புதன், 11 மார்ச், 2020

265. (828 ) நேர்படப் பேசு







நேர்படப் பேசு

கூர்மையாக நீதிவழியாகக் கூறுங்கள்
ஆர்வமுடை வரிகளைத் தினம்
நேர்பட வீசுங்கள் நல் விதையை
ஊர்ப்பிள்ளைகள் விருத்தி உளவியலுக்காக

ஓளவையின் ஆத்திசூடி, கொன்றை வேந்தன்
பையப்பைய மூதுரை நல்வழியும்
தைரியம் நேர்மை வண்ணங்களை
வைரமாய் மனதில் உருவாக்கும்.

திருக்குறள் கலப்பையால் மனதைத்
திரு பெற உழுவதால் பாலைமனம்
திருந்தி சோலைவனமாகும் நல் விளைச்சலால்.
திருமை பெறுகிறது செந்தமிழாக

பாரதியார் வந்தார் பாநூறெனப்பாடி
சாரதியானார் தமிழ்வீதியில் செருக்காக
ஊரதிர இன்பத் தமிழ்த்தேன் சிந்தினார்.
நிமிர்ந்து நில் நேர்படப் பேசென்றார்.

தமிழ்வானம் சிறக்கநாமெல்லாம்
அமிழ்தினும் இனிய தமிழால்
அகிலம் எங்கும் சிறகடிக்கிறோம்
பேசுங்கள் தமிழைப்பாடிப் பறவையாகுங்கள்.

 3-1-2020

நேர்படப் பேசு magzie from India....my poem












8 கருத்துகள்:


  1. Gandhimathi Selvarathinam:- நேர்பட நயமான நவிழ்ந்தீர்கள் with photo wish
    11-3-2020

    பதிலளிநீக்கு
  2. Subi Narendran // ஊரதிர இன்பத் தமிழ்த்தேன் சிந்தினார். நிமிர்ந்து நில் நேர்படப் பேசென்றார்// அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.
    12-5-2020
    Vetha Langathilakam :- பேரன்புடன் மகிழ்வு சகோதரி..

    பதிலளிநீக்கு
  3. Kannadasan Subbiah :- அருமை சகோதரி
    12-3-2020
    Vetha Langathilakam :- பேரன்புடன் மகிழ்வு சகோதரா
    12-3-2020

    பதிலளிநீக்கு
  4. Shanthy Bala :- திருக்குறள் கலப்பையால் மனதைத்
    திரு பெற உழுவதால்
    பாலைமனம்
    திருந்தி
    சோலைவனமாகும்
    நல்விளைச்சலால்
    திருமை பெறுகிறது
    செந்தமிழாக...
    சிறப்பு சகோதரி.
    வாழ்த்துக்கள்.
    12-3-2020

    Vetha Langathilakam:- பேரன்புடன் மகிழ்வு Shanthy Bala

    பதிலளிநீக்கு
  5. ஆம். நேர்ப்படப் பேசுவோம். தமிழ் நிலைபெறப் பாடுவோம்.

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு