வெள்ளி, 24 ஜூலை, 2020

289. (852 ) புகழைத் தேடி.....RADIO







https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10158887180723984/



புகழைத் தேடி.....

புகழ் ஒரு மாயை
அகழ்ந்து ஏந்தவே விரும்புவார்
மகிழ்ந்திட ஒரு மதிப்பு
முகிழ்ந்து வரும் சிறப்புடன்!

புகழைத் தேடியா வள்ளுவர் 
மகிழ்ந்து எழுதினார் திருக்குறள்!
நெகிழ்நத மரியாதை மகிமை
அமிழ்ந்திடாது உயர்ந்தது உண்மை!

வாய்ப்பு வாசலில் கோலமிட்டால்
ஆய்வின்றி வாகுடன் பயனாக்கினாலும்
ஏயப்பவரும்  சாய்ப்பவரும்  பலருளர்.
மாய்ந்திடாது சாதித்திடு! சாதனையேயுயர்வு!

புகழைத்  தேடு! ஆனால்
மகிழ்வற்ற பொறாமை  மகுடமிடும்!
துகிலுரியும்  பாராட்டு!   கவனம்!
தெளிவான நிதானம் வேண்டும்!

புகழ் முடக்கு வாதம்!
மகிழச் செய்யம் பேய்!
தமிழென் புகழைச் சொல்லுமா!
உமிழ்கிறேன்  என் வரிகளை.

  10-7-2020









வியாழன், 16 ஜூலை, 2020

288. (851 ) மாயயுத்தம். - துணைவே துணை
















மாயயுத்தம்.

(1. மீயான் - மாலுமி. 2. உத்தரித்தல் - அழுந்தல். 3. 

மாயவேடமின்றி மீன மேடம் பார்க்காது
மீயான் இன்றிப்  பாரபட்சம் இல்லாது
மாய யுத்தம், எதிராளியின்றி நடக்கிறது.
காயத்துள் சுவாசப்பையினுள் வேலையைக் காட்டுகிறது.
ஆய முடியாது  உலகு அலறுகிறது.

தொட்டதும் ஒட்டி தும்மலாலும் பரவல்
பட்டு உத்தரித்தலின்றிப் பழங்கால  முறைகளாம்
கெட்ட நச்சு நீக்கி மஞ்சள்,
கட்டு வேப்பிலை, இஞ்சி  எலுமிச்சையென்று
விட்டவைகளைப் பிணி நுண்ணியழிக்கப் பாவிக்கிறார்.

எண்ணற்ற உயிர்கள் இன்னும் அழிகிறது.
உண்ணுதல் நோயெதிர்ப்பாய்த் தேடி  அலைகிறார்.
மண்ணிலே நேசம், பாசம் ஒதுக்கி
கண்ணாலே பார்த்தல் போதும் ' தனித்திரு! '
விண்ணேகாது வாழ  ' ஒதுங்கியிரு! ' என்கிறார்.

 21-4-2020


துணைவே துணை

உடலாரோக்கியப் பிறப்பின் சாந்தம் உற்சாகம்
கடலானது  துணிவே துணைப் பிறப்பகமாம்.
உடற் பலத்திவ் வீரியக் கொடை
தடை போடும் நச்சுக் கிருமிகளை.

இடைஞ்சலை எதிராடிய ஆதி மனிதன்
அடைந்தான் துணிவால் நாகரீக வரலாறு.
விடையோ நிலாவில் காலடிச் சாதனை
தடையின்றித்  துணிவுடன் நச்சுயிரியை வெல்வான்.

துணிவின் அத்திவாரம் நேர்மை  உண்மை.
பணிவான அறிவால் செயற்கைத் தீவினைகளின்
திணிப்பைத் துணிவோடு பகுத்து நடந்து
அணியான கூட்டுறவின் ஆளுமையால் வெல்லலாம்.

தயக்கம் பலவீனம் துன்பத்தின் காரணம்
நயக்க முடிவெடுக்கும்  அதிகாரம் சுயபலம்.
இயக்கம் தீர்மானம் ' தனித்திரு!  இடைவெளியிடு! '
வியக்கும் நன்மையாய் நோயால் விலகலாம்!

