திங்கள், 23 செப்டம்பர், 2019

190 (760 ) விழுந்த யன்னற் திரையை விலக்கினேன்.








விழுந்த யன்னற் திரையை விலக்கினேன்.

வெள்ளிக்கிழமை விடியும் பொழுதில்
வெள்ளி நீரூற்றாய்ப் பொங்கும் களிப்பில்
பள்ளிப் பிள்ளையும் தோற்கும் என்னிலை
துள்ளிக் குதிக்கம் ஒய்யார மனநிலை.
புது உத்வேகம் பொங்கும் உணர்வுகள்
அது விடுதலையெனும் மனஉணர்வுகள்
பரவசம் பொங்கிய பரபரக்கும் கால்கள்.
பாரம் விலகிய பண்டிகை மனம்.

வாரஇறுதியில் ஓய:வுக்கு மனம்
ஓரம் ஒதுங்கும் உல்லாசக் குணம்.
விரிக்கம் மனச்சிறகு பறக்கும் எத்தனிப்பு
சிரிக்கும் வதனம், நகைசிந்தும் மத்தாப்பு.
சிரித்துக் கொடுத்துச், சிரித்துவாங்கும்
சிறந்த வார இறுதிக்கு வாழ்த்து
கறந்த பாலுடன் கற்கண்டுச் சுவையாய்
மறந்திடாது கூறி மகிழும் வாழ்த்து

வெகுமதி கிடைத்ததாய் எண்ணம் நிறைந்து
வெளிச்ச மனதுடன் வேலை முடிந்து
வெள்ளி மாலை வீடு வந்து
வெண்ணிலாச் சிரிப்புடன் வாசல் திறந்து
வேகமாய் விலக்கிய மேலாடை களைந்து
ஓய்ந்து அமர்ந்த மகிழ்ந்து அனுபவிப்பது
வேய்ங்குழலினிமை வாரஇறுதி வாழ்த்துக்களே.
காவ் எ நைஸ் வீக்கென்ட்!
கூ  விக்கென்ட்! ( இது டெனிஸ் மொழியில்(

25-5-2000 ல்  இலண்டன் தமிழ்மொழி வானொலி
ர்p.ஆர்.ரி தமிழ் அலை வானொலி
6-11-2005 ல் பதிவுகள்.கொம் ல் வெளியானவை.











சனி, 21 செப்டம்பர், 2019

189. (759 ) தொலைந்தது மீண்டும் வந்தது...





தொலைந்துது மீண்டும் வந்தது...

காலப்பஞ்சுப் பொதியில் தீப்பிடித்து
நிர்மூலமான வீடுகள்,   காணிகள் புத்துருவானதென்று
உயிர் பிழியப்பட்ட மனம் அடங்கலாம்.
உருக்குலைந்த குடும்பமினித் திரும்புமோ!

ஆடிக்காற்றாய் அலைந்த தமிழர் மனம்
தேடியுறவுகளை அலைந்து பெருமூச்சிடும் மனம்
தொலைந்தது மீண்டும் வந்தது என்று
குதூகலித்துக் கொண்டாடுமோ ஒரு நாள்!

20-12-2010



வியாழன், 19 செப்டம்பர், 2019

188 (758 ) ஓடி உதைத்து விளையாடு..






ஓடி உதைத்து விளையாடு..

இருபத்திரண்டு பேர் இணைந்து
ஒரு பந்தை ஓடியுதைத்து
இழுபறிப் பட்டு விளையாடுகிறார்.
ஓரேயொரு பந்து செல்வழியை
ஊரே உலகமே பார்க்கிறது.
செல்வந்தரும் சேரிக்காரரும்
விளையாடும் உதை பந்தாட்டம்.
உதை பந்தாட்டச் சூரன்
கொழுத்த பணக்காரனுமாகிறான்.

29-6-2010.





187. (757 ) என்னைச் சுற்றி உங்கள் சிந்தனைகள்...







என்னைச் சுற்றி உங்கள் சிந்தனைகள்...

சின்னது பெரிதாக
அன்ன பல சிந்தனைகள்
பின்னப்படுகிறது பிறரையிட்டு
ஒரு மகான், சிந்தனையாளன்,
ஓரு செயல் வீரன்,
ஒரு திறமையாளனால்
பெரும் சிந்தனை வட்டங்கள்
உருவாகிறது இயற்கை.

