செவ்வாய், 20 அக்டோபர், 2020

309. (872) ( - ஊடகம் - ஜீவநதி ) புகழ்

 புகழ்..

புகழ் தேடலொரு பக்கம்
புகழ் அழிப்பு மறுபக்கம்.
திகழ்ந்திடுமிது பாலைவனச் சோலை
பகட்டான ஒளி !..... மாந்தர்
திகட்டாது நாடுவார் தேடுவார்
கைதட்டலுக்கு ஏங்கும் ஒரு
வெல்வெட் புல்வெளி!...வதனம்
வண்ணமடித்து ஒளிரும்!...புகழ்
வல்லமை வினைகளின் எதிரொலி!
செல்லப் புகழ்மண்டபப் பிரவேசம்.
மனிதன் மனிதனா என்று
மதிப்பிடும் சோதனைக் கருவி.
தானாக வரும் புகழ்
நீயாக சம்பாதிக்கும் புகழ்
தேய்ந்தும் தேயாத சுவையுடைத்து
செல்வம், அழகின் புகழ்
செல்வோம் என்று போகும்
ஞானம் மேன்மையறிவுப் புகழ்
சூனியம் ஆகாத நிரந்தரம்!
நானிலத்தின் அதிசய மந்திரநாண்.
என் புகழென் கவிதை
மென் சிறகு விரித்து
தன் பயணம் தொடரும்
பணிவு கடலாக, ஒழுக்கம்
சிகரமாக, மொழி நித்தியமாகட்டும்!
முயற்சி, தேடல் விவேக
ஆன்மாவின் தணியாத தாகம்
பரபரப்பானது புகழ் வீடு
சக்தி, பெயர் புகழால் முக்தியல்ல
ஒற்றுமை அன்பே சொர்க்கத்தில் நந்தவனம்.

பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 12-7-2020











6 கருத்துகள்:

  1. Rama Sampanthan
    சிறப்புடைமை வாழ்த்துகள்.
    20.10-2020
    Vetha Langathilakam
    இனிமை அன்புடன் மகிழ்ச்சி bro

    Denmark Shan Subramaniam
    வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
    20-10-2020

    பதிலளிநீக்கு
  2. Vetha Langathilakam to Shan
    இனிமை அன்புடன் மகிழ்ச்சி
    20-10-2020
    அருள் நிலா வாசன்
    வாழ்த்துகள்
    20-10-2020
    Vetha Langathilakam
    இனிமை அன்புடன் மகிழ்ச்சி arulnila
    20-10-2020
    Subi Narendran
    அருமை.வாழ்த்துக்கள்
    20-10-2020
    Vetha Langathilakam
    இனிமை அன்புடன் மகிழ்ச்சி Subi......

    பதிலளிநீக்கு
  3. Rathy Mohan
    வாழ்த்துகள்
    20-1o-2020
    Vetha Langathilakam
    இனிமை அன்புடன் மனமகிழ்வு Rathy...


    Shanthy Bala
    அருமை..
    வாழ்த்துக்கள் சகோதரி..
    20-10-2020
    Vetha Langathilakam
    இனிமை அன்புடன் மனமகிழ்வு Shanthy....

    பதிலளிநீக்கு
  4. Nila Puttalam
    photo congratz 21-10-2020
    Vetha Langathilakam
    appaada!....nalama?....after a long time...!!!!!!

    பதிலளிநீக்கு
  5. Ilakkiya Maalai
    சிறப்பான வாழ்த்துகள்
    22-10-2020
    Vetha Langathilakam
    Ilakkiya Maalai அன்புடன் மனமகிழ்வு
    22-10-2020

    Paval Rajadurai
    அருமை,சிறப்பு வாழ்த்துக்கள்.
    22-10-2020
    Vetha Langathilakam
    Paval Rajadurai அன்புடன் மனமகிழ்வு

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு