வெள்ளி, 27 நவம்பர், 2020

315. (878) ஊடகம் - நேர்படப்பேசு - இதழ்

 






நேர்படப் பேசு


கூர்மையாக நீதிவழியாகக் கூறுங்கள்

ஆர்வமுடை வரிகளைத் தினம்

நேர்பட வீசுங்கள் நல் விதையை

ஊர்ப்பிள்ளைகள் விருத்தி உளவியலுக்காக


ஓளவையின் ஆத்திசூடிஇ கொன்றை வேந்தன்

பையப்பைய மூதுரை நல்வழியும்

தைரியம் நேர்மை வண்ணங்களை

வைரமாய் மனதில் உருவாக்கும்.


திருக்குறள் கலப்பையால் மனதைத்

திரு பெற உழுவதால் பாலைமனம்

திருந்தி சோலைவனமாகும் நல் விளைச்சலால்.

திருமை பெறுகிறது செந்தமிழாக


பாரதியார் வந்தார் பாநூறெனப்பாடி

சாரதியானார் தமிழ்வீதியில் செருக்காக

ஊரதிர இன்பத் தமிழ்த்தேன் சிந்தினார்.

நிமிர்ந்து நில் நேர்படப் பேசென்றார்.


தமிழ்வானம் சிறக்கநாமெல்லாம்

அமிழ்தினும் இனிய தமிழால்

அகிலம் எங்கும் சிறகடிக்கிறோம்

பேசுங்கள் தமிழைப்பாடிப் பறவையாகுங்கள்.


 3-1-2020






ஞாயிறு, 15 நவம்பர், 2020

314. (877) 2020 Deepavali

 


2020


அமைதியாக வீட்டில் பலகாரங்களுடன்  கொரோனாத் தீபாவளி  

நடந்து முடிந்தது. சிந்தனை மொழிகளுடனும் 

சிறந்த கவிதைகளும் ஒரு புறம். அடுத்த 

தீபாவளி கொரோனா இன்றி நடைபெற

இறைவனை வேண்டுவோம். ----2020








செவ்வாய், 3 நவம்பர், 2020

312. (875) (ஊடகம் - காற்றுவெளி) உயிரின் நிலா

 

காற்றுவெளி கார்த்திகை 2020 என் கவிதை
மனடார்ந்த நன்றி காற்றுவெளிக்கு.
------------------------------------

உயிரின் நிலா! 


பரிசுத்த நெருப்பு! ஆதித் தீ!

பகர்ந்திட வியலாத சக்தி

பங்கமற்று உலகைப் புரட்டும்

புது ஊற்று உத்வேகமுடையது


உணர்ச்சியின் மொழி வெளிப்பாடு

புணரி (கரை) காணாத தேடலிது

பிணக்கம்கொள்ளா இணக்கமிது

புணர்கிறேன் நேசிப்பான  அவத்தையை


தோன்றும் நுட்பமான கருத்து

ஊற்றெடுத்துப் பயன் கூட்டும்

றிற்காத நீரூற்று கவிதை

வற்றாது விழுவதேயதன் வேலை


கவிதைகளைப் பகிரக் கனகச்சிதமான

கவிதை மனம் வேண்டுமிது

பூவிதையான நுண்ணிய உணர்வு

பூவாக விரியும் மனம் நரைக்காது


எண்ணங்கள் கனத்த மனதால்

வண்ணக் கவிதைச் சுருளெழும்

திண்ணமாய் வெற்றியெட்ட வேண்டி

பண்ணட்டும் தொல்லைகள் உன்னுள்.


உயிரின் நிலா கவிதை!

பயிராவது  புதிதாயரும்புவது மகிழ்வு!

வயிரச் சொல் மணிமாலை

உயிர்பிக்கும் நாளும் தமிழுலகை


3-8-2020











428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...