சின்னச் சிறகடித்து
வண்ணக் கவியெழுத
என்னாளும் பாடுபடும்
சின்னக் குருவி நான்.
என்னைச் சுற்றி உங்கள்
உன்னத சிந்தனைகளை வாழ்த்தாகப்
பின்னிக் கொள்ளுங்கள். நான்
சிறந்த கவிதாயினியாக.- நன்றி.





புதன், 18 செப்டம்பர், 2019

186 ( 756 ) தமிழா! இன்றும் நீ அகதியா! உன்னைக் காப்போர் யார்?





                                                                                  



தமிழா! இன்றும் நீ அகதியா! உன்னைக் காப்போர் யார்?


தமிழா! தமிழா! உன் தலையெழுத்தென்ன!
தாய் நாட்டிலும் ஒரு அகதி நிலை.
தங்கும் இடமெங்கும் நீ அகதியன்றோ!
தரத்தில் நீயொன்றும் அகதியில்லையே!.

உலகில் உன் திறமையை நிரூபித்துள்ளாய்!
கலகம் அடக்கும் வகை தெரியவில்லை.
வெளிநாட்டிலும் உன் வேகத்தைக் காட்டுகிறாய்.!
வெகு சாதுரியமாய் உன் காய்களை நகர்த்துகிறாய்.

கம்பியூட்டரில் பிற நாட்டிற்கு ஆலோசகராகிறாய்!
கட்டிட வேலையில் அதை வாங்கி விற்கிறாய்!
கழுவும் வேலையிலிணைந்து கம்பெனி நிறுவுகிறாய்!
கடின உழைப்பில இலக்கம் ஒன்றாகிறாய்!

கலைகளில் உலக தரம் எடுக்கிறாய்!
கருமமே கண்ணாக தாயகத்திற்கும் உதவுகிறாய்!
கண்ணியமற்ற அரசால் பிறநாட்டு; ஆதரவு
கறுப்பாகத் தெரிகிறது, கவலை பெருகுகிறது.

கவசகுண்டலமாய் நல்ல கடின உழைப்பு
கைவசம் உள்ளது வெளிநாட்டுத் தமிழரிடம்.
கருணை மனதாளரான கர்ணமனத் தமிழரே!
கடவுளராக இன்று தமிழரைக் காப்போர்.








185 (பெண்மை - 35 ) பெண்கள் தினம் ஏன்!.









பெண்கள் தினம் ஏன்!

பெருமையுடன் மனிதம் வாழ்ந்தால்
பெண்கள் தினமேன்று உலவுமா!
நேசத்திற்கு உரியவர்கள் அடிமைகளல்ல
தூசிக்கு அவர்கள் சமானமல்ல

அதிகாரப் பலிப்பூக்களல்ல மானிடர்கள்
ஆணவப் பலிப்பூக்களல்ல பெண்கள்
ஆர அமர யோசியுங்கள்
ஆங்காரமி;ன்றிப் பிரச்சனைகளைத் தீருங்கள்.

பெண்மையை ஆணும்  ஆணைப்
பெண்ணும் அடிமை கொள்ளல்
பண்பற்ற மடமை நிழல்
மண்ணில் உலகவாழ்வு போட்டியல்ல

விண்ணையெட்டும் வேதனைப் பெருமூச்சும்
கண்ணீர் விழுதுகளும் என்றும்
நுண்ணம்புச் சரமாக வேண்டாம்.
நுட்பமான மென் சுவாசமாகட்டும்.

அகந்தை சுவாசம் அழித்து
அன்புக் குளிர்மை நிறைத்து
தன் குடும்பக் கவசமென
தளபதியாவாள். தண்புனலாக்குவாள் குடும்பத்தை

கனல்கவி. வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்   7-3-2020










வெள்ளி, 13 செப்டம்பர், 2019

184. (755 ) களவும் கற்பும்.









களவும்  கற்பும்.

அகத்திணை வாழ்வின் இரு பகுதியே
அகத்தினுள் இரகசியமானது களவும் கற்புமே
அகப்பொருள் இலக்கணத்தில் பேச்சதிகம் களவே 
அடுத்தவர் அறியாது நிகழும் ஒழுக்கமிதே.

