வெள்ளி, 30 அக்டோபர், 2020

310. (873) (ஊடகம் -சிட்னி வானொலி...) திறந்த புத்தகம்

 

https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10159170328623984  


திறந்த புத்தகம்.


சுயசரிதை திறந்த புத்தகம்.

பயமின்றியெழுதத் துணிபவர் சிலரே

சுயநாட்குறிப்பும் சில மனிதரின்

நயமுடை வரலாறு பதிக்கும்.


எல்லாவற்றையும் எல்லோரும் எழுதுவார்களா!

வெல்லமாய்க் கரைந்தினிக்கும் புத்தகமாய்

மெல்லக் கதை வெளியாகி

வென்றிடுமா வாழ்க்கை நூலகத்தில்.!


நவரசங்கள், பள்ளங்கள், சிகரங்கள்

தவமுடை வாழ்வில் இயற்கை

துவண்டிடாது தடை தாண்டினால்

உவப்புடை உயரம் எட்டலாம்.


குடும்பப் பெருமையை நற்

துடுப்பாக்கிப், பலமாகக் காத்திடல்

வடுவில்லாப் பக்கங்கள் பெருக்கும்.

சிடுசிடுப்பற்ற புன்னகை பலமாக்கும்.


அகண்ட சாதனையாகத் திறவுகோல் 

மிக உண்மையான விருப்பமே!

அகம் காதலுடன் தூரிகையாகும்.

முகவுரை, அட்டை, முடிவுரை தானாக விரியும்.


கணவர், குழந்தைகள், பெற்றோர், பேரப்பிள்ளைகள்

உணர்வுடை பளபளக்கும் தங்கப் படங்கள்!

திணறடிக்கும் இறைப் பரிசுகள்.!

வணங்கிடும் சிறப்புடை ஆசீர்வாதங்கள்.!


மூச்சிரைக்கும் வாழ்வென்பது உண்மையே!

ஆச்சரியம், ஓட்டப்  பந்தயமே!

நீச்சலடித்து நற்தருணத்தைப் பதிப்போம்.

முயற்சியுடன் நம்பிக்கைச் சுடரேற்றுங்கள்.!


9-10-2020









செவ்வாய், 20 அக்டோபர், 2020

309. (872) ( - ஊடகம் - ஜீவநதி ) புகழ்

 புகழ்..

புகழ் தேடலொரு பக்கம்
புகழ் அழிப்பு மறுபக்கம்.
திகழ்ந்திடுமிது பாலைவனச் சோலை
பகட்டான ஒளி !..... மாந்தர்
திகட்டாது நாடுவார் தேடுவார்
கைதட்டலுக்கு ஏங்கும் ஒரு
வெல்வெட் புல்வெளி!...வதனம்
வண்ணமடித்து ஒளிரும்!...புகழ்
வல்லமை வினைகளின் எதிரொலி!
செல்லப் புகழ்மண்டபப் பிரவேசம்.
மனிதன் மனிதனா என்று
மதிப்பிடும் சோதனைக் கருவி.
தானாக வரும் புகழ்
நீயாக சம்பாதிக்கும் புகழ்
தேய்ந்தும் தேயாத சுவையுடைத்து
செல்வம், அழகின் புகழ்
செல்வோம் என்று போகும்
ஞானம் மேன்மையறிவுப் புகழ்
சூனியம் ஆகாத நிரந்தரம்!
நானிலத்தின் அதிசய மந்திரநாண்.
என் புகழென் கவிதை
மென் சிறகு விரித்து
தன் பயணம் தொடரும்
பணிவு கடலாக, ஒழுக்கம்
சிகரமாக, மொழி நித்தியமாகட்டும்!
முயற்சி, தேடல் விவேக
ஆன்மாவின் தணியாத தாகம்
பரபரப்பானது புகழ் வீடு
சக்தி, பெயர் புகழால் முக்தியல்ல
ஒற்றுமை அன்பே சொர்க்கத்தில் நந்தவனம்.

பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 12-7-2020











வெள்ளி, 16 அக்டோபர், 2020

307. (870) (ஊடகம்- ரேடியோ ) முடிவுகள்.

 https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10159128811698984

  முடிவுகள். 


திறமை மின்னவோ, வளரவோ

தினையளவும் வேண்டாம் திக்கரித்து (வெறுத்து)

திறமையாயுயிரைத்;  திட்டமாய்க்  கொலைத்தனர்.

வறுமையாகிறது சுஷாந்தின் வழக்கு முடிவுகள்.


முடிவுகள் முடிசூடவும் மனிதன்

அடியோடு அழியவும் காரணியாகிறது.

அடிவைத்துயரும் வானுயர் வாழ்வின்

முடிவுகள் ஏற்றப் படிககட்டுகளாகலாம்.


படியும் நிறைவு, பயன்,

துடிக்கும் சாவு, தீர்மானம்

முடிவு,  இறுதி, எல்லை கருத்துகளாம்

முடிவுகள் தொடர்கதை தான்.


துரதிஷ்டம், பச்சாத்தாபங்களில புரளாது

மனச்சாட்சியைப் பாதுகாத்திடுங்கள்.

மேசமான முடிவு கெட்ட

பாதையால் நிகழும் பொறுப்பே


இடறி  விடும் முடிவுகள்

கடனெடுத்தல்,  தவறான துணையே.

பட்ட மரத்திலொரு மலராகலாம்

திடமான  நன் முடிவு.

அது பாலைவனத்தின் சாரலாகும்.


பா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க். 24-9-2020







வெள்ளி, 2 அக்டோபர், 2020

305. (868) (ஊடகம்) உயிரேந்தும் கலச ஒளி! (அன்பு)

 


https://www.facebook.com/sownthary.sivananthan/videos/10159087990158984


உயிரேந்தும் கலச ஒளி! (அன்பு)


புத்தியில் பயிரிடும் மானுட  அகல்விளக்கு

சத்தியமான உலக வனத்தின் உறவுக்கயிறு

சித்திக்கும் மதுரச இன்பக் கணை

சுத்தமாயிது அழிந்தால் நிர்வாண மனமே


என்புமுருகும் அதிசய இன்ப ஊற்று!

இன்புறும் ஒரு வார்த்தை, நோக்கு,

அன்பான தொடுகை அற்புதங்கள் செய்யும்.

பென்னம் பெரிய யானை பலமீயும்.


துயர் நீக்கும் அச்சாணி  ஆதரவு!

பயிராகும் ஆதரவு மாசற்ற தேசியகானம்

உயிரையும் கொடுக்கும் தன்மையது அன்பு

நயமுடையிவ் மூன்றேழுத்தே நானிலம்  ஆளுகிறது


மன்பதை சிறந்து வாழ தீருவள்ளுவரும்

அன்புடைமையை விளக்குகிறார் அறவொளி வாழ

வன்மையற்று ஆன்மாவிற்குள்  தேன் சொரியும் 

அனபு   உகையாளும்! அன்பு செய்யுங்கள்!.


 11-9-2020









428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...