 2-4-2020



வேறு:-  

உண்மை நேர்மை  மனதின் 
வெண்மை, ஒரு வகையில்
உண்மை இயற்கை நிலை
வெண்மை பலருக்கு ஒவ்வாமை

2008






திங்கள், 13 ஜூலை, 2020

287. (850 ) தேனினுமினியது புன்முறுவல்/ புன்னகை/ குழவிப் பருவம்













தேனினுமினியது புன்முறுவல்

சூனியமழிக்கும் கதிர்வீச்சாம்
நானிலம் துளிர்க்கும் உரமாம்
தேனினுமினிது அற்புதப் புன்முறுவல்
தனிமிகு சைகை
வனிதமான புன்னகை
இனிய முன் தோரணம்
பனி போன்ற இயற்கைப் 
பசுமை மலர்
பரவசம் முடுக்கும்
நவரசத் திறப்பு
இரசனைப் புன்முறுவல்
உரசுவது மானுடரையே

13-7-2020



புன்னகை




புன்னகை நல்லிதயத்தால்
  அழகாகத் தவழும்
புன்னகை   எத்தனை முறை சிந்தினாலும்
மென்னகை ஆடம்பரமற்று இதழ் விரிக்கும்
நன்னகை  இன்பநகை பலரைக் கவர்ந்திடும்

உன்னகை என்னகை எல்லோர் புன்னகையும்
நன்னகை அறிவால் ஞான நகையானால்
சின்ன நகையானாலும் அவைக்கு இணையாக
என்னகை உலகில் ஈடாகும் சொல்லுங்கள்!

பொன்னகையால் அழியும் உறவும் உலகும்
என்னமாய்ப் பதுக்கி குற்றவாளி ஆகிறார்
புன்னகை போதும் பொன்னகை வேண்டாம்.
ண்நகையிலும் புன்னகை வெண் நகை

2017


குழவிப் பருவம்

குழவிப் பருவம் மனிதனை மயக்கும்
சுழலை (வஞ்சம்) நிழலற்ற பளிங்கு இதயம்.
மிழற்றும் மொழித் தேன் பாகில்
கழலுதலாகும் மனிதனின் வைராக்கியம்.
மழலைக் காலம் மகா சொர்க்கம்.
நிழலற்ற நிசப் பண்பகளைப் பயிரிடும்
அழகான பருவம் பச்சைமண்

13-7-2020




வியாழன், 9 ஜூலை, 2020

286. (849 ) ஊடகம். வானொலி - சுரங்கப்பாதையின் முடிவில்







https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10158841595168984/

சுரங்கப்பாதையின் முடிவில்  

நெஞ்சக் கனதி பாலென வெளுப்பாக,
கொஞ்சும் ஒளிக்கற்றை இருட்டிற்கு
அஞ்சாதேயெனக்   கதிர்  வீசுவது உண்மை!
ஆம் சுரங்கப் பாதையின் முடிவு.

இது கண நேர இன்பம்!
பொதுவான சுரங்கத்தின் முடிவு  இறப்பே!
அதுவாக சுரங்கப் பாதையிலெனக்கு டயானா
மெதுவாக வந்து போகத் தவுறுவதேயில்லை. 

சிறு மகிழ்வையும் கொண்டாடி ஆனந்தி!
மறுமுனை சேரக் கவனம் கொள்வதாகவே
குறுகலான பாதைப் பயணமும்!  தன்னம்பிக்கையோடு
கிறுகிறுப்பின்றிச்   சாரத்தியம்  நிகழ்த்திடு! இது நியதி

நீருக்குள்ளிருந்து எழும் உருவமாகவே சடுதியாகப்
பாருக்கள் எதிர்பாராத பிரச்சனைகள்! விழித்துpரு!
ஊருக்குள் ஒருவனாய் உயர்ந்திரக்க முயன்றிடு!
சீருடை ஒளியில் முடிவில் கலந்திடுவாய்!