பெற்றவருக்கு களவு நெறி குற்றமே 
சுற்றமெனும் சமூகம் கருதாது குற்றமென.
உற்ற காதல் கைகூடி ஊரறிய
வெற்றியடையும் திருமண உறவு கற்பு.

கற்பியலாம் திருமணம்  புக இருவழியாம்
அற்புத  மரபுநெறி களவுநெறியாமிது தொல்காப்பியம்.
கற்பும் களவுமுலகில் கைக்கொள்ளும் ஒழுக்கம்.
பற்றுகிறார்  இதைக் கைக்கோள் என்று.

மறைமுகமாய்க் கண்டும் கூடியும் இன்பிக்கும்
குறையுடைய வாழ்வு களவு எனலாம்.
மறையோதிச் சேர்ந்த திருமணம் கற்பாகி
இறைநிலை ஆதரவு பெறுவது கண்கூடு.


6-7-2018






இலங்கை ஞானம் சஞ்சிகையில் (october- 2019)

எனது கவிதை. நன்றி ஞானம் சஞ்சிகைக்கு.







183 . ( (என் மன முத்துகள்.11-) பண்பாடு பழகாமல் - கவிமுகம்





பண்பாடு   பழகாமல்  


பண்பாடு   பழகாமல்  பெரும்
கண்ணியம்   தொலைத்து   அரும்
பெண்ணியமும்  மதிக்காது   உள்ளம்  
புண்ணாக்கும்   வாழ்வு    ஏன்!

எண்ணத்தை  முதலில் பண்படுத்துங்கள்!
வண்ணமுடை   மனிதம்  செழிக்கும்.

19-6.2017






கவிமுகம் 

ஓ! மனிதா! கவிதை காலத்தின் கண்ணாடி கருத்துடை குறள் காலத்து விருப்புடை வாழ்வு வராதா! நெருக்கடி வாழ்வில் நொறுங்கும் மனிதா! மகத்துவப் பெறுமதியான மனிதம் தொலைக்கிறாயே! ஓ! மனிதா! சுயநலத்தைத் தூக்கியெறி! புனித திருக்குறள்கால வாழ்வைக் கையிலெடு!. 

24-4-2010.




வியாழன், 12 செப்டம்பர், 2019

182 (754 ) சொல் விதைக்க ஆசை மச்சான்.







சொல் விதைக்க ஆசை மச்சான்.

நெல் விதைப்பது மட்டுமல்ல மச்சான்
பல் போகமுதல் எனக்கு மிச்சம்
சொல் விதைக்க ஆசை மச்சான்.
கல்வி இல்லாவிடிலும் காற்று   வாக்கில்
நல்ல நாட்டுப் பாடல்கள் கேட்கிறோமே!

ஆச்சியிடம் சிறு பேச்சுக் கொடுத்து
மூச்சுக்கு மூச்சு பழமொழி கேட்டு
நீச்சல் அடிக்கணும்  நூறு சொல்லுக்குள்ளே
வீச்சாகப்   பொறுக்கியெடுத்து எங்க  புள்ளைங்களுக்குக்
கூச்சமில்லாம சொல்லி விதைக்கோணும்

நெல்லு தடவிக்கிட்டு  நீண்ட வரப்பினிலே
நெசமாலும் நாலு சொல்லு விசிறிக்கிட்டு
நடந்தாக்க  புள்ளைங்க கேட்டுப்புட்டு
புதிசாகச் சொல்லிடுமே  சொல்லு விதைப்பென்று.
நறுக்காகப் பாடினாக்க புரிஞ்சிடுமே  சொல்லுமச்சான்.

ஆல் போலக்காதலெனக்கு உன்மேல தான்
வேல் போலவுன் கண்ணு சொருகுதென் மேலதான்
சொல் விதைக்கோணும் மச்சான்தமிழ் சொல்லு
வில்லுப்பாட்டு, நாட்டுப்பாட்டு, சொல்லுக்குச் சொல்லு
சொல்லோணும்  என்னாசை மச்சான்.

17-2-2018





திங்கள், 9 செப்டம்பர், 2019

181 (753 ) விடுதலை






விடுதலை

விடு – தலையிடாது விட்டு  வி;டு
விடு – பந்தம் பாசம் விடு
விடு – கட்டுகள் அவிழ்த்து விடு.
விடுதலை – தன் விருப்பம் சுதந்திரம்.

