புதன், 11 மார்ச், 2020

265. (828 ) நேர்படப் பேசு







நேர்படப் பேசு

கூர்மையாக நீதிவழியாகக் கூறுங்கள்
ஆர்வமுடை வரிகளைத் தினம்
நேர்பட வீசுங்கள் நல் விதையை
ஊர்ப்பிள்ளைகள் விருத்தி உளவியலுக்காக

ஓளவையின் ஆத்திசூடி, கொன்றை வேந்தன்
பையப்பைய மூதுரை நல்வழியும்
தைரியம் நேர்மை வண்ணங்களை
வைரமாய் மனதில் உருவாக்கும்.

திருக்குறள் கலப்பையால் மனதைத்
திரு பெற உழுவதால் பாலைமனம்
திருந்தி சோலைவனமாகும் நல் விளைச்சலால்.
திருமை பெறுகிறது செந்தமிழாக

பாரதியார் வந்தார் பாநூறெனப்பாடி
சாரதியானார் தமிழ்வீதியில் செருக்காக
ஊரதிர இன்பத் தமிழ்த்தேன் சிந்தினார்.
நிமிர்ந்து நில் நேர்படப் பேசென்றார்.

தமிழ்வானம் சிறக்கநாமெல்லாம்
அமிழ்தினும் இனிய தமிழால்
அகிலம் எங்கும் சிறகடிக்கிறோம்
பேசுங்கள் தமிழைப்பாடிப் பறவையாகுங்கள்.

 3-1-2020

நேர்படப் பேசு magzie from India....my poem












வெள்ளி, 6 மார்ச், 2020

264. (827 ) கலாச்சார பொங்கல் விழா






கலாச்சார பொங்கல் விழா    feb.1st 2020
5ம் வகுப்பில் 9வயது  ஸ்கொலர்சிப் பரீட்சையில் சித்தியடைந்து 
6ம் வகுப்பில் 10 வயதில்  ஸ்ரான்லி மத்திய மகாவித்தியாலயம் 
விடுதிக்குச் சென்றேன்.
அதற்கு முதலே கல்கி வாரமஞ்சரி  குறிஞ்சிமலர் கதையெல்லாம் படிக்க ஆரம்பித்துவிட்டேன்.
அம்புலிமாமா. -

 சித்திரக்குள்ளன் கதை,  

கல்கண்டுலேனா தமிழ்வாணனது என்று.   இவைகள் நினைவுக்கு ஏன்   வந்தது என்றால்..முதலாம் திகதி  மாசி மாதம்   
எங்கள் நகரில் கலாச்சார  குழுவினர் பொங்கல் விழா நடந்தது.  
பொங்கல் பற்றி பேசக் கேட்டார்கள் பேசினேன்.

இது முடிய எனது இறுதியாக வெளியிட்ட எனது 2 நூல்களை அறிமுகம் செய்தேன்.
என்ன ஆச்சரியம் கொண்டு போன புத்தகங்கள்    மளமளவென   விற்றுத் தீர்ந்து   விட்டன.  மிகப் பெரிய மகிழ்வு.    ஓகுஸ் மக்கள் இவ்வளவு வாசிப்புத் திறனுடையவர்கள்   என்பதில் மனம் நிறைந்தது. 

எல்லோருக்கும் நிறை நன்றிகள்.




செவ்வாய், 3 மார்ச், 2020

263. (826 ) அது பாரும் பொற்காலம்.













அது பாரும் பொற்காலம்.

மொட்டு மலரான பட்டுக் குழந்தைக் காலம்.
சிட்டுக் குருவியாய்ச்  சிறகடித்த சிற்றாடைக் காலம்.
கட்டின்றி பெற்றோருடன் மகிழ்ந்த பண்டிகைக் காலம்.
விட்டுவிடாது கண்டு களித்து ரசித்த சுற்றலாக் காலம்.
ஒட்டுறவான தாய்மண் வாச இன்பக்காலம்.
எட்ட இருந்து ஏங்குகிறோம் அது பாரும் பொற்காலம்.

