வியாழன், 16 ஜூலை, 2020

288. (851 ) மாயயுத்தம். - துணைவே துணை
















மாயயுத்தம்.

(1. மீயான் - மாலுமி. 2. உத்தரித்தல் - அழுந்தல். 3. 

மாயவேடமின்றி மீன மேடம் பார்க்காது
மீயான் இன்றிப்  பாரபட்சம் இல்லாது
மாய யுத்தம், எதிராளியின்றி நடக்கிறது.
காயத்துள் சுவாசப்பையினுள் வேலையைக் காட்டுகிறது.
ஆய முடியாது  உலகு அலறுகிறது.

தொட்டதும் ஒட்டி தும்மலாலும் பரவல்
பட்டு உத்தரித்தலின்றிப் பழங்கால  முறைகளாம்
கெட்ட நச்சு நீக்கி மஞ்சள்,
கட்டு வேப்பிலை, இஞ்சி  எலுமிச்சையென்று
விட்டவைகளைப் பிணி நுண்ணியழிக்கப் பாவிக்கிறார்.

எண்ணற்ற உயிர்கள் இன்னும் அழிகிறது.
உண்ணுதல் நோயெதிர்ப்பாய்த் தேடி  அலைகிறார்.
மண்ணிலே நேசம், பாசம் ஒதுக்கி
கண்ணாலே பார்த்தல் போதும் ' தனித்திரு! '
விண்ணேகாது வாழ  ' ஒதுங்கியிரு! ' என்கிறார்.

 21-4-2020


துணைவே துணை

உடலாரோக்கியப் பிறப்பின் சாந்தம் உற்சாகம்
கடலானது  துணிவே துணைப் பிறப்பகமாம்.
உடற் பலத்திவ் வீரியக் கொடை
தடை போடும் நச்சுக் கிருமிகளை.

இடைஞ்சலை எதிராடிய ஆதி மனிதன்
அடைந்தான் துணிவால் நாகரீக வரலாறு.
விடையோ நிலாவில் காலடிச் சாதனை
தடையின்றித்  துணிவுடன் நச்சுயிரியை வெல்வான்.

துணிவின் அத்திவாரம் நேர்மை  உண்மை.
பணிவான அறிவால் செயற்கைத் தீவினைகளின்
திணிப்பைத் துணிவோடு பகுத்து நடந்து
அணியான கூட்டுறவின் ஆளுமையால் வெல்லலாம்.

தயக்கம் பலவீனம் துன்பத்தின் காரணம்
நயக்க முடிவெடுக்கும்  அதிகாரம் சுயபலம்.
இயக்கம் தீர்மானம் ' தனித்திரு!  இடைவெளியிடு! '
வியக்கும் நன்மையாய் நோயால் விலகலாம்!

 2-4-2020



வேறு:-  

உண்மை நேர்மை  மனதின் 
வெண்மை, ஒரு வகையில்
உண்மை இயற்கை நிலை
வெண்மை பலருக்கு ஒவ்வாமை

2008






9 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. கருத்திடலிற்கு மிக மகிழ்ச்சி அன்புடன் வேதா.
      20-7-2020

      நீக்கு
  2. Rathy Mohan :- காலத்திக்கேத்த வரிகள்.. தனித்திருந்து உயிரை காப்போம்
    20-7-2020
    Like

    Vetha Langathilakam :- கருத்திடலிற்கு மிக மகிழ்ச்சி அன்புடன் வேதா.

    பதிலளிநீக்கு

  3. Sarala Vimalarajah:- இயற்கை நோயினால் இன்னல்படும் உறவுகளுக்கான கவிதை சிறப்பு அக்கா
    20-7-2020
    Like

    Vetha Langathilakam :- கருத்திடலிற்கு மிக மகிழ்ச்சி அன்புடன் வேதா.

    பதிலளிநீக்கு
  4. Ruban Shiva..:- photo wish
    20-7-2020


    Sivaneswary Sivarasah:- காலத்திற்கு ஏற்ற பா. வாழ்த்துகள்.
    20-7-2020
    Like

    Vetha Langathilakam :- கருத்திடலிற்கு மிக மகிழ்ச்சி அன்புடன் வேதா.
    20-7-2020
    Like

    பதிலளிநீக்கு
  5. Jasmin Kennay:- Photo wish
    20-7-2020

    Baba Muthu
    எத்தனை யுத்தம் தண்டி வந்தோம் “இந்த மாய”யுத்தம் ? இதுவும் கடந்து போகும் நாங்கள் வீரத்தமிழர் அல்லவா 🙏
    20-7-2020
    Vetha Langathilakam :- கருத்திடலிற்கு மிக மகிழ்ச்சி அன்புடன் வேதா.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. மாயயுத்தம் கருத்துகள்.----

    கவிச்சிகரம் அமுதன் தமிழ்நாடு :- வாழ்த்துகள்
    21-4-2020
    Anbudan Srikandharaj :- Vetha Langathilakam அருமை அருமை சகோதரி
    like 21-4-2020
    Anbudan Srikandharaj : photo wishkhaAj;jk; fUj;Jfs;.

    பதிலளிநீக்கு
  8. துணைவே துணை கருத்து:-

    Shanmugam Vanjilingam துணிவின் பலமாய் ஒன்றாய் நின்று
    தனித்திரு இடைவெளியிடு
    என்றே வியக்கும் நன்மையால்
    வைரசு நோயை விரட்டுவோம்.
    அருமை கவியே! 1-4-2020

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...