சனி, 7 செப்டம்பர், 2019

173 (745 ) கலாச்சாரம் விலகுமோ!







கலாச்சாரம் விலகுமோ!

சிந்திய அறுகரிசி சிதறிய பூக்களுமாயிது
எந்த வகையிலோ மனக்கோல முடிவது.
பந்தங்கள் நிற்பது சீதனப் பொருட்களின்
பக்கமாயும் இருக்கலாம் என்றும் கொள்கிறேன்.
அம்மியில் அரைபடும் வாழ்வாக பலரது
செம்மையாம் திருமண வாழ்வு அமைகிறது.
அம்மையப்பன் போல பத்திரமாக நடுவிலது
அமைவாகும் புகைப்படக்கருவியேன் புரண்டு கிடக்கிறது!

குளப்பத்தின் பின்னரான ஒரு ஓய்வா!
அளப்பரிய புயலுக்குப் பின்னான அமைதியா!
விளக்கங்கள் அம்மி, அருந்ததி, விளக்கிற்கென
வளமாகப் பலவுண்டு, வழக்கிலிவையெங்கே போகிறதோ!
அலைந்த ஆதிவாழ்வு அமரிக்கையாய் தாலிக்கட்டுக்குள்ளானது.
அந்த நிலைமாறி ஆதி நிலைக்கின்று
தலைகீழாகிறது தடுப்பாரெவரோ! வழி எதுவோ!
விலையற்ற கலாச்சாரம் பேணிக் காக்கப்படவேண்டும்!


5-3-2016





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு