செவ்வாய், 29 ஜூலை, 2025

493 (1035) கவியரங்கம் - 9

 

 493 (1035)   கவியரங்கம்  - 9

நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில்  நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6 - வலையேற்றியுள்ளேன். வேதாவின் வலை 2 ல் ஒரு நிகழ்வு ஏழாவது வலையேற்றியுள்ளேன். இனி கோவைக்கோதை.புளோஸ்பொட்டில்  9  வது வலையேற்றுகிறேன்.




தீது எனப்படுவது கண்டால்


நிலாமுற்றம் 32ம் கவியரங்கம்.  எனது - 9 20-8-16

தமிழ் வணக்கம்-------------------------

மக்களொரு கூட்டத்து வாழ்வு – அதை

நோக்கும் விதம் உணர்வு

பார்க்குமதன் சிந்தனை  கொண்டாடுதல்

மக்கள் பண்பாடாகிறது. – இவை

பழக்க வழக்கம்   உறவுமுறை

விழாக்கள்    கலைகளாக வெளியாகி

குழுவின் அடையாளம்   இருப்புமாகிறது.

எழுத்தில் பதிவாகி பகிரப்படுகிறது.

அது நம் தமிழ்மொழி. அத்தகைய தமிழிற்குச்

சிரம் தாழ்த்திய தமிழ் வணக்கம்.

தலைமை வணக்கம்---------------------------------

நிலாமுற்ற 32வது கவியரங்கத் தலைவரே

18 வருடங்கள் அனுபவமுடைய வைத்தியகலாநிதி

அறிவிப்பு மற்றும் இலக்கியத்துறையில் ஆர்வலர்

கவிதை எழுதுவதில் ஆர்வமான

டாக்டர் நாகூர் ஆரிப் அவர்களே

அன்பு வணக்கமும் இனிய

வாழ்த்துகளும்.     

சபை வணக்கம்:----------------------------

நிலாமுற்ற சபையோர்களே ஆதரவாளர்கள் அன்பான

கருத்தாளர்களே! கவியரங்கை ஆர்வமுடன்

பின் பற்றும் அன்பர்களே கவிஞர்கள்

கலைஞர்களே அன்பான வணக்கம்.

தீது எனப்படுவது கண்டால்

'' ரௌத்திரம் கொள் '' என்பதை

'' ரௌத்திரம் பழகு '' என்று

எடுத்துக் கொண்டு தொடர்கிறேன் -------------------------------

அநியாயங்களைக் கண்டு பேசாதிருக்காதே

நியாயமாகத் தட்டிப் பேசு

நேரடியாகக் கேள்விகள் கேள்.

அச்சப்பட்டுத் தீயவர்களிற்கு அடங்காதே!

மௌனமாகப் பேடியாக இருக்காதே

புத்தியுடன் எதிர்த்திடத் தயங்காதே.

விவேகமாய் அழுத்தமுடன் கேள்.

இன்றையது வன்முறை உலகம்.

பெண்ணிற்கு ரௌத்திரம் அவசியம்.

எதற்கும் ஆத்திரப் படுவது புத்தியீனம்.

ஆம் என்று தலையாட்டாதே

ஏன் எதற்கென்று அலசு.

மனப்பழக்கமாக்கி வைத்திடு கேள்வியை.

ரௌத்திரமடக்கி செயலில் காட்டுக.

''அஞ்சுவதஞ்சாமை பேதமை அஞ்சுவதஞ்சல்

அறிவார் தொழில்'' என்கிறார் வள்ளுவர் (குறள். 428)

நன்றி நவிலல்.:---------------------------------------

இந்த சந்தர்ப்பம் தந்த நிலாமுற்ற

நாயகன் சக நிருவாகிகளிற்கு

கேட்டிருந்த சபையோருக்கு

மனமார்ந்த நன்றியை மகிழ்வுடன் கூறி முடிக்கிறேன்.

வேதா. இலங்காதிலகம் டென்மார்க்  20-8-16

-------------------------------------------------------------





3 கருத்துகள்:

  1. Nagoor Ariff
    உங்களின் சிரிப்புக்குள்
    ரௌத்திரம் ஒளிந்திருக்கு.
    நியாயமாக நேரடியாக
    மௌனமாக புத்தியுடன்
    விவேகமாக அழுத்தமாய்
    கேள் என்று அழகாய்
    செதுக்கி விட்டீர்கள்.
    திறமை அருமை!
    21-8-2016

    Vetha Langathilakam
    ஒ! மிக மகிழ்ச்சி மருத்துவக் கவிஞரே.
    மிக்க நன்றி.
    நள்ளிரவாகி விட்டதே இலங்கையில்.
    இங்கு இரவு 8.30 வெளியே மாலை 6 மணி போல வெளிச்சம்.
    இனிய இரவு வணக்கம்.
    Nagoor Ariff
    ஆமாம். இப்போது சரியாக நள்ளிரவு 12 மணி.

    முத்துப்பேட்டை மாறன்
    Author
    Admin
    தஞ்சைத்தரணியன் முத்துப்பேட்டை
    4,790 points

    தாங்கள் பாடிய கவி கவியரங்க சிறப்பு..வாழ்த்துகள்!
    21-8-2016
    சுதா பத்மநாதன்
    அழகு
    Vetha Langathilakam
    தஞ்சைத்தரணியன் முத்துப்பேட்டை + சுதா பத்மநாதன் மிக மகிழ்ச்சி
    மிக்க நன்றி.

    கோவிந்தராசன் மலையரசன்
    Admin
    45,620 points
    சிறப்பான வரிகள்
    முத்துப்பேட்டை மாறன்
    Author
    Admin
    அருமை
    வாழ்த்துகள்
    21-8

    Velanganni Velu
    Admin

    எதற்கும் ஆத்திரப் படுவது புத்தியீனம்.
    ஆம் என்று தலையாட்டாதே
    ஏன் எதற்கென்று அலசு......நல்ல வரிகள்....
    22-8-2016

    -------------------------

    பதிலளிநீக்கு
  2. 7h
    Reply
    Vetha Langathilakam
    Sasidevi Riise
    Congratulations 😍
    30-7-2025
    1h
    Reply
    Vetha Langathilakam
    Vinoban Narayanan
    Yes‼️Yes‼️ கடந்த காலம் நிகழ் காலம் வருங்காலம் இம்மூன்றுக்கும் வாழ்வின் மக்களுக்கு விளக்கம் அளிக்கும் திருக்குறள் உலகிலே மாபெரும் நூல் மாணவர்கள் பயன்று அவ்வழியில் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்
    30-7-2025

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...