எத்தனை எத்தனை!
00
19-2.2020






செவ்வாய், 28 செப்டம்பர், 2021

361. (934) எவரின் வழிகாட்டல்!...

 





எவரின்  வழிகாட்டல்!...

00


மகிழ்ந்து  கால்களை மாற்றி மாற்றி

மடக்கியுதைத்து நீட்டுதல் மரபுவழியோ!

மதர்ப்புடன் கைகளையும் மதியூகமாய்

மதுரமாய் நீட்டி மதிநுட்பமான

மடக்கலில் விரல்கள் முகருதலாகி

மதனபானமாய்ச்; சுவைத்து மிடுக்குடன்

மாறாட்டமின்றிச்  சூப்பி   மகிழ்ந்தது 

மங்கலமாய்க் கொழுகொழு மழலை

00

எவரின் வழிகாட்டலின்றி எட்டியது

எல்லையற்ற எடுப்பான வினைவண்ணம்.

எதிர் காலத்தில் எதார்த்தமாக

எதிர் காற்றை எளிதாய்

எதிர் கொள்ளும் எமகாதகமோ!

எத்துணையானாலும் சுயமுயற்சி என்றும்

எல்லையற்ற சுயாதிபதி ஆக்கும்

எள்ளலற்றது எழிலன் ஆக்கட்டும்

00

உன் ஓயாத உற்சாகம்

உன் வியக்கும் உந்துதல்

என்னவொரு சுய விளையூக்கம்!

ஊன்னதமாயுலகைத் தனியே  அளக்கும்

உன்னுதல் முதற்படி ஆராரோ!

பின்னின்று உதவுங்கள் பெற்றோரே! 

என்றும் சார்பாய் இருத்தலே

வென்றிட வலியின்றி வளர்த்தல்

00

(மதர்ப்புடன் - அழகு.  மதுரமாய் - இனிமை.)

00

நாவலர் (விருது) வேதா. இலங்காதிலகம்  

டென்மார்க். 15-9-2021.










திங்கள், 20 செப்டம்பர், 2021

360 - (933) மதி - விதி - சதி

 






                                         மதி  - விதி - சதி

                                                        00


மதியின் எண்ணத்தைத்  துதித்து நட!

மிதித்து நடக்காது மிகுதியைக் கட!

மதிநுட்பத் தடம் மகிமையாய்ப் பதித்திடு!

முதிர்ந்த ஞானத்தின் முடிவு எடுபடும்

மதி  சதியை  மோதி வென்றிடும்.

00

விதியிலிருந்து விலக்காக விதிமுறை உண்டோ!

மதியும் ஒரு நேரம் மாயமாவதுண்டோ!

கதியற்றோர்  விதிவசமாய் குலைவதும் உண்டோ!

சதிகாரரால் வாழ்வு சதிராட்டமும் கண்டிடுமோ!

நதியோடும் நிலையாக  வாழ்வோரும் உண்டே!

00

சதி பதியாய் விதியென வாழ்வது

கதி என்ற காலம் அன்றையது

மதியால் காலத்தில் முதிர்ந்த அன்பது

நதியாய்   ஓடிட நளினமாய் வாழ்வது

நிதியாய்க்  குடும்பம் நிறுவுவது மதிநுட்பமானது

00

கவிஞர் திலகம் - வேதா. இலங்காதிலகம்

டென்மார்க் - 19-9-2021







வெள்ளி, 10 செப்டம்பர், 2021

359. (922) ( ஊடகம் ) கதவுகள் எத்தனை!!!!

 








இலங்கை சஞ்சிகை  புரட்டாதி இதழில் -  ஞானம் -

பிரசுரமானது

மிக்க நன்றி

00





கதவுகள் எத்தனை!!!!  


மூடிய கதவு திறப்போடு

கோடி நிம்மதி கொள்ளும்

பாடிடும் மனம் பாதுகாப்பாய்

கேடிகள் உலவும் கோளமிது.

ஓன்றல்ல பல கதவுகளின்றி

முன்னோர் வாழ்ந்தனர் அன்று

இன்பக் கதவு திறந்திருந்தால்

துன்பக் காற்றுத் தாரமாகும்.

00

மனக்கதவு நல்லெண்ணங்களால் ஆகினால்

கனமான வாழ்வு இலேசாகும்

சினமும் தொலைந்திடும்  நல்ல

சிரிப்புடை பூங்கா ஆகிடும்

ஊக்கும் மணியொலிக்கும் கதவு

தேக்கு மரக் கதவு

நோக்கும் இமைக்கதவு

தாக்கும் மௌனக் கதவு

00

கதவு மூடியது பிரிவால்

மெதுவாய்த் திறந்தது உறவால்

கதவினாற்தான் உள்ளே வெளியே

உதவியது இலக்கம் உன்னைக்காண

கதவற்றது திறந்த புவனம்

திறவுகோல் தொலைந்து விட்டது

கதவு திறக்க முடியவில்லை

உதவியற்றிடில் கதவை உடைக்கலாம்

00

வானக் கதவு திறப்பதாலோ

சோனா மாரி பெய்கிறது!

பூமிக் கதவு திறப்பதாலா

பூமிப் பிளவு வருவது!

மனக்கதவு திறக்கும் இயல்பறிவு

எனக்கான யன்னல் கதவும்

என்றும் குடையாக மூடிவிரியும்.

இயற்கைக் கதவைத் திறவுங்கள்.

00

 25-5-2021







சனி, 28 ஆகஸ்ட், 2021

358. ( 921) ரோஜா முள்

 




ரோஜா முள்


சுந்தர வண்ண  இதழ்களால்

சுகந்த மணம் கொண்டு

மந்திரமாய் மனம் கவரும்

ரோஜாவைச் சுற்றியேன் முள் வந்தது!

பழகும் என்னருமைக் காதலியைச்

சுற்றும் அப்பாவைப் போலவா!


அழகிற்கு ஆபத்தும் இணைந்ததை

அழகாய் அருத்தமாய்க் காட்டுகிறதோ!


முட்கள் ரோஜாவிற்குக் காவலானால்

முள்ளில்லா மலர்களுக்கெது காவல்!

காவலில்லா மலர்களுக்கும் ஒரு கம்பீரம் உண்டல்லவோ!


குருவியும் ரோஜா முள்ளிற்குள்

ஒரு கூடு கட்டாது

தோட்டத்து விதைப்  பாத்திகளைக்

கோழி கிளறாது பாதுகாக்கும்

ரோஜாமுள் கவட்டைகள் நல்ல

காவலராகப் பாத்திமேல்  வலையாகும்.

 

(சிஐரிவியில்  கவிதையே தெரியுமா நிகழ்வில்  30-6-2006-ல்

என்னால் வாசிக்கப்பட்டது.)-------


28-8-2021





புதன், 25 ஆகஸ்ட், 2021

357. ( 920) உன்னத உணர்வு ----- எதிர்பாராத மழை

 


உன்னத உணர்வு ----- எதிர்பாராத மழை


ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆக்கங்களையும் மிகுந்த தேடுதலுடன் தான் எழுதி முடிக்கின்றனர்.  செய்து முடிக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை நான் இங்கு பார்க்கும் ஆக்கங்கள் கவிதைகள் - குடும்ப நிகழ்வுகள் ( திருமணம்-பிறந்தநாள்-மரணம்) உட்பட என்னால் முடிந்தளவு கருத்துகளிடுவேன். 

முடிந்தவரை இன்தமிழோடு பயணிக்கும் ஆசை. ஆக்கம் ஏற்றிய மனதின் உணர்தல் ஆனந்தமாகவே உணரப்படும.; மேன்மை உயர்வான அந்த உணர்வால் கருத்து நிறைந்த மனதில் திருப்தி வழியும்.

பலர் எனது இணையத் தளத்திற்கு வருவதேயில்லை. அவர்கள் மின்னஞ்சல் மட்டும் வந்தபடியே இருக்கும் தமக்கு இணையத்தளத்தில் கருத்திடுமாறு. நான் அவர்களுக்குக் கருத்துக்கேட்டு மின்னஞ்சல் அனுப்புவதில்லை. விரும்பினால் அவர்கள் வரலாம்.

பலர் முகப்புத்தகம் விட்டு விலகி வாட்;ஸ் அப்--இன்ஸ்ரகிறாம் என்று உலவுகின்றனர் - பருவமாற்றம் - பழகும் மாற்றம் என்றாக. அது அவரவர் விருப்பம்.

உறவு தேடியவர்கள்  ஒதுங்குவதாக – வாழ்வு முறையே மாறுவதாக கொறோனா வந்த மாதிரி அனைத்தும் மாறுகிறது. 

விசித்திர உலகம். மெய்யாகத் தெரிந்தது எல்லாம் பொய்யாக மாறும் காலம். கலகலச் சிரிப்பு மௌனமாகிறது ஆயினும் அன்பு ஒரு கைத்தடி தான்.

