ஞாயிறு, 27 ஜூலை, 2025

492 (1034) 29வது கவியரங்கம் -எனது - 8

 

 நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில்  நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6 - வலையேற்றியுள்ளேன். வோகவின் வலை 2 ல் ஒரு நிகழ்வு ஏழாவது வலையேற்றியுள்ளேன். இனி கோவைக்கோதை.புளோஸ்பொட்டில் 8 வது வலையேற்றுகிறேன்.

29வது கவியரங்கம் -எனது - 8 


நிலாமுற்றம் கவியரங்கம் 29 --- 31-7-2016

தலைப்பு:-

பெண்கள் பெரும் மகிழ்வு கொள்வது.

தமிழ் வணக்கம்-----------------------------------------

தமிழில் பைபிள் போன்றது திருக்குறள்

முத்து மணிகள் ஏழாக வார்த்தைகளில்

கோர்த்த வைரக் குறள் வெண்பா.

வேத நூலாக வீடுகளில் வேண்டும்.

கீதை போல நாம் ஓதவேண்டும்.

நாடு மொழி இனத்திற்கப்பால்

வீடுபேறு சிறக்க உயர் அறங்கள்

கேடு இன்றிக் கூறும் தமிழ்மறை.

ஈடிணையற்ற வாயுறை வாழ்த்து திருக்குறள்.

என்று கூறிடும் என் தமிழ் வணக்கம்.

தலைமை வணக்கம்:--------------------------------------------------

தமிழில் பட்டம், சங்கத் தமிழ்நூல் ஆய்வு,

கல்வி ஒளியூட்டும் ஆசிரியச் சுடர்,

தமிழ் பணியாற்றும் கவிஞரே! தமிழ் மகளே!

இன்னும் திறமைகளுடன் வழி நடக்கும்

இன்றைய கவியரங்கத் தலைவர்

திருமதி இரா எழில் ஓவியாவே

அன்பு வணக்கம். கவியரங்கம் சிறக்க வாழ்த்துகளும்

சபை வணக்கம்---------------------------------------------------

நிலாமுற்றக் கதிர்களாம் கவிஞர்கள்,

கலைஞர்கள், எல்லோரையும்

ஊக்குவிக்கும் ஆதரவாளர்கள் விமரிசகர்கள்

என்ற பாத்திரமேற்றவர்கள்,

நடுவர்கள், சபையோர்களென

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

பெண்கள் பெரும் மகிழ்வு கொள்வது

கண்களென எண்ணுவது கணவர் பெற்றோர்.

கண்களிரண்டில் எது நல்லது என்றால்

திண்ணமான பதில் தருவது கடினம்.

மணம் புரிய முதல் பெற்றோரும்

மணம் பரிந்த பின்னர் கணவரென்றாலும்

இங்கு நல்ல கணவர் பெண்ணுக்கு

பொங்கும் மகிழ்வு தருமென்று கூறியெடுக்கும்

துணைத் தலைப்பாக:-

நல்ல கணவர்:----------------------------------------------------

நல்ல கணவர் அமையக் கொடுப்பனையுடைய

நல்ல மனைவி மனம் மகிழ்வாள்.

நல்லவர் இருவருமேயானால் குழந்தைகள் நல்லவராவர்

நல்லறம் நிறைய ஞானமும் பெருகும்.

கட்டுப்பாடு அடிமைத்தனமின்றி விட்டுப் பிடித்து

திட்டமிடலால் குடும்ப உயர்வு பெருகும்.

வட்டமிடும் சிறந்த குடும்ப ஆதிக்கம்.

தொட்டு விடும் நற்கணவர் பட்டம்.

வரு விருந்தோம்பி வாழ்தலில் அகப்

பெருமை சிறந்திடுமே! மனைவியை மதிக்காது

சருகாக மிதித்து அழுத்துதலில் கணவர்

சிறுமையடைகிறார் வாழ்வு மகா துன்பியலாகிறது.

மகிழ்ச்சி தேசம் தருபவர் இருவரிணைப்பில்

மனம் தொட்டு அன்பால் போர்த்தி

கனம் மறக்கச் செய்யும் மந்திரக்காரர்.

