சனி, 7 செப்டம்பர், 2019

169 (741) வர வழி விடு தாயே...







வர வழி விடு தாயே!

வர வழி விடு தாயே...
ஈர முத்தங்களாக இன்பங்கள் அரங்கேற 
தாய் மொழியைப் பேணி ஊட்டி
தீய்ந்திடாது நம் பண்பாடு காட்டி
வாய்மையாய் வாழத் திடம் ஊட்டி
சேய்களைத் தரவைரமாக வளர்க்கலாம்!

தாயகப் பெருமை, சிறுமைகள் அனைத்தையும்
சேயகத்தில் ஊட்டித் தேசியம் வளர்த்தும்
நாயகனாக (நாயகியாக) முளைவிடும் முல்லை அரும்புகளையும்
வையகம் போற்றும் விருட்சவேராக்கலாம்

மனிதனை மனிதனாக மதித்து உண்மையில்
மனிதநேயம் பேணக் கற்றுக் கொடுத்தால்
வனப்பான வாழ்வொழுக்கம் சீராக உயரும்.
இனிதான சுவாசம் வானவிற்கனவுகளாயுயரும்!

தனமான தன் வார்த்தை செயலில்
கன துணிவு கொண்டு துன்ப
மனவிருட்டின் தடமழித்து உற்சாகம் மொண்டு
இன வழியறிவோடு சிகரத்திற்கேகலாம்!

(இன வழி – மரபு வழி)

28-1-2015








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...