வெள்ளி, 24 ஏப்ரல், 2020

270. (833 ) உலகைப் புறந்தள்ளிச் சிகரம் ஏன்!....








உலகைப் புறந்தள்ளிச் சிகரம் ஏன்!....
0

தனியே கடதாசி வனத்தில்
இனிய எழுத்தழுத்தல் மட்டும்
கனியும் நயம் போல்
பனியாம் சுயநலக் குளிப்பு
0
தன்னிருப்பிடம் சூழல் அக்கறையின்றிப்
பின்னிடும் தவமோ மௌனம்!
புத்தகம் மட்டுமா முழுநேரமும்!
புதினம், வாழ்த்து புறக்கணிப்பேன்!
0
மயக்கும் வாழ்த்தும், கருத்தும்
சுயத்தைக் குளிர்வித்துக் குளிப்பாட்ட
தயவு காட்டுவதில்லை கருத்திட,
கயமையின்றிப் பிறருக்கு வாழ்த்திட
0
மன எண்ணங்களின் மாறுபாடு
சனங்களின் விசித்திரச் செயற்பாடு
கனமானது விளங்கிட முடியாதது
மனமுருகாதது,  கலங்கும் அறிவு
மயக்கமெனும் பூட்டு இறுகிட
வியக்கும் துரோகங்கள் துணையாகிறது
நயமான நிகழ்காலமொரு வித்தை
பயமின்றி மனிதம் தொலைகிறது.
0

 24-4-2020





புதன், 15 ஏப்ரல், 2020

269. (832 ) புது வருடத் தீர்மானம்!








புது வருடத்   தீர்மானம்!

புது வருடத்   தீர்மானம்! தேவையா!
பழைய வருடத்தில்  இனி,  திருந்த
பல பிழைகள்  நிறைந்துள்ளதா!
நாம்  நேர்மையாகச்   சரியாக வாழ்ந்தால்...
திருத்தத் தேவையின்றி.... அனைத்தும்
சரியாக இருக்காதா!
வாழ்வு,  தமிழ்,  சுயதிறன்,
வசீகர  இயக்கமானது  கடலானது

கவித்திறனைக் கரையின்றி விரிக்க 
குவியும் அனுபவங்கள் போதும்
கவிதைகளை நூலாக்க  நிறுவனங்கள் 
அவிழ்காதா கேள்விகளை!....எனது
விவிதமான (பலவிதம்) சிந்தனை இது
கவிச்சிற்பிக்கு சிற்பிக்கவா பஞ்சம்
கவிதை வித விதமாக  பிரசவிக்குமே!
எழுதுகோலோடு நகரலாம் நற்றமிழோடு.


தோகை விரிக்காது  தோழமை
தோளின்றித் தடுமாறுதல் நன்றோ!
தோடியாக நம்பிக்கை தோன்றாததுவோ!
தோன்றுகிறதா இதுவும்மொரு புத்தாண்டுத்
தோற்றிடும் தீர்மானமாகுமோ!  தேவையோ!......
தோன்றாத மொழி மௌனமாய்
தோற்றத்திலழகு மலரின் வாழ்வும்
தோல்வியின்றிஅலங்காரமாகிறது தானே!

அன்பீரத்தில் தானே நட்புயரும்
இறுகப் பற்றும் காற்றாயும்
வெற்றிடம் நிரப்பும் நீராயும்
அற்புத நட்பு  இருக்கலாகாதோ!
 தவநிலை யோகமானது   ஒரு
தனித்துவ   நட்பு எனலாமோ!
நிற்காத நதியான நட்பு
வற்றாத மகிழ்வு தருமே!

2-1-2020






திங்கள், 13 ஏப்ரல், 2020

268 (831 ) 2020 சார்வரி --(வீறியெழல்) ஆண்டு







2020 சார்வரி --(வீறியெழல்) ஆண்டு

காலமெனும் மந்திரவாதியின் கோல் சுழன்று அசைந்தது.
காட்சியானது   புதிய ஆண்டு  காற்றில் கரைகிறது பழைய ஆண்டு
எப்படி அமையும் புதிய காலப்படி! ஆர்வப்படி  வினாக்கள் வரிசைப்படி!
மதிய வெயில் ஒளியென ஒளிர்ந்தபடி பதிய வரட்டும் வெற்றிப் படிகளாய்

தன்ளைப் புதப்பித்த காலக்கொத்து அன்னை உருவாக ஊனங்கள் அழித்து
முன்னைப் பெருமைகள் சேர்க்கட்டும் கொரோனா அழிந்து புத்தாண்டாகட்டும்
உறைவிடம் தொலைத்தோருக்கு உறைவிடமும்  உணவுடன் வறுமையொழிக்க வா!
மறைபொருளின்றி அநியாயம் அழிக்க கொற்றவையாக  வா! குறைதீர வா!

கடந்திட்ட பாட்டையை விழிக்கின் படர்ந்த துன்பங்களை மழை கழுவட்டும்!
கையுள் அடக்கும் காலமாய்  நீளமற்றதாய் ஆண்டின் ஊர்வலம் முடிந்தது
கானம், ஞானம்,  கவிதைஜோதி கலந்து கவிந்து காசினி வீதியில்
கவின் பெறட்டும் கவிதை ஜோதி, கம்பன் பாரதி சாதனையாகட்டும்!







சனி, 4 ஏப்ரல், 2020

267. (830 ) 73rd B*day




73rd B*day






· இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தொட்டு கொள்ள முடியா தூரங்களிலும் இனிதாய் பூத்த உறவு இதனித்துஇநாகரிகமாய்இநன்மதிப்பு மிக்கஇ நல்ல உள்ளம் கொண்ட மதிப்பில் உயர்ந்த நட்பு இனிதான விடியலில் செந்தமிழ் சொல்லாலே ... இங்கிருந்து எட்டநின்று வாழ்த்தினாலும் அங்கிருக்கும் உங்கள் நெஞ்சிலே என் வாழ்த்து எப்போதும் ஒட்டியே இருக்கும் என்ற ஆசையில்.. நானும் வாழ்த்துகிறேன் புன்னகை பூக்கட்டும் உங்கள் உதட்டில் சிந்ததை எண்ணம் சொல் செயல் குடும்ப வாழ்வில் அனைத்திலும் மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் நிம்மதியுடனும் தொடர்ந்து வெற்றி நடை போட கடவுள் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகிறேன்

3-4-2020




அன்பான முகநூல் உறவுகளே நட்புகளே எம் உறவினர்களே எனது பிறநத நாளுக்கு அன்பான வரிகள் கூறி வாழ்த்தி என் பிறந்த நாளை சிறந்த நாளாக்கி மகிழ்வில் ஆழ்த்திய உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் கூறுகிறேன். உடன் உடனும் விருப்பையும் அன்பையும் போட்டேன்.யாருக்கவாது தவறியிருந்தால் பொறுத்துக் கொள்ளவும். இதை எழுதும் போது 140 பேருக்கு மேல வாழ்த்தியிருந்தீர்கள். எல்லோருக்கும் இறை ஆசி நிறையட்டும்.


428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...