கருத்துகள் வாழ்த்துகள் ஒரு நதி போலத் தான். வளைந்து இறுக்கமாகியும் நீண்டு  வேகமாகியும் அசையும். நிறங்களும் கொடுக்கும். 

அநாதையாகும் பொன் பூத்த கவிதைகளும் உண்டு.  கருத்;திடக் கூட்டங்களும் உண்டு.  நற்குணமாய் நயந்து நல்வாழ்த்தும் நவில்வாருமுண்டு. நிற்கதியாய்க் கவிதை நிற்காமலும் போவதுமுண்டு. கற்றவர்கள் கருத்துச் சாமரத்தால் கலையரங்கமாயும் குற்றமின்றியும் விசிறுவார்கள். கற்ற  பெருமையது. பற்பலவாய்ப் பாராட்டும் பாராமுகமும் பெருமையான கைமாறாய்ப் பேறு கொள்வார் பலரும். கருத்தின்றேல் தமிழ் சாகாது.

ஊக்கமளிக்கும் பேச்சும் - செயலும் வரமே. முயற்சியே முன்னேற இடம் தரும்.  நல்ல அன்புச் சங்கமமே ஊக்கமளிக்கும் சிரஞ்சீவி அமிர்தம்.

நன்கு புரிந்தவர்கள் நட்பில் நிறைவு உண்டு.  புரியாதவர்கள் நட்பு நாடகம் தான்.;  எதிர்பாராத மழை தான் நட்பின் மன விரிப்பும்.

  24-8-2021






திங்கள், 23 ஆகஸ்ட், 2021

356. (919) அது தான் அம்மா

 





அது தான் அம்மா

00

தென்னையளவு கிணறு ஆழம்

என் தலை சுற்றியது

கிணற்றில் நிலா பளிங்காக

திணறவைத்தது தொடமுடியாது! அதுதான் அம்மா

00

ஆகாய நட்சத்திரங்களை எண்ணி

அம்மா மடியில் துயில வேண்டும்

அதிகாலை துயில் நீங்கிட

அம்மா கைத் தேநீர் வெண்டும்

00

ஆசை வரிகளிவை ஏக்கத்தில்

அம்மாவை கனவில் கண்டால்

ஆருயிர் அமைதியுறும் 

ஆகக் கூடிய சிறந்த வழி

00

இலண்டன் தமிழ் வானொலியில் காலைத் தென்றலில் சகோதரி சாயிபா பாடியது.இஇஇஇஇஇ6-6-2004


(மாலைத் தென்றல் நீயெனக்கு

மயக்கும் முல்லை நீயெனக்கு

மந்திரமொழி நீயெனக்கு

யந்திரக் காப்பு நீயெனக்கு

0;0

உயிரோடிவை மொழிந்திட

உணர்வாயுன்னை அணைத்திட

உணர்ந்திட உருவமாய் நீயில்லை

உறைந்துள்ளாய்  அம்மா என்னுள்ளே

00

காலம் கடந்த ஞானம் தான்

சீலம் உலகிற்குத் தரட்டுமே தூண் 

ஆலம்; விழுதான தாய்ப் பாசத்தேன்

ஞாலம் முழுதும் பரவட்டுமே

00

நெஞ்சில் நிறைந்தவள் நீ

நினைவில் கலந்தவள் நீ

கொஞ்சும் நெஞ்சினள் நீ

பஞ்சாக எனை;னை ஏந்தியவள்)


16.8.2021






வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

355. (918) உற்சாகச் சாரல்!

 





உற்சாகச் சாரல்!

00

விசிறிக்  கொண்டே யிருக்கும்

உற்சாகச் சாரலுக்குள் ஆனந்த

இசைக்குழல் சாரம் சேர்க்கிறது

இதுவே மனமுருகும் நேரமென்பது

00

பொங்கும் மாதங்கமாய் வற்றுவதேயில்லை.

நேர்மைப் பாய்விரித்துத் தூங்குபவன்

மானிடநேயம் கர்வம் கொள்ளும்

புன்னகைத் தேசமழிவதைத் தாங்குவானா!

00

ஆதிநிலத்து ஆளுமையை விருத்தி செய்!

எமுத்தென்பது ராஐபுரவிப் பயணம்.

சோதிசுடரிட மனப் புரவியில் ஏறு!

தேதியின்றி விழிக் கதவை மெல்லத் திற!

00

 13-8-2021







428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...