பெற்ற பிள்ளைகள் குழந்தைகளாகத் தவழ்ந்த காலம்.
கற்ற கல்வியின் பயனாய்க்  காய்கனிகள் பெறும் காலம்.
பெற்றவர் மனங்குளிரப் பிள்ளைகள்பெயர் பொறிக்கும் காலம்.
மற்றவரைக்  குறிவைக்கும் ஆயுதங்கள் அழியும் காலம்
வெற்றி பெற மனிதநேயம் துளிர்த்து மரமாகும் காலம்
கொற்றமிக தாய்நில  விடுதலையோடிவை பாரும் பொற்காலம்.

9-11-2004.
(இலண்டன் தமிழ் வானொலி வியாழன் கவிதை.







262 . (825 ) அப்பப்பா இது விந்தையப்பா










அப்பப்பா இது விந்தையப்பா

கேளப்பா பல விந்தையப்பா
புலம் பெயர்ந்த சந்தையிலப்பா
உயிருக்குப் பயந்து புலம் பெயர்ந்து 
இங்கு பயிரிடுவது பணமப்பா
பசிதூக்கமின்றிப் பணம் பணமென்று
பைத்தியமாய் அலைவது விந்தையப்பா.

ஒருவன் சம்பளம் பெற்றப்பா
ஐந்து சீட்டுக்கட்டுவது விந்தையப்பா
உலக ராக்பெல்லர் ஆகவப்பா
பலருக்கு ஆசையிங்கு விந்தையப்பா.
மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை
மினுமினுக்கும் தங்க வளையல் விந்தையப்பா.

பழசுகள் மறந்து பவிசிலப்பா
நடக்கும் பரிதாபங்கள் விந்தையப்பா
சின்னஞ்சிறிசுகளின் அபார மூளை
இளசுகளுக்கு அதனிலும் மேலிணையற்ற
அறிவு விந்தையப்பா! இதனைச் செம்மையிட்டு
வளர்க்காத சில பெற்றோர் சொத்தையப்பா.

இளசுகளிற்கிடும் இறுகிய கட்டுப்பாடு ஆபத்தப்பா
தமிழ்மொழி கேளாது விழித்த வேளையில்
ஐந்து வானொலி, நான்கு தொலைக்காட்சி விந்தையப்பா
இவைகள் உயிர்வாழப் பெரும்பாடு சோகமப்பா
நிம்மதி கண்முன்னிருந்தும் தேடிப் புலம்பலப்பா
நிம்மதி தன்மதியப்பா! என்ன மதியொரு நிறைவற்ற மதியப்பா!

கணனி மவுசின் பவுசு மாபெரும் விந்தையப்பா!
கவிதை நீண்டு போச்சு இனி நிறுத்த வேண்டுமப்பா!.

13-2-2003.
(இலண்டன் ரைம் கவிதை நேரம்)





திங்கள், 2 மார்ச், 2020

261. (824 ) கண்மூடும் வேளையிலே










கண்மூடும் வேளையிலே


செண்பக மலர் வாசனையில் பண்ணோசை இனிமையிலே
உண்மையிலோர் இன்பசுகம் கண்மூடும் வேளையிலே
திண்மையான பற்றுக்கோடில் மின்னுகின்ற நம்பிக்கை
கண்மூடும் வேளையிலும் எண்ணிடும் நிம்மதியை

கன்னித்தமிழ்ச் சொற்கோலம் வண்ணமாக்கும் சக்தி
கண்மூடித் தூங்கினால் புத்துணர்வு பலமாகும்.
கண்மூடிக் காதலால் திண்மைத் தோள் சாய்தலும்
உன்னத கவிதையாய் உள்ளத்திற்கொளி தரும்.

கண்ணனினருகும் கன்னித் தமிழ் கடைதலும்
நண்ணுதல் இரவிலே அதிசயம் அல்ல
மயில்தோகை விரிக்கும் துயிலிமைச்சிறகு தட்டும்
குயிலோசையும  வீண் துயில் தழுவும் வேளையிலே.

கண்மூடித் துயிலுகையில் விண்ணேகிய அம்மா
வெண்ணிலவாய் வருவார் என் கனவிலே
கண்மூடும் வெளையில் நிம்மதித் தூக்கம்
பண்ணிய உழைப்பிற்கு அவசிய ஓய்வாம்.

