திங்கள், 20 செப்டம்பர், 2021

360 - (933) மதி - விதி - சதி

 






                                         மதி  - விதி - சதி

                                                        00


மதியின் எண்ணத்தைத்  துதித்து நட!

மிதித்து நடக்காது மிகுதியைக் கட!

மதிநுட்பத் தடம் மகிமையாய்ப் பதித்திடு!

முதிர்ந்த ஞானத்தின் முடிவு எடுபடும்

மதி  சதியை  மோதி வென்றிடும்.

00

விதியிலிருந்து விலக்காக விதிமுறை உண்டோ!

மதியும் ஒரு நேரம் மாயமாவதுண்டோ!

கதியற்றோர்  விதிவசமாய் குலைவதும் உண்டோ!

சதிகாரரால் வாழ்வு சதிராட்டமும் கண்டிடுமோ!

நதியோடும் நிலையாக  வாழ்வோரும் உண்டே!

00

சதி பதியாய் விதியென வாழ்வது

கதி என்ற காலம் அன்றையது

மதியால் காலத்தில் முதிர்ந்த அன்பது

நதியாய்   ஓடிட நளினமாய் வாழ்வது

நிதியாய்க்  குடும்பம் நிறுவுவது மதிநுட்பமானது

00

கவிஞர் திலகம் - வேதா. இலங்காதிலகம்

டென்மார்க் - 19-9-2021







2 கருத்துகள்:

  1. Sarala Vimalarajah
    அழகு அருமை அக்கா
    21-9-2021
    Vetha Langathilakam
    Sarala Vimalarajah Mikka nanry

    பதிலளிநீக்கு
  2. Shanthy Bala
    சதி பதியாய் விதியென
    வாழ்வது
    கதி என்ற காலம்
    அன்றையது
    மதியால் காலத்தில்
    முதிர்ந்த அன்பது
    நதியாய் ஓடிட நளினமாய்
    வாழ்வது
    நிதியாய்க் குடும்பம்
    நிறுவுவது மதிநுட்பமானது..
    மிக அருமை..
    வாழ்த்துகள் அக்கா.
    23-9-2021
    Vetha Langathilakam
    Shanthy Bala peranpudan nanry

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...