செவ்வாய், 14 ஜனவரி, 2020

240. (807 ) ஊடகம்- வளரி - இனியொரு புதிய தை - 2020 - தை தை என







இணையத்தள, முகநூல் உறவுகள்- எமது உறவினர் நண்பர்களுக்கு எல்லோருக்கும் தைத் திருநாள் வாழ்த்துகள்.

இனியொரு புதிய தை - 2020


இனியென்ன புதிய தை இரண்டாயிரத்து இருபது
இணைந்தாடுது எம்முடன் இசைவாகத் தொடரட்டும்
வெள்ளைப்பனி மூடாத ஒரு நத்தாருடன்
உள்ளே வருகிறாய் கள்ளமின்றி உறவாடுவாயா

சிற்றலகால் சிறுகச் சிறுகக் கொத்தி வெளியான
புத்தம்புதுக் குஞ்சாய்ப் புது தையே நிற்கிறாய்!
அந்தகார இருட்டிலொரு சுந்தர ஒளியாயெமக்கு
இந்தப் புதுத்தை வந்து குந்தட்டும் நலமாக.

ஒரு இனத்தின் மனிதநேயத்தைக் கருவறுக்காத
அருமைத் தையாக உரிமைகள் தரட்டும்
ஞாபக வீதியில் ஞானமுத்திரை பதிக்கும்
ஞானஒளியாக வா! ஞானசூனியமாக அல்ல

எம்மதி மகிழ்ந்திட நிம்மதி சுமந்து வா!
அம்சமாய்த் துரோகம் விரோதமழித்து வா!
இம்சையான வேற்றுமை நீங்க வா!
சம்பூரண ஒற்றுமை, ஆரோக்கியமேந்தி வா!

கவிச்சுடர் வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க். 14-1.2020






தை தை என( வளரிக்கு)


தை தையெனத் தைமகள் வருகிறாள்
தரணியில் நாம் மகிழத் தைமகள் வருகிறாள்.
தம் மகிழ்வை தரமாக உழவர்கள்
தைப்பொங்கல் நாமம் சூட்டிய நாள்
தகவுடன் வெளிப்பாடு காட்டும் நிகழ்வை
பகையினை விதைத்துப் பகுதியாய் வளர்த்து
வையகம் கொண்டாடும் தமிழர் திருநாள்.
பங்கு போடும் மனநிலை எரித்து
பகிர்வோம் நம் அன்பைத் தொகுத்து
பாங்காக நமது பண்பை வளர்த்து
பக்குவமாய் பல திறமைகள் விரித்து
இளமையை மனதிலூட்டும் இன்பப் பொங்கலிது.
பங்கிடுவோம் தித்திப்புப் பொங்கலைச் சிரித்து
உழவர்கள் கொண்டாட உவகை தந்திடும்
உழைத்த மக்கள் உறவுகளோடு புத்தரிசிப்
மனைகள், மாட்டுத் தொழுவங்கள் சுத்தமாக்கி
மாவிலைத் தோரணங்கள் ஆடும் தையிது
பகலவனுக்கு நன்றி கூறி எத்திக்கும்
பொங்கல் பகிர்ந்துண்ணும் ஆனந்தத் தையிது
தை பிறந்தால் வழி பிறக்கும்
தை பிறந்தால் பொங்கல் வரும்
மைவிpயும் எதிர் பார்க்கும்
கைகளிலும் புது வேகம் வரும்
உழவன் பூரித்து மகிழும் தை
டென்மார்க்.13-1-2009- வளரிக்கு மின்னஞ்சல் 22-12-19
கவிச்சுடர் வேதா. இலங்காதிலகம்


வளரி சஞ்சிகைக்கு மனமார்ந்த நன்றி





7 கருத்துகள்:

  1. நல வெண் பா :- இனிப்பாய் தித்திப்பாய்
    சர்க்கரைப் பொங்கல்
    வாழ்த்துகள் கவிஞரே.! 14-1-2020

    பதிலளிநீக்கு
  2. Subajini Sriranjan :- தை மகளே வருக
    நற்கவிதை தருக
    14-1-2020


    சிறீ சிறீஸ்கந்தராசா :- இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா!!
    14-1-2020

    பதிலளிநீக்கு
  3. Kugananthaluxmy Ganesan :- பொங்கலாய் இனித்திடும் நற்கவிக்கும் இனிய நல் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி......
    தங்களுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி!
    14-1-2020

    பதிலளிநீக்கு
  4. Subi Narendran :- உங்கள் குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் .
    14-1-2020

    பதிலளிநீக்கு
  5. Sivakumary Jeyasimman :- பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா
    15-1-2020


    Verona Sharmila:- இனிய நற்காலை வணக்கங்கள்
    இன்பத்தால் மனங்களும்.. வெற்றிகளால்..முயற்சிகளும்
    குறையின்றி.. வாழ்வில்.. நிறைந்து.. பொங்கிட.. அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
    பொங்குக உங்கள் இதயத்தில் நல்லவை மட்டும்- 15-1-2020

    பதிலளிநீக்கு
  6. முருகுவள்ளி அரசகுமார் :- இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    James Gnanenthiran :- வாழ்த்துக்கள்


    Rathy Gobalasingham :- இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
    வாழ்க வளமுடன்.


    Manjula Kulendranathan:- உங்களுக்கு என் இதயம் நிறை த்து பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு