வெள்ளி, 31 ஜனவரி, 2020

249. (812 ) (ஊடகம் - ஓம் கிறீன்லாந்தா!







ஓம்  கிறீன்லாந்தா! 

ஆன்மார்த்த பூசை ஆளுமையென
ஆன்றோர்களையும் ஏமாற்றும் ஆடைகளா!
ஆலவட்டமாய் சமய ஆரத்தியுடன்
ஆசை வார்த்தைகள்  ஆகமமா!

அடக்கம், பண்பாடுகள் தடுக்கி
முடங்கும்  வாலிப முயற்சி
முழு   உலகையும்  முகிழ்த்தி
முக்குளிக்கும் தவறான பாலுறவா!

சிறுவர்கள், இளையவர்களை  சிதைக்க
பொறுமையாய் மூளைச்சலவையில்  பொருத்தி
வறுமையற்றுப் பணம் வறுகிட
வாய்ப்பென உலகைக்  குழப்புகிறாரா!

எண்ணற்ற குற்றங்களை ஒழித்திட 
கண்களைக் கட்டிக்  கும்மாளமா!
அனாயாசமாய் உலகை அனுபவிக்க 
பனாமா, கிறீன்லாந்தெனத் தனித்தீவா!

குறளி  வித்தைகளால் உலகை
அறவழியென ஆட்டும் ஆசாடபூதிகளா!
சிறந்த சுயபுத்தியைத் தீட்டுங்கள்  மக்களே!
திறனுடன் சுயகாலில் வாழுங்கள்!

  10-12- 2019










செவ்வாய், 28 ஜனவரி, 2020

248. (811 ) என் அப்பா








என் அப்பா

நெஞ்சமெனும் இதய நிலம்
நஞ்சற்ற ஈரமாக ஆக்கியவர்
விஞ்சுமென் மனிதத்தின் திறவுகோல்
மிஞ்சும் அன்புடைய என்னப்பா.

மனப்பயிற்சியாம் வாசிப்பை முழுதுமாய்
தினம் ஓதியவர் அப்பா.
கனமான நற்தமிழ் காட்டியவர்
எனது முதற் கதாநாயகன்.

வல்லின செயற் திறனாளர்
நல்லினமாய் என்னை உருவாக்கியவர்.
பல்லினத்தினுள் பெயரெடுக்க வழிகாட்டியவர்.
மெல்லினமாய்த் தீருநீறில் திருப்தியடைபவர்.

ஓரடி பழக்கித் தமிழோடு
பாவடி புனைய வைத்தவர்
சீரடியாய்த் தினமிதயத்தில் அசைபவர்.
வேரடியாய்க் கனவிலும் விகாசிப்பவர்.

சத்தியமிகு அப்பா பாதைகள்
தித்திக்கும் வாழ்வு முறைகள்
நித்தியம் என் வழிகாட்டிகள்.
சித்தி தருமென் நிம்மதிகள்.

 6-9-2019


அப்பா பற்றிய இணைப்பு








வேறு  

பாசத்தறைமுகப் பகலவன்

பாரில் உயிர்கள் இயங்க
பாசம் நேசம் பொதுவுங்க
மாக்கள் மனிதரும் உணர்வில்
மாற்றமில்லாச் சமதேடல்

மெருகாகும் உறவுப் பின்னல்
உருகும் ஆதரவுத் தந்தையால்
நிரூபிக்கும் வகையில் தனித்துவமாய்
நிமிர்வார் பிள்ளைகள் சமத்துவமாய்

வயோதிபம், வளரிளம் பருவத்திற்கும்
வாகான நங்கூர நேசம்.
வாய்ப்பான தந்தை அருகும்
வாசியான கைத்தடிப் பலம்.

பாசத்துறைமுகத்தில் தந்தையார்
பூசும் அன்பில் பகலவனார்.
தேசுடை தன்னம்பிக்கைப் படகாவார்
கூசாத முன்மாதிரிப் படமாவார்.