3-4-2005
(இலண்டன் தமிழ் வானொலி வியாழன் கவிதை
10-5-2006 ரிஆர்ரி தமிழ் அலைக்கு அனுப்பியது.)





260. (823 ) விதையின் தரம்.








விதையின் தரம்.

சீராளன் மனிதன் சீவகாருண்யன்.
சீதள சிறப்புக் குணவாளன்.
சீர்மிகு சிந்தனைகளால் சுயத்தை
சீர்தூக்கி மனமாளும் சிறப்பாளன்.

சீதளமனதின் காலநிலை மாறினால்
சிதிலமாகும் மனம் சீக்குநிலையால்.
சீண்டும் மனதாய்ச் சிந்தனை நூற்பார்.
சீப்பை ஒளித்தும் திருமணம் நிறுத்துவார்.

சீப்பை ஒளித்தால் திருமணம் நிற்குமா!
காப்பை ஒளித்தால் கல்யாணம் நிற்குமா!
காழ்ப்பு மனதின் இருட்டு எச்சம்
காளவாயாய்க் கொதிக்கும் உச்சம்.

மனவணுக்கள் பிராண்டக் கனதிக் கலகம்.
விறுவிறுவென விசமம, சரசரவென ஏக்கவடுப்பு
பரபரவெனக் குரோத நெருப்பால்
சருகு மேடை மனம் பற்றும்.

களைகள் பெருத்தால் காடு மண்டும்.
வளர்த்த பக்குவத்தில் பண்பு அறியலாம்.
இழைக்கும் தவறுகளில் இனம் காணலாம்.
விதையின் தரத்தில் விளைச்சல் சிறக்கும்.

2-2-2003
(ரி ஆர்ரி தமிழ் அலைக்கு- இலண்டன் ரைம் ல் வாசித்தது)





259. (822 ) தற்கொலை என்பது விலக்குதற்குரியது









தற்கொலை என்பது விலக்குதற்குரியது

அற்புத ஆறறிவு வாழ்வு, நற்தவ நவரச வாழ்வு
சிற்றறிவால்  சிலருக்குத் தாழ்வு, தற்கொலை முடிவுக்குச் சாய்வு
வலைபின்னி மனிதனைப் புரட்டும், தொலையாத துன்பத்தை விரட்ட
உலைபோட்டு மூடிமறைக்க, விலையாகத் தற்கொலை முயற்சி எதுக்கு!

சோகமய தற்கொலை முயற்சி சுயநம்பிக்கை ஊற்றின் வரட்சி
சுயநலம் திரண்ட முயற்சி, சுயதுன்பம் மூடும் புரட்சி
சான்றோர் உறவு வரண்ட வீழ்ச்சி, ஊன்றுகோலான இணைப்பின் வரட்சி.
சாதுரியமற்று ஓதுங்கும் முயற்சி, சாலோகம் எட்டும் முயற்சி.

முழுதும் மூடிமறைத்து அழுதுபாடும் துன்பப் பள்ளு
விழுதுவிடாது வெளியே தள்ளு, முழுதாய் மனதை விரித்துக் கொள்ளு
பழுதை நீக்காவிடில் அது முள்ளு, தொழுது பரந்த அறிவை அள்ளு
கனம் விலக கலலப்பாய்  மனம்விட்டுக் கலந்து உறவாடு

முனிவோடு (முயற்சி) துணிவை முதலீடாக்கு, முகம் கொடுத்து முடிச்சை ஆய்ந்திடு
முடியும் மனிதனால் எதுவும் என்று எதிர் நீச்சலாடு
முரண்பாடற்ற வாழ்வைச் செதுக்கிக் கல்யாணி பாடு
முறுவல் முதலீட்டில் முடிசூட முக்குளித்து வாழ்வில் முன்னேறு.

24-9-2003.
(ETBC , இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பானது.
2005 ஐப்பசியில் ரிஆர்ரி தமிழ் அலை வானொலியில் நான் வாசித்தேன்..




