சனி, 28 ஆகஸ்ட், 2021

358. ( 921) ரோஜா முள்

 




ரோஜா முள்


சுந்தர வண்ண  இதழ்களால்

சுகந்த மணம் கொண்டு

மந்திரமாய் மனம் கவரும்

ரோஜாவைச் சுற்றியேன் முள் வந்தது!

பழகும் என்னருமைக் காதலியைச்

சுற்றும் அப்பாவைப் போலவா!


அழகிற்கு ஆபத்தும் இணைந்ததை

அழகாய் அருத்தமாய்க் காட்டுகிறதோ!


முட்கள் ரோஜாவிற்குக் காவலானால்

முள்ளில்லா மலர்களுக்கெது காவல்!

காவலில்லா மலர்களுக்கும் ஒரு கம்பீரம் உண்டல்லவோ!


குருவியும் ரோஜா முள்ளிற்குள்

ஒரு கூடு கட்டாது

தோட்டத்து விதைப்  பாத்திகளைக்

கோழி கிளறாது பாதுகாக்கும்

ரோஜாமுள் கவட்டைகள் நல்ல

காவலராகப் பாத்திமேல்  வலையாகும்.

 

(சிஐரிவியில்  கவிதையே தெரியுமா நிகழ்வில்  30-6-2006-ல்

என்னால் வாசிக்கப்பட்டது.)-------


28-8-2021





புதன், 25 ஆகஸ்ட், 2021

357. ( 920) உன்னத உணர்வு ----- எதிர்பாராத மழை

 


உன்னத உணர்வு ----- எதிர்பாராத மழை


ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆக்கங்களையும் மிகுந்த தேடுதலுடன் தான் எழுதி முடிக்கின்றனர்.  செய்து முடிக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை நான் இங்கு பார்க்கும் ஆக்கங்கள் கவிதைகள் - குடும்ப நிகழ்வுகள் ( திருமணம்-பிறந்தநாள்-மரணம்) உட்பட என்னால் முடிந்தளவு கருத்துகளிடுவேன். 

முடிந்தவரை இன்தமிழோடு பயணிக்கும் ஆசை. ஆக்கம் ஏற்றிய மனதின் உணர்தல் ஆனந்தமாகவே உணரப்படும.; மேன்மை உயர்வான அந்த உணர்வால் கருத்து நிறைந்த மனதில் திருப்தி வழியும்.

பலர் எனது இணையத் தளத்திற்கு வருவதேயில்லை. அவர்கள் மின்னஞ்சல் மட்டும் வந்தபடியே இருக்கும் தமக்கு இணையத்தளத்தில் கருத்திடுமாறு. நான் அவர்களுக்குக் கருத்துக்கேட்டு மின்னஞ்சல் அனுப்புவதில்லை. விரும்பினால் அவர்கள் வரலாம்.

பலர் முகப்புத்தகம் விட்டு விலகி வாட்;ஸ் அப்--இன்ஸ்ரகிறாம் என்று உலவுகின்றனர் - பருவமாற்றம் - பழகும் மாற்றம் என்றாக. அது அவரவர் விருப்பம்.

உறவு தேடியவர்கள்  ஒதுங்குவதாக – வாழ்வு முறையே மாறுவதாக கொறோனா வந்த மாதிரி அனைத்தும் மாறுகிறது. 

விசித்திர உலகம். மெய்யாகத் தெரிந்தது எல்லாம் பொய்யாக மாறும் காலம். கலகலச் சிரிப்பு மௌனமாகிறது ஆயினும் அன்பு ஒரு கைத்தடி தான்.

கருத்துகள் வாழ்த்துகள் ஒரு நதி போலத் தான். வளைந்து இறுக்கமாகியும் நீண்டு  வேகமாகியும் அசையும். நிறங்களும் கொடுக்கும். 

அநாதையாகும் பொன் பூத்த கவிதைகளும் உண்டு.  கருத்;திடக் கூட்டங்களும் உண்டு.  நற்குணமாய் நயந்து நல்வாழ்த்தும் நவில்வாருமுண்டு. நிற்கதியாய்க் கவிதை நிற்காமலும் போவதுமுண்டு. கற்றவர்கள் கருத்துச் சாமரத்தால் கலையரங்கமாயும் குற்றமின்றியும் விசிறுவார்கள். கற்ற  பெருமையது. பற்பலவாய்ப் பாராட்டும் பாராமுகமும் பெருமையான கைமாறாய்ப் பேறு கொள்வார் பலரும். கருத்தின்றேல் தமிழ் சாகாது.

ஊக்கமளிக்கும் பேச்சும் - செயலும் வரமே. முயற்சியே முன்னேற இடம் தரும்.  நல்ல அன்புச் சங்கமமே ஊக்கமளிக்கும் சிரஞ்சீவி அமிர்தம்.

நன்கு புரிந்தவர்கள் நட்பில் நிறைவு உண்டு.  புரியாதவர்கள் நட்பு நாடகம் தான்.;  எதிர்பாராத மழை தான் நட்பின் மன விரிப்பும்.

