ரோஜா முள்
சுந்தர வண்ண இதழ்களால்
சுகந்த மணம் கொண்டு
மந்திரமாய் மனம் கவரும்
ரோஜாவைச் சுற்றியேன் முள் வந்தது!
பழகும் என்னருமைக் காதலியைச்
சுற்றும் அப்பாவைப் போலவா!
அழகிற்கு ஆபத்தும் இணைந்ததை
அழகாய் அருத்தமாய்க் காட்டுகிறதோ!
முட்கள் ரோஜாவிற்குக் காவலானால்
முள்ளில்லா மலர்களுக்கெது காவல்!
காவலில்லா மலர்களுக்கும் ஒரு கம்பீரம் உண்டல்லவோ!
குருவியும் ரோஜா முள்ளிற்குள்
ஒரு கூடு கட்டாது
தோட்டத்து விதைப் பாத்திகளைக்
கோழி கிளறாது பாதுகாக்கும்
ரோஜாமுள் கவட்டைகள் நல்ல
காவலராகப் பாத்திமேல் வலையாகும்.
(சிஐரிவியில் கவிதையே தெரியுமா நிகழ்வில் 30-6-2006-ல்
என்னால் வாசிக்கப்பட்டது.)-------
28-8-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக