நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6 - வலையேற்றியுள்ளேன். வேதாவின் வலை 2 ல் ஒரு நிகழ்வு ஏழாவது வலையேற்றியுள்ளேன். இனி கோவைக்கோதை.புளோஸ்பொட்டில் 10 வது வலையேற்றுகிறேன்.
28வது கவியரங்கம் எனது 10வது
நிலாமுற்றம் 28வது கவியரங்கம் 23-7-2016-
அன்புடன் தமிழ் வணக்கம்.---------------------------------
தமிழ் மொழியது தமிழன் அடையாளம்.
தமிழை அணையுங்கள் மனதிற்குக் கும்மாளம்.
தமிழோடிணையுங்கள் வேர் காக்கும் தாராளம்.
தமிழாற் பேசுங்கள் விளைவுகள் ஏராளம்.
தன் மொழியால் இன்பம் விளையும் தாராளம்.
தமிழோடு தரமாக வாழுவோம்!..வாழுவோம்!
நடுவர் வணக்கம்.--------------
பனுவல் திறமையே! பண்புடை பெண்மையே!
மாண்பு மிகு பெண்மைத் தலைமையாம்
திருமதி சியாமளா ரகுநாதன் அவர்களே
வணக்கம். வாழ்த்துகள்.
சபை வணக்கம்.-----------
ஒன்று கூடி எம்மை ஆதரிக்கும்
அன்புள்ள சபையோரே பன்முகத் திறமைகளே!
சிறந்த படைப்பாளர்களே! அன்பு வணக்கம்
அன்புடன் ஆதரவு தாருங்கள்.--------------------------------
மக்கள் சமுதாயம் மனிதநேயம் தன்மானத்தோடு
குறிக்கோளுடன் நடந்தால் ஒழுக்கமுடைய முயற்சி
வெற்றி தரும் என்று கூறி எனது தலைப்பு :---------------------------------------------------
ஒழுக்கம். __________________________________
மேன்மை தந்து மேலோர் ஆக்கும்
தன்மையாம் ஒழுக்கம் ஆற்றல் பெருமையாம்.
நன்மை பெறும் மனிதக் கைத்தடியாம்.
வன்சொல் தவிர்த்தலும் ஒழுக்கத்தில் அடங்கும்.
இன்சொல் பேசுதலும் ஒழுக்கமாகும்.
சிடுசிடுத்து வெடுவெடுத்து வேண்டா வெறுப்பாக
கடுகடுவென மனவிகாரம் சொற்களில் காட்டலும்
கடும் நடவடிக்கைகளும் அடங்கும்.
ஒழுக்கவாளன் மானம் நிறைந்தவனாக இருப்பான்.
ஒழுக்கமற்றவன் செயல் பிறரைப் பாதிக்கும்.
இழுக்கு மக்கள் குமுகாயத்திற்கே ஏற்படும்.
ஒழுக்கத்திற்கு பக்தியும் பெருமளவில் உதவிடும்.
கனதியாம் பொறாமை சந்தேக ஒழிவு
மன அழுக்கு அகற்றுமென்பது உறுதி.
தொழும் கற்பு நெறியெனும் புனிதத்தை
வழுவாது ஆணும் பெண்ணும் காத்திடணும்.
ஒழுக்கமுடைமை திருக்குறள் அதிகாரம் பதினான்கு
முழுவதும் படித்தொழுகுங்கள். அறநெறி நீதிநூல்கள்
வழி வழுவாதேகுங்கள். உயர் அறச்சீலராகலாம்.
பயங்கரவாதமற்ற உயரன்பு மக்கள் சமுதாயமாகலாம்.
நன்றி நவிலல்._____________________
இந்த நல் வாய்ப்பு – களம் தந்த நிலாமுற்றக் குழுமம் - அங்கத்தவர்
இதைக் கேட்ட சபையோர் அரங்கத் தலைவர்
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 23-7-2016
சிவக்குமார் வீராச்சாமி •
பதிலளிநீக்குமேன்மையான வரிகள்
சுசிமணாளன் கவிச்சுடர் சுக்காம்பட்டி
ஒழுக்கம் தலைப்பல்ல வாழ்வின் தத்துவம் என சொல்லாமல் சொன்ன அம்மா வேதா வாழ்த்துகள்
23-7-2016
Inthrani Rani
ஒழுக்கமுடைமை...
உயர்ந்தகவிவரிகளில்!
Vetha Langathilakam
PV Sivakumar - சுக்காம்பட்டி ரெ.சின்னசாமி - Inthrani Rani மூவருக்கும் மிக்க நன்றியும் மகிழ்வும்.
முதுகு வலிக்க வலிக்க மளமளவென எழுதி
பிறகு கணனியில் எழுதி ஏத்த வேண்டுமே.!
அதற்கு உங்கள் வரிகள் தானே ஒத்தடம்.
நன்றி........
முத்துப்பேட்டை மாறன்
Author
Admin
23-7-2016
Kavignar Syamala Raghunathan
கற்பு நெறியது ஆணுக்கும்
பெண்ணுக்கும் அவசியமென. சுட்டிய. கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
சுதா பத்மநாதன்
அருமை சகோ
ஒழுக்கம் உயர்வுதரும்
இன்முகம் சிறப்பு தரும்
சுதா பத்மநாதன்
அருமை சகோ சிறப்பான பதிவு ஒழுக்கம்உயர்வு தரும்
இராமசாமி நாராயணன்
Admin
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.
அருமை அம்மா
முத்துப்பேட்டை மாறன்
Author
Admin
அருமையான வரிகள். வாழ்த்துகள்
கண்ணுசாமி பூமாலை
ஓழுக்கம்
சிறப்பான வரிகள்
23-7-2016
Vetha Langathilakam
Kavignar Syamala Raghunathan / சுதா பத்மநாதன் /
Ramasamy Narayanan/ Muthupet Maran/kannusamy Poomalai.
..மிக்க நன்றியும் மகிழ்வும்.
-----------------------------------------------
Rama Sampanthan
பதிலளிநீக்குவாழ்த்துகள் 1-8-2025