2020 சித்திரைக் கவிதை ஜீவநதியில்
இனிய நன்றி ஜீவநதிக்கு.
உலகமே ஸ்தம்பிக்கிறது!
குவியும் ஊடகப் பேரோசைகளால்
குரோனாப் புதினங்கள் காதடைக்கிறது.
குறைவில்லா உணவுஇ பொருட்களென
குலை நடுங்க வீட்டின் உள்ளே.
குறைவான உடைஇ உணவுமின்றி
குடிமனைகளில் பாதுகாப்பும் இன்றி
குண்டெறிதலிலிருந்து தப்ப அன்று பதுங்கு
குழி வாழ்வு இப்படியாய் இருந்திருக்குமோ!
எத்தனையோ பேருக்கு எத்தனை சிரமமன்று!
இத்தனை சிந்தனை கொரோனாவாலெனக்கு
சுத்தமான போர் இலக்கியக்
கொத்தான அனுபவங்கள் ஒப்பீடாக.
படிப்பினையை வரப்பிரசாதமாக்கும் பெரும்
துடிப்பினைக் கொடுப்பனையாகத் தரும்
முடிப்பே குரோனாப் பிரபஞ்சம்.
மடியும் வாழ்வின் கருமாவா இது!
அச்சம் சூனியமாய் உயிரியலின்
உச்சப் பலிகள் எண்ணற்றவை!
நச்சுடைய நுண்கிருமிகள் உலகைப்
பச்சென்று கவ்வி இருட்டாக்குகிறது.
உலகமே ஸ்தம்பிக்கிறது!
20-3-2020
வேறு (கொரோனா பற்றிய இன்னொரு கவிதை)
விழிகாணா எதிரி
விழியில் விழாத எதிரியுடன் போர்!
அழிவில் மக்கள் எண்ணிக்கை கொடுமை!
பழி பக்கம் வருபவர்இ தொடுபவர்.
பார்க்கஇ பேச முடியாத எதிரியல்லவா!
திரையிட்டு இருமுதல் தும்முதல்
திகைப்பின்றி முகக்கவசம் இடுதல்
திறமையாய் அரச பேச்சுக்குப் பணிதல்
திக்கற்றதாக்கும் கெரோனாக் கிருமியை
இஞ்சிஇ தேசிக்காய்இ தேன்
அஞ்சாது சுடுநீர் பாவித்தல்
வஞ்சகமின்றிச் சுத்தம் பேணல்
நஞ்சுக் கொரோனாவை விரட்டியடிக்கும்.
மலேரியா மருந்துப் பரிசோதனை
மகத்துவம் தரட்டும் மருத்துவருக்கு.
மதிப்பின்று பழமைக்கும் பண்பாடுக்கும்
மங்காது மறுபடி இயற்கை வெல்லட்டும்:
21-3-2020
Subajini Sriranjan
பதிலளிநீக்குஇன்றைய சூழ
நிலையைச் சொல்லும் கவிதை
like
3-7-2020
உண்மை வெளி வந்தது சித்திரையில்.
எனக்கு இப்போது தான் வேளை வந்தது
இங்கு போட
அன்புடன் .மகிழ்ச்சி சுபா.
3-7-2020
Paavai Jeyapaalen
பதிலளிநீக்குவிழி காணா எதிரியில் உதிர்க்கும் கருத்துக்களுடன் கை கோர்த்து கவித்துவம் அழகு அதனை போடுகிறது.
“ஜீவ நதி” சம கால
இடரோடு கருத்தை
பொருத்தி தருகிறது.
புது கவிதை பாணியிலான ஆக்கத்திறன் உங்களிடம் நன்கு அமைந்துள்ளது
like
5-7-2020
Vetha Langathilakam
surprise!....அன்புடன் மிக மகிழ்ச்சி...
வாழ்க வளமுடன்.
Sarala Vimalarajah :- குண்டெறிதலில் தப்பினாலும் கொறுனாவால் தப்ப முடியாது அக்கா காலத்துக்கு ஏற்ற வரிகள் மிக அருமை அக்கா சிறப்பான வாழ்த்துக்கள் ✍️❤️🙏
பதிலளிநீக்கு5-7-2020
Like
Vetha Langathilakam :- திகதியைப் பாருங்கள்.
பழைய கவிதைகள். இப்போது தான்
போட நேரம் வந்தது.
மிக மகிழ்ச்சி சரளா.
ஆச்சிரியம்! பாவையும் கருத்திட்டுள்ளார்
Like
5-7-2020
நீக்குSarala Vimalarajah:- Vetha Langathilakam ஆம் பார்த்தேன் உண்மையான எழுத்தாளர்கள் நிட்சயமாக மற்றவர்களின் எழுத்தாற்றலுக்கு வாசித்து பதிவிடுவார்கள் அவர்களிடம் இன்னும் தேடுதலும் கூடும் நன்றி அக்கா.6-7-2020
வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரா.-----6-7-2020
நீக்குSujatha Anton :- அச்சம் சூனியமாய் உயிரியலின்
பதிலளிநீக்குஉச்சப் பலிகள் எண்ணற்றவை!
நச்சுடைய நுண்கிருமிகள் உலகைப்
பச்சென்று கவ்வி இருட்டாக்குகிறது.
உலகமே ஸ்தம்பிக்கிறது.
மனிதன் முன்னேற்பாடாக பாதுகாக்க வேண்டியதை தவறவிட்டு இப்போது தடுமாறுகின்றான்.
7-7-2020
Like
Vetha Langathilakam :- பார்ப்போம். முயலுவோம்.
Like
7-7-2020