கட்டுடல்  மனக் கிளர்ச்சியின் உணர்வுக் 
கட்டுகளால் இனிதாய்  கருத்தோடு விலகுதல்
அடிமை விலங்கை அறவே உடைத்தல்
மிடிமையால் ஏழையை மிதமாய் விடுவித்தல்.

பெண்,  விடுதலை பெருமை விடுதலை
கண்ணாம் நாட்டு  அரசியல் விடுதலை
பண்களில் மரபுக் கட்டு  இல்லாமை
எண்ணிறைந்த நன்மை தீமைகள் உண்டு

இன்னலின்றி கர்ப்பிணிக்கு  ஒரு பிரசவம்
நன்னடைத்தையில்  சிறைக் கைதிக்கு விடுதலை
துன்புறுத்தும் நோய்  நீங்குதல்  இன்பம்.
வன்முறைக் கணவனிடமிருந்து பெண்ணுக்கு வி;தலை

நீண்ட நடை தசை இளக்கும்
நீலநதியில் நீந்துதல் சுதந்திர விடுதலை.

கொட்டும் பேரிகைக் கோல் போலே
விட்டு நல் விடுதலையாகுன் உணர்விலே

20- 1 - 2016




விடுதலை.

கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டுச் செல்லுதல்.
கட்டுடல், மனம், உணர்வால் விடுபடல்.
அடிமை விலங்கு உடைத்து வெளியேறல்.
மிடிமை அழித்தல் ஏழையின் விடுதலை.
பெண் விடுதலை, அரசியல் விடுதலை.
கண்ணெனும் நாட்டின் சுதந்தரம் விடுதலை
பண்களில் மரபுக் கட்டற்ற விடுதலை.
எண்ணிறந்த விடுதலை நன்மை தீமையுடன்.

வன்முறைக் கணவனிடமிருந்து நகரும் விடுதலை
இன்னலற கர்ப்பிணியின் பிரசவ விடுதலை
நன்னடத்தையில் சிறைக் கைதியின் விடுதலை.
துன்புறுத்தும் நோய் விலகலின்ப விடுதலை.

26-1-2016





ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

180. (752 ) A man with two kids- vallamai-43






புனர்வாழ்வை நோக்கிப் புதுப்பயணம் மேற்கொள்ளும் மனிதனை நம்முன் காட்சிப்படுத்தியுள்ளார் திருமிகு. வேதா இலங்காதிலகம். 
மேட்டுக் காணி நோக்கியே

காட்டு வழியென்று ஆண்டவனையே
கேட்டுச் செல்கிறேன்எஞ்சிய
பட்டுச் செல்வங்களுடன் புனர்வாழ்விற்கு!
எட்டுவேன் என்னால் இயன்றவரை!

எசமானின் பிள்ளையோடென் பேரனையும்

நிசமாக உயிராய் வளர்ப்பேன்!
உப்பிட்டவரை உள்ளளளவும் நினையென்று
செப்பியது அன்று உண்மையோ!
தப்பாத ஒரு தருணமிதோ!

பிரளய வெள்ளம் ஊரோடென்னையும்

புரட்டிப் போட்டது எதுவுமின்றி.
இரண்டு செல்வங்களோடு என்னையும்
அரங்கநாதன் வாழச் செய்கிறான்!
இரட்சகனின் தீர்ப்போடு செல்கிறேன்!

20-12-2015




179 (751 ) இடை விலங்கு.







இடை விலங்கு.

செல்வந்தர் பிள்ளைகளை மக்கள் கூட்டத்தில்

செல்வாக்காய் தோற்பட்டியில் இணைத்துக் கையில்
நாகரீகமாய் பிணைப்பார்  நளினமான செயல்
நாசுக்கான பூட்டாக விலங்கு கையில்
கைக்குழந்தையானால் ஏணை கட்டி யருகில்
மைவிழி கரைய இணைவார் பணியில்.
நடமாடும் பிள்ளையை என்ன செய்வார்!
வடம் கொண்டு இடை பிணைத்தார்.
தடமின்றிப் போகாது கண்காணிப்பில் பிள்ளையது
முடமாகாது வாழ்விற்கு வேதனம் தேடுவது.
கடப்பாட்டாளர் ஏழைகளின் எளிமை வழி.
நடமாடல், விளையாடலுடனேதும் கடிக்கவும் வழி.
பாசத்தின் பிணைப்பு திருஷ்டிப் பொட்டில்
பேச வழியற்ற பேந்தும் விழியில்.
ஆசுடை தாக்கங்கள் பிள்ளையெதிர் காலத்திலே
மாசுடை சமூகப் பிழையாலும் இந்நிலையே!