2016









புதன், 22 ஜனவரி, 2020

24 7. (810 ) இதுவும் ஒரு தொடர்கதையே








இதுவும் ஒரு தொடர்கதையே

துன்பநிலை வாழ்வில் தானாக வருவதில்லை
அந்தநிலை வாழ்வில் நாமாகத் தொடுமெல்லை
சொந்த மனதுச் சோதனையால்  விரக்தி நிறையும்
சிறுமனம் திரிந்து, எரிந்து புகையும்
பொறுமை குணம் முற்றாக அணைந்தால்

நாம் தூங்க நல் ஞானம் தூங்குவதால்
ஆம் என்று சோகம் தானாக நுழைதலே.
ஆழ்ந்து பார்த்தால் இதுவுமொரு தொடர் கதையே
ஆன்மதவம், தர்மநெறி நீறுபூப்பதால்
ஆன்மாவின் ஆழ்அமைதி அவிந்து போதலே.

22-2-2004




246 . (809 ) ஆ(வா)சியுடை வாசிப்பு







ஆ(வா)சியுடை வாசிப்பு

வாசிக்க வாசிக்க மன பாசிப்படை விலகும்
தூசியும் கரையொதுங்கும் யோசிக்குமுணர்வு பெருகும்.
யோசிக்க சந்தேகமுயரும்  யோகமான தேடல் பெருகும்
வாய்ப்புகளெம்மை நெருங்கும் வாய்த்திடும் பல நிகழ்வுகள்

வாத்தியாராகும்   இன்பம் துன்பம் நேத்திரம் திறக்க வைக்கும்.
காத்திரமான அனுபவப்பாடம் கோத்திடும் மனப் பக்குவம்.
பூவெனப் பயன்பாடு பூக்கம் பூவாசமதிப்புப் பெருகும்
பூரண மகிழ்வுமலரும்பூச10டும் செழுமை வாசிப்பால்

உன்னை மறப்பாய்! உலகை அளப்பாய்!
ஊற்றான அறிவால் உண்மை உணர்வாய்!
வாசிப்பு வாசம் இதமானது  .ஆனந்தவாசியாக்குகிறது.
எவ்வளவு வாசியான நிலைமை அது!

2-4-2009
(5-4-2009 முத்துக்கமலம்.கொம்)





245 . வலைப்பதிவர் ரமணி



வலைப்பதிவர் ரமணி அவர்களின் கருத்து


பதிவின் பெயர்வேதாஇலங்காதிலகம்  

தமிழ்மணத்தில் வெளியாகும் இவருடைய கவிதைகளை படித்து வருகிறேன். நல்ல எழுத்தாளர். சிறந்த கவிஞர். இவரது பயணக் கட்டுரைகள் சுற்றுலா செல்பவருக்கு மிகவும் பயன்படுவன.

தொலைத்தவை எத்தனையோ என்ற தலைப்பில் நமது பழக்க வழக்கங்களில் நம்மோடு இருந்து காலமாற்றத்தால் மறைந்துபோன பொருட்களைப் பற்றியும் நடந்து முடிந்த நிகழ்வுகளைப் பற்றியும் எண்ணி எண்ணி ஏங்குகிறார். அவற்றுள் ஒரு பதிவு.... (தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் மறைந்த தமிழறிஞர்  ஆறுமுக நாவலரை நினைவு கூறுகிறார்)
http://kovaikkavi.wordpress.com/2012/02/16/ தொலைத்தவை எத்தனையோ.6



******************

செவ்வாய், 21 ஜனவரி, 2020

244 (808 ) வாய்ப்பு






வாய்ப்பு

வாய்ப்பு வாசலில் கோலமிடுதல்
ஆய்வுக்குரியதல்ல, சடுதியாய்
வியப்புடன் முயங்கும் எம்மை.
வாய்ப்பை வாகுடன் பயனாக்கிடில்
வாலாயமாகும் உயர்வு, புகழ்.
வாய்ப்பை வழுகவிட்டுத் தன்னை
ஏய்ப்பவரும் வியப்புக்குரியவரே!
வாய்ப்பைச் சாய்ப்போரும் வியப்புடையோரே! 

மாய்த்திடாத திடம் உண்டு
சாய்த்திட வைக்காமல் மனதை
ஏய்த்தல் காய்த்தலின்றி என்னருகே
வாய்ப்பே வருக! வருக!
ஆய்வோடு பாக்கள் மேய்ந்து 
மாய்ந்து மாய்ந்து புனைகிறேன்.
ஏய்ப்பதேன் எட்ட நின்று!
வியப்பின்றியருகே வா! வா!  
  
14-9-2010




சனி, 18 ஜனவரி, 2020

243. (என் மன முத்துகள்.- 14 )






ஆறறிவை இயக்கு-    14








அனல் மழை


மனம் நிறைய வெறுப்பு
வானிலை அறிக்கை வாசிக்காமலே
மண்ணிலே அனல் மழை
மனம் நிறைய சூறாவளி
ஊரெல்லாம் உள்ளமெல்லாம்
ஊனையும் கரைக்கும் வேகம்









242. (என் மன முத்துகள்.- 13)






என் மன முத்துகள்.



29-5.2004.

1- வன்சொல்லின் வேகம் செவிப்பறையில் மோதி, முகத்தில் அறைவது போன்று உணர்வு தந்தாலும், பொறுமை யெனும் கற்பாறை அவ்வுணர்வை யடக்கி,   அறிவுக் கண்ணைத் திறக்க வைக்கும்.

2- அடியடியாக வந்த பண்பாட்டை அடியொற்றி வாழ்வில் அடிச்சுவடு பதிப்பவரும்,  புதிய பாணியில் அடிவைத்துக் குடிபுக நினைப்பவரும் தேடுவது,   எல்லோரும் தொட எண்ணும் நிம்மதி அடிவானம் தான்.

3- மங்கலச் சொற்களைப் பாவியுங்கள்! மங்கலச் செயல்களைப் பாவுங்கள்! பாவிகள் யாருமே உலகில் இல்லை. பாவி எனும் பதப் பாவிப்பை.....
     பா – பாட்டு.
     வி – அழகு    என்று பாவியுங்கள்.

4- குதிக்கும் உள்ளத்தின் ஆர்வம் குதிருக்குள் அடங்க வேண்டாம். குதிரை வேகமாகச் செயற் பட, மதிக்கின்ற ஊக்கமும்,   ஆதரவும் கொடுங்கள். அது மிதிக்கட்டையாகச் செயற்பட வைக்கும்.

5- கள்ளம் கபடற்ற சிறு மனதில் கள்ளத்தனம் புகுந்திட இடமின்றி உள்ளம் நிறை  அன்பு கொடுங்கள், 
 ஆதரவு கொடுங்கள். அன்புக் கள்ளுண்ட வண்டாக குழந்தைகளை ஆக்குங்கள்.

6- ' குறை காணும் மனம் நிறைவு பெறாது.' எண்ணங்களைப் பல வகையில் சிறை செய்து உறைய விடாதீர்கள். நல்ல துறையில் மனம் புகுத்தி இறை சிந்தனையையும் புகுத்துங்கள். அன்பு நறை வழிந்து நிறைந்து ஓடும்.

7- ' வில்லினிலிருந்து பறப்பட்ட நாணாக எழு!' சுறுசுறுப்பு மிகு செயலிலும் சிந்தனையிலும்,  நரம்பில் குருதி ஓட்ட நகர்வு சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியமடையும். மெல்லென நகரும் செயல்கள்,   சிந்தனைகள் அனைத்திலும் ஒரு மந்த நிலையை உருவாக்கும்.

