புதன், 22 ஜனவரி, 2020

24 7. (810 ) இதுவும் ஒரு தொடர்கதையே








இதுவும் ஒரு தொடர்கதையே

துன்பநிலை வாழ்வில் தானாக வருவதில்லை
அந்தநிலை வாழ்வில் நாமாகத் தொடுமெல்லை
சொந்த மனதுச் சோதனையால்  விரக்தி நிறையும்
சிறுமனம் திரிந்து, எரிந்து புகையும்
பொறுமை குணம் முற்றாக அணைந்தால்

நாம் தூங்க நல் ஞானம் தூங்குவதால்
ஆம் என்று சோகம் தானாக நுழைதலே.
ஆழ்ந்து பார்த்தால் இதுவுமொரு தொடர் கதையே
ஆன்மதவம், தர்மநெறி நீறுபூப்பதால்
ஆன்மாவின் ஆழ்அமைதி அவிந்து போதலே.

22-2-2004




1 கருத்து:

  1. Subi Narendran :- துன்பநிலை நாமாக வாழ்க்கையில் தேடிக்கொள்வதென்பதை கவிதை வரிகள் அழகாக சொல்கின்றன. வாழ்த்துக்கள்.
    22-1-2020


    Vetha Langathilakam :- ப்ரியங்கள்
    மகிழ்ச்சி சகோதரி

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...