தினமொயிலான நினைவாலூக்கம் தருபவர் கணவரே

நன்றி நவிலல்---------------------------------------------------------------

உயிரெழுத்து உயிருள் பயிராகும் முதலெழுத்து.

உயிர் மெய்ப் பயிரெழுந்து உணரவைக்கும் அகிலத்தை.

மொழிகள் அழகுடை மலர்கள். மொழிகள் உருசியுடை கனிகள்.

விழி நிறைந்த இன்பத் துளி. அழிவற்ற பாதைக்கு ஒளியாம்

தமிழை இங்கு அரங்கேற்ற களமமைத்த குழவினருக்கு

நன்றிகள்.....நன்றிகள்

இதைக் கேட்ட சபையோருக்கு நன்றிகள்.

31-7-2016


  



  


3 கருத்துகள்:

  1. GokulRaj Stella
    அருமை சகோ நன்றி 1-8-2016
    எழில் ஓவியா எழில் ஓவியா
    மொழிந்த மங்கையே ! வளமுடையுன்றன் கவியது கண்டு ! வளர்பிறை யானதென் உள்ளம் ! நறுக்கெனச் சபைக்கு நயமுடன் சொன்னாய் ! கிறுக்கிய வரிகள் சிரிக்குது நிலவாய் ! பெருமையே கணவர் பெயரது சொன்னால் ! அருமையானது அவ்வடையாளம்தானே ! அருமையருமை !
    Vetha Langathilakam
    எழில் ஓவியா ..மிக்க நன்றி சகோதரி இனிய பதிவிற்கு.
    மனமகிழ்ச்சியும் நன்றியும்..2016
    வாழ்க நீடு.
    எழில் ஓவியா எழில் ஓவியா
    அறமுடைத் தமிழெனவே மொழிந்த .............
    முத்துப்பேட்டை மாறன் 2016
    Author
    Admin
    Raja Kumaran
    கண்ணான கணவனே
    இந்த வாழ்க்கையின்
    பார்வை...!
    கவியருமை
    Vetha Langathilakam
    Gokulraj Stella மனமகிழ்ச்சியும் நன்றியும்..
    உறவே.
    Vetha Langathilakam
    Raja Kumaran மனமகிழ்ச்சியும் நன்றியும்..
    உறவே.
    Vetha Langathilakam
    Muthupet Maran மனமகிழ்ச்சியும் நன்றியும்..
    உறவே. 2016
    இராமசாமி நாராயணன்
    Admin
    கணவனின் கண்ணியம் உரைத்திட்ட பெண்ணீயம்
    அருமை

    Vathana Vathana
    மஞ்சள் குங்குமம் மங்கையின் பாக்கியம் அருமை
    Vathana Vathana
    தாய்மையே பெரு மகிழ்ச்சி. அருமை
    Vathana Vathana
    பிள்ளைச் செல்வமே பெருஞ்செல்வம். அருமை
    Vathana Vathana
    தாய்மை எனும் உணர்வு. பெண்ணின் பெருமகிழ்வு. அருமை

    பதிலளிநீக்கு
  2. M.A. Ramamoorthy
    மிக அருமை..
    "நல்ல கணவர் அமையக் கொடுப்பனையுடைய
    நல்ல மனைவி மனம் மகிழ்வாள்.
    நல்லவர் இருவருமேயானால் குழந்தைகள் நல்லவராவர்
    நல்லறம் நிறைய ஞானமும் பெருகும்.
    கட்டுப்பாடு அடிமைத்தனமின்றி விட்டுப் பிடித்து
    திட்டமிடலால் குடும்ப உயர்வு பெருகும்.
    வட்டமிடும் சிறந்த குடும்ப ஆதிக்கம்.
    தொட்டு விடும் நற்கணவர் பட்டம்."
    வாழ்த்துகள்.
    30-7-2025
    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy மிக்க நன்றி
    மிக மகிழ்ச்சி சகோதரா.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  3. ரா. அமுதா
    அருமை சகோதரி
    வாழ்த்துகள்
    30-7-2025
    Vetha Langathilakam
    ரா. அமுதா
    மிக்க நன்றி
    மிக மகிழ்ச்சி சகோதரி.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...