8- குறியற்ற நெறியற்ற வாழ்வுஇ தறிகெட்டுத் தரமிழந்து போகும்.

9- இல்லறச் சுழியில் மாட்டியசில பேதைகள் இற்றுவிட்ட மூளைச் சலவையால் வாடுகிறார்கள்.

10- மது போதையில் ஆடவன் மட்டுமல்ல.   மாதுகளும் வீழ்ந்தால் .  தாம் பெற்ற செல்வங்களை எப்படிக் கட்டுப்   படுத்துவதாம்!

11- ஒழுக்கத்தில் பத்திரமாக வாழாதவன் வாழ்வு
அழுக்காம் துன்பப் பள்ளத்தில் தாழ்வு.

அத்தி:-
அத்திவாரத் தமிழ் அழகாக ஊன்றினால் செந்தமிழ் மொழியெனும் அடுக்கு மாடிக் கட்டடம்,   உச்சி மாடிக் கட்டிடமாகவும் உன்னத நிலையடையவும் வாய்ப்பு உண்டு.

தேன் தமிழ் சீறியெழுந்து அத்திர வியூகம் (அம்பு வியூகம்) வகுத்தால் அது சுகந்த அத்திரமாகி (அம்பு) சுகமும் தரும். சுட்டெரித்துப்   பாயும் சக்தியும் பெறும். ஆயினும் நல்ல விளைச்சலுக்குப் பாயும் அத்திரம் பண்புடைத்து,  பயன் பெரிது.






241. (என் மன முத்துகள்.12-)






என் மன முத்துகள்.


 23-3-2005.

உங்கள் பிள்ளைகள் எல்லை மீறும் போது நீங்கள் எப்படி எடுக்கிறீர்கள். தாங்கிக் கொள்ள, ஏற்றுக் கொள்ள முடிகிறதா?
 ஆதலால் முதலில் பெரியவர்கள் உங்கள் எல்லைகளை    நீங்கள் அறியுங்கள். உங்கள் எல்லைக் கோட்டை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். எதிலும் அளவுடன் இருத்தல் சிறந்தது.
மயிலிறகு ஏற்றும் வண்டியானாலும்இ அதையும் அளவோடு ஏற்றாவிடில் அச்சு முறிந்து விடும் என்று திருவள்ளுவரும் தனது குறளில் ' வலியறிதல்' எனும் அதிகாரத்தில் கூறுகிறார்.

 எந்த வழி எமக்குச் சிறந்த வழியோ அவ் வழியைத் தெரிவு செய்யலாம். ஒருவரின் எழுத்துத் திறமை  சிறப்புற இல்லை, கோர்வையாக  எழுத முடிவதில்லையெனில்,  தன் பேச்சுத் திறமையில் கவனம் செலுத்தலாம். மிக நல்ல முறையில் பேச்சு வன்மையை வளர்த்து முன்னேறலாம். அது போலப் பேசுவதற்குக் கோர்வையாகச் சொற்கள் வரவில்லையா,   குரல் கீச்சுக் கீச்சு என ஒத்துளைக்க மறுக்கிறதா! பிறருக்குக் குரல் இனிமை தரவில்லையா? இருக்கின்ற எழுத்துத் திறன் மூலம் சுய திறனை வெளிப்படுத்திப் பிரகாசியுங்கள். இதுவே அறிவுடைமையயாகும்.

13-3-2005.

 மறைந்திருந்து மரத்திற்கு உதவும் வேர் அஃறிணை. மறைந்திருந்து மனிதனை உதைக்கும் மனிதன் உயர்திணை. உயர்திணை செயலினால் அஃறிணையாகிறது. அஃறிணை தன் செயலினால் உயர்திணையாகிறது. படைப்பினால் ஏற்பட்ட தவறல்லவிது. கடக்கும் மனித வாழ்வில் நிகழும் மனிதத் தவறு இது.