178. (750) Vallamai Photo poem - 31






Vallamai Photo poem - 31 
எத்தனை சொல்லியும் அம்மாவின் பிடிவாதம்!
இத்தனை பாரம்! செய்த தலையலங்காரம்.!

மொத்த முகப்பூச்சும் சேர்ந்து அம்மாடியென்
சத்தெல்லாம் இழந்ததாய் களைப்பு! அலுப்பு!

இந்த நள்ளிரவில் படத்திற்கு நிற்பது
எந்தப் பிள்ளைக்குத் தரும் மகிழ்விது!

சொல்லுங்கள்எனக்கு ஆனந்தம் தரவில்லை
வெல்லுங்கள் பிடிவாதத்தாலல்ல அன்பால் எங்களை! 

மழலையரின் இன்றைய நிலையைத் தன் கவிதையில் எதார்த்தமாய்ப் பேசியுள்ள திருமிகு. வேதா. இலங்காதிலகத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!
28-9-2015


சனி, 7 செப்டம்பர், 2019

177 (749 ) மோன நிலை.







மோன நிலை.

சித்தார்தரா அவரைப் பின்தொடரும்
பக்த பிக்குணியா பால
தேரோவா! பல கேள்விகள்
தேரோடின காட்சியால் என்னுள்.
எதுவும் கடக்குமெனும் சாந்தம்
பொதுப் போதனை வதனம்
மதுமிகு மோகனப் புன்னகை
அது இறவாப் புன்னகை.

அத்யந்த சயனம் கொண்ட
அரசமரத்தடிப் புத்தர் எப்போது
அமர்ந்த நிலையில் மறுபடி
அழகு சயனம் கொண்டார்!
தீராத நாட்டுப் பிரச்சனையால்
பாராத முகமாய் அவர்
இவர்கள் திருந்தார்கள் என்று
நிகர்வில்லா ஆழ்ந்த உறக்கமா!

மோனப் புத்தன் தூக்கம்,
தானம் வாங்கும் தேரோக்கள்
வானம் வெளிக்குமா! தமிழ்
கானம் இலங்கையெங்கும் கேட்க!
புத்தன் போதனை நாட்டில்
சத்தின்றிப் போனது ஏன்!
உத்தம புத்தம் ஏனோ
மொத்தமாய்ப் பின்பற்றப் படவில்லை!

16-10-2016






176 (748 ) ஏழைக்கேத்த எள்ளுருண்டை!








ஏழைக்கேத்த எள்ளுருண்டை! 

நாணிட வேண்டிய விடயம்
பேணிப் பாதுகாக்காத விளையாட்டிடம்!
ஆணி களட்டிய பலகையது
ஆணிக்கையாகத் துணிந்து ஆசனமாக்கியது.

பட சட்டத்தின் நடுவில்
அடக்கிக் கட்டி, அமர்ந்து
படபடப்பின்றி ஆடுகிறான் ஊஞ்சல்!
அடடா! ஏழைக்கேற்ற எள்ளுருண்டை!

விழுந்திடாது பிடிக்கும் உறுதியும்
வழுகும் பலகையைக் கால்களால்
அழுத்தும் சாதுரியச் சிரிப்பும் 
வாழ்வின் சவாலின் ஏற்பு!

துள்ளும் மகிழ்வில் ஆடுகிறான்
உள்ளதை வள்ளிசாக அனுபவித்துப்
பிள்ளைகள் மகிழ்வாரவர் குணமது!
அள்ளும் வாழ்க்கைப் பாடமது!

பிள்ளைகள் விளையாட்டிடத்தை வளமாக
பிரிதியுடன் பராமரித்தல் அவசியம்
பிற்போக்கு நிலைமை மாறட்டும்!
பிரதான கடமை மேலிடத்திற்கு! 

(ஆணிக்கை - உறுதி)

9-1-2016.







428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...