 26-6-2020





செவ்வாய், 7 ஜூலை, 2020

285. (848 ) பிரார்த்தனை








பிரார்த்தனை

நம்பிக்கைச் சமர்ப்பணம், அறிக்கை,
நன்றி, வேண்டுகோளெனப் பலவாகும்.
நல்லதொரு உயர்ந்த சக்தி
நிர்கதியில் தானாக வருவது
பிரார்த்தனையின் பலனிற்கு எமது 
விருப்பம் தீவிர எண்ணமாகட்டும்

பாடல்,  மௌனம்  வசனமாய்
ஆடலாயும் சமர்ப்பிக்கும் வேண்டுகோள்
நாடும் நம்பிக்கையுடன் செயல்
கூடும் விண்ணப்பம், நன்றி
தேடும் புகழ் பாடுதலென
தேடும் குழுநிலை மத அசைவுமாகும்

பிரார்த்தனை   காற்றில்  கேட்கப்படுகிறது.
தீராத நம்பிக்கை அத்திவாரமாகும்.
.உள்ளன்போடு பிரார்த்தனை செய்தல்
கள்ளமற்ற மனதின் விண்ணப்பம்
தௌ;ளத் தெளிவான பிரார்த்தனை ஆகும்.
தள்ளிட முடியாத அமைதி இதயம் பெறும்

22-10-2019





ஞாயிறு, 5 ஜூலை, 2020

284. (847 ) ஊடகம்- --உலகமே ஸ்தம்பிக்கிறது!


2020   சித்திரைக் கவிதை ஜீவநதியில்
இனிய நன்றி ஜீவநதிக்கு.



உலகமே ஸ்தம்பிக்கிறது!

குவியும் ஊடகப் பேரோசைகளால்
குரோனாப் புதினங்கள் காதடைக்கிறது. 
குறைவில்லா உணவுஇ பொருட்களென
குலை நடுங்க வீட்டின் உள்ளே.

குறைவான உடைஇ உணவுமின்றி
குடிமனைகளில் பாதுகாப்பும் இன்றி
குண்டெறிதலிலிருந்து தப்ப அன்று பதுங்கு
குழி வாழ்வு இப்படியாய் இருந்திருக்குமோ!

எத்தனையோ பேருக்கு எத்தனை சிரமமன்று!
இத்தனை சிந்தனை கொரோனாவாலெனக்கு
சுத்தமான போர் இலக்கியக்
கொத்தான அனுபவங்கள் ஒப்பீடாக.

படிப்பினையை வரப்பிரசாதமாக்கும் பெரும்
துடிப்பினைக்  கொடுப்பனையாகத் தரும்
முடிப்பே குரோனாப் பிரபஞ்சம்.
மடியும் வாழ்வின் கருமாவா இது!

அச்சம் சூனியமாய் உயிரியலின்
உச்சப் பலிகள் எண்ணற்றவை!
நச்சுடைய நுண்கிருமிகள் உலகைப்
பச்சென்று கவ்வி இருட்டாக்குகிறது.
உலகமே ஸ்தம்பிக்கிறது!

20-3-2020







வேறு      (கொரோனா பற்றிய இன்னொரு கவிதை)

விழிகாணா எதிரி

விழியில் விழாத எதிரியுடன் போர்!
அழிவில் மக்கள் எண்ணிக்கை கொடுமை!
பழி பக்கம் வருபவர்இ தொடுபவர்.
பார்க்கஇ பேச முடியாத எதிரியல்லவா!

திரையிட்டு இருமுதல் தும்முதல்
திகைப்பின்றி முகக்கவசம் இடுதல்
திறமையாய் அரச பேச்சுக்குப் பணிதல்
திக்கற்றதாக்கும் கெரோனாக் கிருமியை

இஞ்சிஇ தேசிக்காய்இ தேன்
அஞ்சாது சுடுநீர் பாவித்தல்
வஞ்சகமின்றிச் சுத்தம் பேணல்
நஞ்சுக் கொரோனாவை விரட்டியடிக்கும்.

மலேரியா மருந்துப் பரிசோதனை
மகத்துவம் தரட்டும் மருத்துவருக்கு.
மதிப்பின்று பழமைக்கும் பண்பாடுக்கும்
மங்காது மறுபடி இயற்கை வெல்லட்டும்:

 21-3-2020




428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...