மழலைக்கு நடை பழக நடை வண்டி பலம். மழவனின்(இளைஞன்) நடை தொடர தன்னம்பிக்கை பலம். நடுக்கும் குளிரில் உழைக்க ஆரோக்கியம் பலம்.   நாவறியா மொழி சரளமாக   பேச்சுப் பயிற்சி பலம்.







செவ்வாய், 14 ஜனவரி, 2020

240. (807 ) ஊடகம்- வளரி - இனியொரு புதிய தை - 2020 - தை தை என







இணையத்தள, முகநூல் உறவுகள்- எமது உறவினர் நண்பர்களுக்கு எல்லோருக்கும் தைத் திருநாள் வாழ்த்துகள்.

இனியொரு புதிய தை - 2020


இனியென்ன புதிய தை இரண்டாயிரத்து இருபது
இணைந்தாடுது எம்முடன் இசைவாகத் தொடரட்டும்
வெள்ளைப்பனி மூடாத ஒரு நத்தாருடன்
உள்ளே வருகிறாய் கள்ளமின்றி உறவாடுவாயா

சிற்றலகால் சிறுகச் சிறுகக் கொத்தி வெளியான
புத்தம்புதுக் குஞ்சாய்ப் புது தையே நிற்கிறாய்!
அந்தகார இருட்டிலொரு சுந்தர ஒளியாயெமக்கு
இந்தப் புதுத்தை வந்து குந்தட்டும் நலமாக.

ஒரு இனத்தின் மனிதநேயத்தைக் கருவறுக்காத
அருமைத் தையாக உரிமைகள் தரட்டும்
ஞாபக வீதியில் ஞானமுத்திரை பதிக்கும்
ஞானஒளியாக வா! ஞானசூனியமாக அல்ல

எம்மதி மகிழ்ந்திட நிம்மதி சுமந்து வா!
அம்சமாய்த் துரோகம் விரோதமழித்து வா!
இம்சையான வேற்றுமை நீங்க வா!
சம்பூரண ஒற்றுமை, ஆரோக்கியமேந்தி வா!

கவிச்சுடர் வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க். 14-1.2020






தை தை என( வளரிக்கு)


தை தையெனத் தைமகள் வருகிறாள்
தரணியில் நாம் மகிழத் தைமகள் வருகிறாள்.
தம் மகிழ்வை தரமாக உழவர்கள்
தைப்பொங்கல் நாமம் சூட்டிய நாள்
தகவுடன் வெளிப்பாடு காட்டும் நிகழ்வை
பகையினை விதைத்துப் பகுதியாய் வளர்த்து
வையகம் கொண்டாடும் தமிழர் திருநாள்.
பங்கு போடும் மனநிலை எரித்து
பகிர்வோம் நம் அன்பைத் தொகுத்து
பாங்காக நமது பண்பை வளர்த்து
பக்குவமாய் பல திறமைகள் விரித்து
இளமையை மனதிலூட்டும் இன்பப் பொங்கலிது.
பங்கிடுவோம் தித்திப்புப் பொங்கலைச் சிரித்து
உழவர்கள் கொண்டாட உவகை தந்திடும்
உழைத்த மக்கள் உறவுகளோடு புத்தரிசிப்
மனைகள், மாட்டுத் தொழுவங்கள் சுத்தமாக்கி
மாவிலைத் தோரணங்கள் ஆடும் தையிது
பகலவனுக்கு நன்றி கூறி எத்திக்கும்
பொங்கல் பகிர்ந்துண்ணும் ஆனந்தத் தையிது
தை பிறந்தால் வழி பிறக்கும்
தை பிறந்தால் பொங்கல் வரும்
மைவிpயும் எதிர் பார்க்கும்
கைகளிலும் புது வேகம் வரும்
உழவன் பூரித்து மகிழும் தை
டென்மார்க்.13-1-2009- வளரிக்கு மின்னஞ்சல் 22-12-19
கவிச்சுடர் வேதா. இலங்காதிலகம்


