செவ்வாய், 28 ஜனவரி, 2020

248. (811 ) என் அப்பா








என் அப்பா

நெஞ்சமெனும் இதய நிலம்
நஞ்சற்ற ஈரமாக ஆக்கியவர்
விஞ்சுமென் மனிதத்தின் திறவுகோல்
மிஞ்சும் அன்புடைய என்னப்பா.

மனப்பயிற்சியாம் வாசிப்பை முழுதுமாய்
தினம் ஓதியவர் அப்பா.
கனமான நற்தமிழ் காட்டியவர்
எனது முதற் கதாநாயகன்.

வல்லின செயற் திறனாளர்
நல்லினமாய் என்னை உருவாக்கியவர்.
பல்லினத்தினுள் பெயரெடுக்க வழிகாட்டியவர்.
மெல்லினமாய்த் தீருநீறில் திருப்தியடைபவர்.

ஓரடி பழக்கித் தமிழோடு
பாவடி புனைய வைத்தவர்
சீரடியாய்த் தினமிதயத்தில் அசைபவர்.
வேரடியாய்க் கனவிலும் விகாசிப்பவர்.

சத்தியமிகு அப்பா பாதைகள்
தித்திக்கும் வாழ்வு முறைகள்
நித்தியம் என் வழிகாட்டிகள்.
சித்தி தருமென் நிம்மதிகள்.

 6-9-2019


அப்பா பற்றிய இணைப்பு








வேறு  

பாசத்தறைமுகப் பகலவன்

பாரில் உயிர்கள் இயங்க
பாசம் நேசம் பொதுவுங்க
மாக்கள் மனிதரும் உணர்வில்
மாற்றமில்லாச் சமதேடல்

மெருகாகும் உறவுப் பின்னல்
உருகும் ஆதரவுத் தந்தையால்
நிரூபிக்கும் வகையில் தனித்துவமாய்
நிமிர்வார் பிள்ளைகள் சமத்துவமாய்

வயோதிபம், வளரிளம் பருவத்திற்கும்
வாகான நங்கூர நேசம்.
வாய்ப்பான தந்தை அருகும்
வாசியான கைத்தடிப் பலம்.

பாசத்துறைமுகத்தில் தந்தையார்
பூசும் அன்பில் பகலவனார்.
தேசுடை தன்னம்பிக்கைப் படகாவார்
கூசாத முன்மாதிரிப் படமாவார்.

2016









6 கருத்துகள்:

  1. தங்களின் அன்புத் தந்தை போற்றுதலுக்கு உரியவர்

    பதிலளிநீக்கு
  2. அகன்:-
    நல்வாழ்த்துகள் ம்மா வேதா..

    Vetha Langathilakam:-
    Image may contain: flower, plant, text and nature

    Manjula Kulendranathan:-
    வாழ்த்துக்கள் அழகான அருமையான பதிவு உங்கள் கவிதை அக்கா
    9-6-2020
    Vetha Langathilakam:-
    Manju...(photo Thanks)
    Mariathas Gnanapragasam
    photo wish and vetha also

    Sasi Ravichandrarasa:-
    நன்று
    9-6-2020
    Vetha Langathilakam:-
    ஒரு பெறுமதி வார்த்தை மிக மகிழ்ச்சி சகோதரி...
    இனிய காலை வணக்கம்.
    9-6-2020
    Vetha Langathilakam:- with photo thanks.
    இனிய காலை வணக்கம் மகிழ்ச்சி சகோதரி...சௌந்தரி...இனிய வாழ்த்துகளுடன் நன்றி

    பதிலளிநீக்கு
  3. Rathy Mohan
    நல்ல கவிதை வாழ்த்துகள்
    9-6-2020
    சிந்தியா சிந்தி:-
    அழகு வரிகள் வாழ்த்துகள்

    Karnan Sinnathamby:-
    வாழ்த்துகள்
    9-6-2020
    Sothi Manikkam:-
    வரிக்கு வரி மிளிரும் புலமை!
    வாழ்த்துகள் அம்மா!

    ரோஜா ரோஜா
    வாழ்த்துகள் அம்மா

    Ruban Shiva
    வாழ்த்துக்கள் வேதா அக்கா.
    .

    கவிதா கவி
    வாழ்த்துக்கள் அக்கா
    allfour gave photo wishes.

    பதிலளிநீக்கு
  4. சிந்தியா சிந்தி
    Vetha Langathilakam அறிவென்றால் அப்பாதான் அருமை
    june- 2020
    Puwaneswarie Shan
    Vetha Langathilakam அப்பாவின் பாதைகள்
    அருமையான பாடங்கள் வாழ்த்துகள்
    june.2020
    Sothi Manikkam
    Vetha Langathilakam
    ஓரடி பழக்கித் தமிழோடு
    பாவடி புனையவைத்தவர்- அன்பான அப்பா!
    அருமை

    பதிலளிநீக்கு

  5. june 2020 comments:-

    அகன்
    நல்வாழ்த்துகள் ம்மா வேதா..

    Vetha Langathilakam
    Image may contain: flower, plant, text and nature

    Manjula Kulendranathan
    வாழ்த்துக்கள் அழகான அருமையான பதிவு உங்கள் கவிதை அக்கா
    ·
    Vetha Langathilakam
    Manju...
    No photo description available.

    Mariathas Gnanapragasam

    Vetha Langathilakam
    ·
    Sasi Ravichandrarasa
    நன்று

    Vetha Langathilakam
    ஒரு பெறுமதி வார்த்தை மிக மகிழ்ச்சி சகோதரி...
    இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  6. June- 2020 comments:-

    கவிதா கவி
    வாழ்த்துக்கள் அக்கா

    Vetha Langathilakam

    Mano Ganeshalingam
    Very nice to here akka

    Mano Ganeshalingam-- photo sopper

    Mani Thiyages
    நல்வாழ்த்துகள்
    ·
    Sujatha Anton
    நாங்களும் இணைந்து மகிழ்கின்றோம்.தங்கள் தமிழ்ப்பணி மேலும் வளர்க.!!!!!

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு