வெள்ளி, 10 செப்டம்பர், 2021

359. (922) ( ஊடகம் ) கதவுகள் எத்தனை!!!!

 








இலங்கை சஞ்சிகை  புரட்டாதி இதழில் -  ஞானம் -

பிரசுரமானது

மிக்க நன்றி

00





கதவுகள் எத்தனை!!!!  


மூடிய கதவு திறப்போடு

கோடி நிம்மதி கொள்ளும்

பாடிடும் மனம் பாதுகாப்பாய்

கேடிகள் உலவும் கோளமிது.

ஓன்றல்ல பல கதவுகளின்றி

முன்னோர் வாழ்ந்தனர் அன்று

இன்பக் கதவு திறந்திருந்தால்

துன்பக் காற்றுத் தாரமாகும்.

00

மனக்கதவு நல்லெண்ணங்களால் ஆகினால்

கனமான வாழ்வு இலேசாகும்

சினமும் தொலைந்திடும்  நல்ல

சிரிப்புடை பூங்கா ஆகிடும்

ஊக்கும் மணியொலிக்கும் கதவு

தேக்கு மரக் கதவு

நோக்கும் இமைக்கதவு

தாக்கும் மௌனக் கதவு

00

கதவு மூடியது பிரிவால்

மெதுவாய்த் திறந்தது உறவால்

கதவினாற்தான் உள்ளே வெளியே

உதவியது இலக்கம் உன்னைக்காண

கதவற்றது திறந்த புவனம்

திறவுகோல் தொலைந்து விட்டது

கதவு திறக்க முடியவில்லை

உதவியற்றிடில் கதவை உடைக்கலாம்

00

வானக் கதவு திறப்பதாலோ

சோனா மாரி பெய்கிறது!

பூமிக் கதவு திறப்பதாலா

பூமிப் பிளவு வருவது!

மனக்கதவு திறக்கும் இயல்பறிவு

எனக்கான யன்னல் கதவும்

என்றும் குடையாக மூடிவிரியும்.

இயற்கைக் கதவைத் திறவுங்கள்.

00

 25-5-2021







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு