திங்கள், 7 பிப்ரவரி, 2022

376. (909) ஓயாத கூழாங்கல்

 





ஓயாத கூழாங்கல்


கலையாத கும்மியால்

மலையின் மௌனத்தில்

தலையிடுகிறது கூழாங்கல்.

00

விலையற்ற நியாயத்தின்

தலையீடு சொற்போர்.

சொல்லாடல் இன்றியமையாத

நல்ல பாரம்பரியம்

சொல்லின் தந்திரம்

வெல்லும் நுட்பம்

நல் மொழிவிருட்சம்.

00

சொல் எரிவதனாலே

இல்லறம் பிரிவறமாகிறது.

00

மாசற்ற நெஞ்;சுடன்

பேசுற்ற பொழுது

தூசற்ற இலக்கியம்

தேசுற்ற மேன்மையாகும்

00

அடர் இரவு

இடரற்ற துயில்

சுடர் பகலாகும்

00

காலையில் நிமிர்ந்தாலும்

மாலையில் கவிழ்ந்தாலும்

மூலையில் இருந்தாலும்

சோலை வாசனையாயீர்க்கும்

மாலையாகும் மலர்.

00

கவிதைப்பெருஞ்சுடர்  அருஞ்சுடர்

குவிக்குமென் விரல்கள் மூலதனம்

பாவிதையான எனக்கான ஒளி

குவியட்டும் கவிதை வானில்


வேதா. இலங்காதிலகம் - டென்மார்க் 7-2-2022






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு