திங்கள், 7 பிப்ரவரி, 2022

376. (909) ஓயாத கூழாங்கல்

 





ஓயாத கூழாங்கல்


கலையாத கும்மியால்

மலையின் மௌனத்தில்

தலையிடுகிறது கூழாங்கல்.

00

விலையற்ற நியாயத்தின்

தலையீடு சொற்போர்.

சொல்லாடல் இன்றியமையாத

நல்ல பாரம்பரியம்

சொல்லின் தந்திரம்

வெல்லும் நுட்பம்

நல் மொழிவிருட்சம்.

00

சொல் எரிவதனாலே

இல்லறம் பிரிவறமாகிறது.

00

மாசற்ற நெஞ்;சுடன்

பேசுற்ற பொழுது

தூசற்ற இலக்கியம்

தேசுற்ற மேன்மையாகும்

00

அடர் இரவு

இடரற்ற துயில்

சுடர் பகலாகும்

00

காலையில் நிமிர்ந்தாலும்

மாலையில் கவிழ்ந்தாலும்

மூலையில் இருந்தாலும்

சோலை வாசனையாயீர்க்கும்

மாலையாகும் மலர்.

00

கவிதைப்பெருஞ்சுடர்  அருஞ்சுடர்

குவிக்குமென் விரல்கள் மூலதனம்

பாவிதையான எனக்கான ஒளி

குவியட்டும் கவிதை வானில்


வேதா. இலங்காதிலகம் - டென்மார்க் 7-2-2022






வியாழன், 3 பிப்ரவரி, 2022

375. (908) சிந்தைக் கலக்கம்

 





சிந்தைக் கலக்கம்

00


சித்தம் கலங்கி

மொத்தம் சாந்தியிழந்தால்

பத்தும் புரியாது

பரமபதமும் தெரியாது.

சில்லிட்ட மூளையால்

சில்லறைத்தனமே சிறப்பாகும்

சினமே சிவாயநமவென

சிதறுவாய் வையகத்தில்.

00

அழகுத் தோற்றமும்

அற்புதச் சிந்தனையும்

அவலட்சணமாய் உருமாறும்.

அச்சமும் தயக்கமும்

அடிமை கொள்ளும்

அறிவும் இலக்கியமும்

அகம் ஏற்காது 

அஞ்ஞாத வாசமாகும்

00

அடுத்தவர் அமைதியால்

அளவிலா மகிழ்வால்

அக்கினி எழுமுள்ளத்தில்

அகோர திட்டங்கள்

அளவின்றி வளரும்

அன்புமொழி   அழியும்

அணைக்கும் பொறாமை

அமைதி அழியும்.

00

வேதா. இலங்காதிலகம் - டென்மார்க் 2019.










428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...