சனி, 18 ஜனவரி, 2020

241. (என் மன முத்துகள்.12-)






என் மன முத்துகள்.


 23-3-2005.

உங்கள் பிள்ளைகள் எல்லை மீறும் போது நீங்கள் எப்படி எடுக்கிறீர்கள். தாங்கிக் கொள்ள, ஏற்றுக் கொள்ள முடிகிறதா?
 ஆதலால் முதலில் பெரியவர்கள் உங்கள் எல்லைகளை    நீங்கள் அறியுங்கள். உங்கள் எல்லைக் கோட்டை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். எதிலும் அளவுடன் இருத்தல் சிறந்தது.
மயிலிறகு ஏற்றும் வண்டியானாலும்இ அதையும் அளவோடு ஏற்றாவிடில் அச்சு முறிந்து விடும் என்று திருவள்ளுவரும் தனது குறளில் ' வலியறிதல்' எனும் அதிகாரத்தில் கூறுகிறார்.

 எந்த வழி எமக்குச் சிறந்த வழியோ அவ் வழியைத் தெரிவு செய்யலாம். ஒருவரின் எழுத்துத் திறமை  சிறப்புற இல்லை, கோர்வையாக  எழுத முடிவதில்லையெனில்,  தன் பேச்சுத் திறமையில் கவனம் செலுத்தலாம். மிக நல்ல முறையில் பேச்சு வன்மையை வளர்த்து முன்னேறலாம். அது போலப் பேசுவதற்குக் கோர்வையாகச் சொற்கள் வரவில்லையா,   குரல் கீச்சுக் கீச்சு என ஒத்துளைக்க மறுக்கிறதா! பிறருக்குக் குரல் இனிமை தரவில்லையா? இருக்கின்ற எழுத்துத் திறன் மூலம் சுய திறனை வெளிப்படுத்திப் பிரகாசியுங்கள். இதுவே அறிவுடைமையயாகும்.

13-3-2005.

 மறைந்திருந்து மரத்திற்கு உதவும் வேர் அஃறிணை. மறைந்திருந்து மனிதனை உதைக்கும் மனிதன் உயர்திணை. உயர்திணை செயலினால் அஃறிணையாகிறது. அஃறிணை தன் செயலினால் உயர்திணையாகிறது. படைப்பினால் ஏற்பட்ட தவறல்லவிது. கடக்கும் மனித வாழ்வில் நிகழும் மனிதத் தவறு இது.

மழலைக்கு நடை பழக நடை வண்டி பலம். மழவனின்(இளைஞன்) நடை தொடர தன்னம்பிக்கை பலம். நடுக்கும் குளிரில் உழைக்க ஆரோக்கியம் பலம்.   நாவறியா மொழி சரளமாக   பேச்சுப் பயிற்சி பலம்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...