வளரி சஞ்சிகைக்கு மனமார்ந்த நன்றி





சனி, 11 ஜனவரி, 2020

239. (ஆன்மிகம் - 31 ) சுவாமி ஐயப்பன் (டென்மார்க் ஓகுஸ் ஐயப்பன் விழாவில் எனது உரை)












சுவாமி ஐயப்பன்  (டென்மார்க்   ஓகுஸ்   ஐயப்பன் விழாவில் எனது உரை)

சுவாமி ஐயப்பன் பற்றிய சில தகவல்களைக் கூற வந்துள்ளேன்.
கேரளநாட்டில் இரண்டு விடயங்கள் நடந்தது. 
பந்தளநாட்டு  மகாராஜாவிற்கு பிள்ளைகள் இல்லையென மனம் வருந்தினார்.
மகிஷி என்ற எருமைத் தலை அரக்கி ரிஷிகளைத் துன்புறுத்திவந்தாள்.
இந்த இரு பகுதியாருக்கும் சிவபெருமான் உதவி செய்ய எண்ணினார்.
விஷ்ணு மோகினியாக மாற சிவன் மோகினி மீது ஆசைப்பட  ஐயப்பன் பிறந்தார்.

பிறந்த குழந்தையைக் காட்டிலே ஒரு மரத்தின் கீழே விட்டு விட்டு சிவனும் விஷ்ணுவும்  சென்றுவிட்டனர். வேட்டைக்கு வந்தார் பந்தள மகாரஜா. குழந்தையின் அழுகுரல் கேட்டு  இறைவன் தனக்குத் தந்த குழந்தையென மகிழ்ந்து அரண்மனைக்கு எடுத்துச் சென்று வளர்த்தார்கள். 
ஓளி நிறைந்த முகமும் கழுத்தில் மணிமாலையுடன் பிள்ளை இருந்ததால் மணிகண்டன் என்று பெயரிட்டனர். மணிகண்டன் வந்த ராசி....மகாராணி   கர்ப்பமுற்றார் இன்னொரு ஆண் பிள்ளை பிறந்தது. 

சொந்தப் பிள்ளையிருக்க வந்த பிள்ளைக்கு அரசு எப்படி என்ற துர் போதனைகளால் 
மகாராணி தனக்கு வயிற்று வலி வந்தது என நடித்தார். புலிப்பால்  குடித்தால்   
 வயிற்றுவலி   தீரும் என்று யோசியரைக் கூற வைத்தாள்.
மணிகண்டனுக்கு இவை தெரியாதா!   மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காடு சென்றார்.
வழியில் அரக்கி மகிஷி துன்பம் தந்து தடுத்தாள். அவளை வதம் செய்தார்.
மணிகண்டன் அவதாரம் இதற்காகவே நடந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

இந்திரனே புலியாகவும் தேவர்கள் புலிப்படையாகவும் அரண்மனை வந்தனர்.  மணிகண்டனைக் கண்டு தாயார் திடுக்கிட்டார்.  மன்னிப்புக் கேட்டார். புலிகளை,   திருப்பி அனுப்பமாறு கேட்டார்.
அவ்வாறே மணிகண்டன்   செய்தருளினார்.
தனது பிறப்பின் காரியம் முடிந்ததால் தான் 18 படிகளின் மேல் சபரி மலையில் தவம் செய்யப் போவதாககவும்  தன்னை வணங்க விரும்பினால் அங்கு வந்து தரிசிக்கவும் என்று கூறினார்.
ஒரு முறை பந்தள மகாராஜா மணிகண்டனைத் தரிசிக்க வந்த போது மணிகண்டன் தந்தை என்று எழுந்திட முயன்றார் இறைவனானவர் தனக்காக எழக் கூடாது என்று பந்தள மகாராஜா தனது சால்வையைத் தூக்கிப் போட்டார் . இது ஐயப்பன் காலைச் சுற்றி நின்றது

அதுவே சுவாமி எழும்புவது போன்று முழங்கால் கட்டிய ஒரு தோற்றத்தைத் தருகிறது. 
--------  
பாரதப் போர் நடந்தது 18 நாட்கள்.     இராமாயணப் போர் நடந்தது 18 மாதங்கள்.
தேவ அசுரப் போர் நடந்தது 18 ஆண்டுகள்.  இப்படி 18 என்ற எண்ணுக்கு சிறப்புகள் உண்டு.

சபரி மலை 18 படிகளும் தங்கத்தால் ஆனவை.
இங்குள்ள 18 படிகளும் விநாயகர்,  சிவன்,  பார்வதி,   முருகன்,   பிரம்மா, விஷ்ணு,  ரங்கநாதன்,    காளி,  எமன்,   சூரியன்,    சந்திரன்,   செவ்வாய்,   புதன்,    குரு,   சுக்கிரன்,    சனி ,  ராகு,    கேது என 18 தெய்வங்களாக விளங்குவதால்,   தலையில் இருமுடி வைத்திருப்பவர்கள் மட்டுமே 18 படி ஏறமுடியும்.  
'தத்வமஸி':-
பதினெட்டு படி ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம். சன்னிதான வாசலில் 'தத்வமஸி' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது 'நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய்' என்பது இதன் பொருள். ''ஏ மனிதனே! தெய்வத்தை தேடி நீ இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்க வேண்டியதில்லை.
காடு மேடுகளைக் கடந்திருக்க வேண்டியதில்லை. உனக்குள்ளேயே நான் இருக்கிறேன். நான்,  இங்கிருந்து உன்னை எப்படி பாதுகாக்கிறேனோ,   அதுபோல் நீயும் உன்னைச் சார்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள். அவர்களிடம்     நல்லதைப் பேசு,   நல்லதை செய்,    நன்மையே நாடு' என்பது இந்தச் 
 சொல்லுக்குள்    அடங்கியுள்ள    தத்துவம்.

18 படியிலும்,  18 வன தேவதைகள் குடி கொண்டிருக்கின்றனர். 18 தேவதைகளையும் படியில் ஆவாஹணம்  (ஆரத்தி)   செய்து அவர்களை பூஜிப்பது தான் படிபூஜை.
சபரிமலை 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய ஷேத்திரமாகும்.

புலன் ,  ஐந்து, பொறி  ஐந்து,  பிராணன்  ஐந்து,   மனம் ஒன்று,   புத்தி   ஒன்றுஇ,  ஆங்காரம்  ஒன்று, இவைகளைக் கடந்து ஐயப்பனை காண வேண்டும் என்ற கருத்தின்படி 18 படிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளை வைத்து 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது. அவை வில், 
 வாள்,  வேல் கதை, அங்குசம்,  பரசு. பிந்திபாவம்,  பரிசை,  குந்தகம்,  ஈட்டி,  கைவாள்,   சுக்குமாந்தடி,   கடுத்திவை,   பாசம்,   சக்கரம்,   ஹலம்,   மழுக்,   முஸல ஆகிய 18 போர் கருவிகள் ஆகும். 

*  18 படிகளை 18 வகை தத்துவங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்.

* மெய். வாய்,  கண்,  மூக்கு,   செவி,   சினம்,   காமம்,   பொய்,   களவு,   வஞ்சநெஞ்சம்,   சுயநலம்,   பிராமண,   சத்திரிய,   வைசிய,   சூத்ர,  தாமஸ,   ராஜஸ என்ற 18 வகை குணங்களை தாண்டினால் பகவான் ஐயப்பனை காணலாம் என்று கூறப்படுகிறது.

* கோயிலைச் சுற்றியுள்ள 18 மலை தெய்வங்கள் 18 படிகளாக, ஐயப்பன் சன்னதிக்கு முன்பாக இருப்பது மிகவும் விசேஷமானது. 

10-1-2020





428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...