  24-8-2021






திங்கள், 23 ஆகஸ்ட், 2021

356. (919) அது தான் அம்மா

 





அது தான் அம்மா

00

தென்னையளவு கிணறு ஆழம்

என் தலை சுற்றியது

கிணற்றில் நிலா பளிங்காக

திணறவைத்தது தொடமுடியாது! அதுதான் அம்மா

00

ஆகாய நட்சத்திரங்களை எண்ணி

அம்மா மடியில் துயில வேண்டும்

அதிகாலை துயில் நீங்கிட

அம்மா கைத் தேநீர் வெண்டும்

00

ஆசை வரிகளிவை ஏக்கத்தில்

அம்மாவை கனவில் கண்டால்

ஆருயிர் அமைதியுறும் 

ஆகக் கூடிய சிறந்த வழி

00

இலண்டன் தமிழ் வானொலியில் காலைத் தென்றலில் சகோதரி சாயிபா பாடியது.இஇஇஇஇஇ6-6-2004


(மாலைத் தென்றல் நீயெனக்கு

மயக்கும் முல்லை நீயெனக்கு

மந்திரமொழி நீயெனக்கு

யந்திரக் காப்பு நீயெனக்கு

0;0

உயிரோடிவை மொழிந்திட

உணர்வாயுன்னை அணைத்திட

உணர்ந்திட உருவமாய் நீயில்லை

உறைந்துள்ளாய்  அம்மா என்னுள்ளே

00

காலம் கடந்த ஞானம் தான்

சீலம் உலகிற்குத் தரட்டுமே தூண் 

ஆலம்; விழுதான தாய்ப் பாசத்தேன்

ஞாலம் முழுதும் பரவட்டுமே

00

நெஞ்சில் நிறைந்தவள் நீ

நினைவில் கலந்தவள் நீ

கொஞ்சும் நெஞ்சினள் நீ

பஞ்சாக எனை;னை ஏந்தியவள்)


16.8.2021






வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

355. (918) உற்சாகச் சாரல்!

 





உற்சாகச் சாரல்!

00

விசிறிக்  கொண்டே யிருக்கும்

உற்சாகச் சாரலுக்குள் ஆனந்த

இசைக்குழல் சாரம் சேர்க்கிறது

இதுவே மனமுருகும் நேரமென்பது

00

பொங்கும் மாதங்கமாய் வற்றுவதேயில்லை.

நேர்மைப் பாய்விரித்துத் தூங்குபவன்

மானிடநேயம் கர்வம் கொள்ளும்

புன்னகைத் தேசமழிவதைத் தாங்குவானா!

00

ஆதிநிலத்து ஆளுமையை விருத்தி செய்!

எமுத்தென்பது ராஐபுரவிப் பயணம்.

சோதிசுடரிட மனப் புரவியில் ஏறு!

தேதியின்றி விழிக் கதவை மெல்லத் திற!

00

 13-8-2021







புதன், 11 ஆகஸ்ட், 2021

354. (917) அகரம் முதல் மரணம் வரை--- விரும்பாத பாதையில்

 






அகரம் முதல் மரணம் வரை

00

இப்போது விழுகிறாயா

முடிவு செய்!

அழவா எழவா!

ஆத்மாவைச் சிறை வை!

அணுவுக்கும் ஆகாயத்திற்கும் உறைகள்  செய்!

நல்ல ஆயுதம் செய்

நம்பிக்கை தான் பயணத்திற்கு

எடு!  பாடு! தேடு!

விழாமல் மீணடும்

மீண்டும் இருக்க எழு


00


விரும்பாத பாதையில்


மனம் விரும்பாத பாதையில் 

மகிழ்வென்று நடந்தாலும்

மனமொத்து நடக்க முடியாது

மனம் விரும்பிடாது 

தினம்  குளப்பமுள்ளே


00


மரங்கொத்தி மரங்கொத்துதலாய்

தரத்தோடு பொந்தமைக்கும்

மனங்கொத்தி மனங்கொத்தி

மனித உறவு பேணுதல்

கனியாது என்றும் எடுபடாது.


00

2008

-----------------------------------

பட்டு பருத்திச் சால்வையிட்டோர்

நாட்டுக்காரர்,   ஊர்க்காரர்,  விருந்திட்டோர்

பணமுடிப்பு,   பலகாரம் கொடுத்தோர்

குணம் குறியிலல்ல தரம் காணுதல்.


00


வரமெனும் அறிவியலைப் பொய் 

புரட்டின்றி அசையச் செய்

தரமற்றோருக்குக் கையளிக்கும் கௌரவம்

தரமுள்ளோரை அவமானப் படுத்தும்

தரமற்ற  கீழ்ச் செயலாம்.


00


தரம் காணுவோரின் தரமும்

சிரம் தாழாமை உரமாம்.

சொந்தத் திறமையில் வெல்லுதல்

உந்துதல் தரும் அனைவருக்கும்

சந்தத் தமிழுக்கே பெருமை


00


2020






428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...