ஞாயிறு, 1 மார்ச், 2020

258. (821 ) கலையக சந்திப்பு





கலையக சந்திப்பு

ஆர்வம் பூவாணமாய்  விரிந்து  சிதற
ஆனந்தம் கரை புரண்டு நுரை சிதற
திரையிடா  இதயங்களின்  உண்மை ஓச்சும்
வரையற்ற உணர்வின் ஆர்வ விழிவீச்சு

பட்டான சிநேகிதக் கணங்கள் அசைய
கட்டாக கருத்துகள் கை கோர்த்திசைய
உணர்வுக் கைகுலுக்கல்கள் நிறைந்தது.
உயிர்த்த கருத்துகளில்மனம் சிரித்தது.

ஜெகம் என்பது சிறு வட்டமாகி
முகமறியா உள்ளங்களும் எம் வட்டமாகி
அகம் மகிழ வைக்கும் வானலையுறவது.
சிகரம் நோக்கும் ஒரு கோணமது.

கலையகத்தில் என் மகளோடு  22-6-2003 ல்
இதயங்களின் தழுவல்களின் இன்பக் கணமது.
நிதர்சனங்களின் ஒளிக்கதிர் பரவலது.
விலையில்லாக்கணங்கள் என் மனதில் அது

22-6-2003.




257. (820 ) திறமைக்கு ஒரு வாழ்த்து. + அதுவா இதுவா.....









திறமைக்கு ஒரு வாழ்த்து.

கவிதை வரைதல் ஒரு சிறப்பு
கவினுற வாசித்தல் சிறப்பிற்குச் சிறப்பு
தமிழின் தவறில்லா உச்சரிப்புகள், 
தரிக்கும் முற்றுப் புள்ளி, அரைப்புள்ளிகள், 
உணர்வின் எதிரொலிப்புகள், கேள்விக் குறிகள்
உருக்கி வார்க்கும் கவிதைக்கு அழகுகள்.

வாசிப்பது யார் என் கவிதை என்று 
யாசிப்பதில்லை யான் வேண்டுகோளென்று.
திறமை அனைவரிடமும் உண்டு
திரட்டிச் செதுக்கலாம் நாம் கண்டு.
விமரிசனங்களால்,  விளக்கங்களால்
விருத்தியாகலாம் அவர் திறன்கள்.

கடந்த என் கவிதைக் கிரீடம் - பந்து
கிடந்து மனம் அடித்தது தொடர்ந்து
எப்படி வாசிப்பார் எவர் வாசிப்பாரென்று
அப்படியே திரட்டி அருத்தம் தந்தீர்
அழகு அற்புதம், ஆனந்தம் திருப்தி
நன்று வாசிததீர் நல் வாழ்த்துகள்.

14-6-2003


வேறு





அதுவா இதுவா.....

நுரைக்கும் செந்தமிழின்
உரைக்கும் மொழி ஆர்வம்,
தெளிந்த உச்சரிப்பு,
மிளிர்ந்த குரலிசைவு,
கொடுக்கும் விடயத்தெளிவு,
தொடுத்து விதைக்கும் கம்பீரம்,
மிடுக்காக வானொலிச் செய்தியில்
கொடுக்கும் வெற்றிமாலை.

நற்சிந்தனை வாசிப்பு
சொற்சிந்தனைக் குவிப்பு.
இலக்கியத் தமிழ் விரிகை
துலக்கும் தமிழ் சருகை.
நவரசக் குழைவுக் கலவை
நாடகம்கட்டும் களை.
செய்தி வித்தகப் பாணி
பெய்யும் இலக்கியப் பணி.

நற்சிந்தனை வேறொரு பாணி
அதுவா இதுவா எதுவும் பொதுவா
விரல்களைந்தும் இணைவாய்
வித்துவக் கவிபுனைவாய் அணையாய், 
அரணாய், அதிரசமாய் அமுதமாய்
ஊடகத்தமிழை ஊடாடச் செய்வோம்.
கூடகமின்றி இனிதாய் ஆடகத்தமிழோடாடுவோம்.
அறிவோடுறவாடி அறுகெனப் படர்ந்தாடுவோம்.

(கூடகம்- வஞ்சகம்.   ஆடகம் -தங்கம். துலக்கும்-மெருகிடுதல்.
குளை – அpகு. முpளிர்- பிரகாசி)

14-6-2003.
















428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...