திங்கள், 23 செப்டம்பர், 2019

190 (760 ) விழுந்த யன்னற் திரையை விலக்கினேன்.








விழுந்த யன்னற் திரையை விலக்கினேன்.

வெள்ளிக்கிழமை விடியும் பொழுதில்
வெள்ளி நீரூற்றாய்ப் பொங்கும் களிப்பில்
பள்ளிப் பிள்ளையும் தோற்கும் என்னிலை
துள்ளிக் குதிக்கம் ஒய்யார மனநிலை.
புது உத்வேகம் பொங்கும் உணர்வுகள்
அது விடுதலையெனும் மனஉணர்வுகள்
பரவசம் பொங்கிய பரபரக்கும் கால்கள்.
பாரம் விலகிய பண்டிகை மனம்.

வாரஇறுதியில் ஓய:வுக்கு மனம்
ஓரம் ஒதுங்கும் உல்லாசக் குணம்.
விரிக்கம் மனச்சிறகு பறக்கும் எத்தனிப்பு
சிரிக்கும் வதனம், நகைசிந்தும் மத்தாப்பு.
சிரித்துக் கொடுத்துச், சிரித்துவாங்கும்
சிறந்த வார இறுதிக்கு வாழ்த்து
கறந்த பாலுடன் கற்கண்டுச் சுவையாய்
மறந்திடாது கூறி மகிழும் வாழ்த்து

வெகுமதி கிடைத்ததாய் எண்ணம் நிறைந்து
வெளிச்ச மனதுடன் வேலை முடிந்து
வெள்ளி மாலை வீடு வந்து
வெண்ணிலாச் சிரிப்புடன் வாசல் திறந்து
வேகமாய் விலக்கிய மேலாடை களைந்து
ஓய்ந்து அமர்ந்த மகிழ்ந்து அனுபவிப்பது
வேய்ங்குழலினிமை வாரஇறுதி வாழ்த்துக்களே.
காவ் எ நைஸ் வீக்கென்ட்!
கூ  விக்கென்ட்! ( இது டெனிஸ் மொழியில்(

25-5-2000 ல்  இலண்டன் தமிழ்மொழி வானொலி
ர்p.ஆர்.ரி தமிழ் அலை வானொலி
6-11-2005 ல் பதிவுகள்.கொம் ல் வெளியானவை.











4 கருத்துகள்:

  1. Subi Narendran:- வெள்ளிக்கிரமாய் சாதாரண நாள் போல் இல்லாமல் எவ்வகைவு இனிமையான நாள் என்பதை கவிதை வரிகள் அழகாகச் சொல்கின்றன. வாழ்த்துக்கள்.
    17-12-2019
    Vetha Langathilakam :- அன்புடன் நன்றி மகிழ்ச்சி சகோதரி..

    பதிலளிநீக்கு
  2. Rathy Mohan :- வெள்ளிக்கிழமை பிடித்தமான நாள்.. புனிதமான நாள்.. நல்ல வரிகள் ஆனந்தமாய்..
    18-12-2019
    Vetha Langathilakam :- பேரன்புடன மகிழ்ச்சி உறவே ரதி

    பதிலளிநீக்கு
  3. Shanthy Bala :- வெள்ளிக்கிழமை என்றாலே அனைவருக்கும் பிடித்த நாள் என்பதை தங்களின் கவிதை வரிகளே சான்று..
    அருமையான கவிதை சகோதரி.
    22-12-2019
    ·
    Vetha Langathilakam :- உண்மையில்; இத என் மன எண்ணம் செமினாறியம் சென்று
    பெட்டகோவிற்குப் படித்த போது. (nursary training in Danish) அன்புடன் நன்றி மகிழ்ச்சி சகோதரி.
    23-12-2019

    பதிலளிநீக்கு
  4. Manjula Kulendranathan
    வாழ்த்துக்கள் வெள்ளிக்கிழமை அழகான கிழமை
    23-12-2019

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு