வேல்ஸ் பயணம் இரண்டாவது அங்கம்
ஒரு கோடிக்கும் மேலாக ஆடுகள் உள்ளன. மக்களிலும் பார்க்க ஆடுகள் அங்கு அதிகமாக உள்ளனவாம். வேல்ஸ் நாட்டு ஆடு வளர்ப்பு ஒரு நல்ல வருமானத்தை ஈட்டும் தொழிலாக இருக்கிறது. குறிப்பாக செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு இரண்டும் வேல்ஸ் நாட்டில் பிரபலமாக உள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் கம்பளி மற்றும் இறைச்சி பால் விற்பனை மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள். பாலும் சீஸ் ம் மிக விலை அதிகமாக உள்ளது. மகள் சொன்னா இடையிடையே ஆட்டுப் பால் வாங்கி பாவிப்பார்களாம்.
பாம்பு செட்டையைக் களற்றுவது போல ஆடுகளின் கம்பளித் தோல்களும் களன்று விழுமாம். அப்படிக் களன்று தொங்குவதை நேரில் பார்த்தோம் வாகனத்தில் போகும் போது.
வேல்ஸ் நாட்டு ஆடு கம்பளித் தோல்கள் வளரும் நிலையில் உள்ளது என்றால் அது ஒரு வகையான செம்மறி ஆடு அல்லது ஆடு இனத்தைக் குறிக்கிறது. வேல்ஸ் நாட்டில் இந்த வகை ஆடுகள் கம்பளித் தோலுக்காக வளர்க்கப்படுகின்றன. கம்பளித் தோல் என்பது ஆடுகளின் உடலில் இருந்து கிடைக்கும் ஒரு வகை உரோமம் ஆகும். இது ஆடைகள் மற்றும் பிற பொருட்களுக்கு பயன் படுத்தப்படுகிறது.
(7.6 கி.மீட்டர்) Llanberis to Snowdon போகும் புகைவண்டியில் திரும்பும் பயணம் ஸ்நோ டோன் உச்சிக்குப் பயணம்
ஸநோடோன் உச்சிக்குப் புகைவண்டியில் போகும் போது நீங்கள் காணும் நீர்வீழ்ச்சி இப்படி அழைக்கப்படுகிறது
Ceunant Mawr Waterfall. . சிலவேளை Llanberis Falls. vன்றும் அழைக்கப் படுகிறது . The waterfall is located near Llanberis station, where the train crosses the
Afon Hwch river.
மகளின் இடத்திலிருந்து இவரின் தங்கை வீட்டிற்கு புகையிரதம் எடுத்தோம். மூன்று மணி நேர ஓட்டம். இலண்டன் மிக மோசமாக மாறிவிட்டது. இட இருக்கை பதிவு செய்தோம். அதற்கு வாய்ப்பில்லை என்று எழுத்து ஓடுகிறது.
எதிலும் இருக்கலாம் என்று சொன்னார்கள். அப்படியே இருந்தோம். இயுஸ்ரனில் இறங்கினோம். ( Eusten)
பின்னர் ஊபரில் வீடு சென்றோம்.
மகள் வீட்டில் மதியழகன் படம் பார்த்தோம். இவரின் தங்கை மகள் வீட்டில் தக் லைவ்ஃ ம் - ருறிஸ்ட் பஃமிலி யும் பார்த்தோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக