எவரின் வழிகாட்டல்!...
00
மகிழ்ந்து கால்களை மாற்றி மாற்றி
மடக்கியுதைத்து நீட்டுதல் மரபுவழியோ!
மதர்ப்புடன் கைகளையும் மதியூகமாய்
மதுரமாய் நீட்டி மதிநுட்பமான
மடக்கலில் விரல்கள் முகருதலாகி
மதனபானமாய்ச்; சுவைத்து மிடுக்குடன்
மாறாட்டமின்றிச் சூப்பி மகிழ்ந்தது
மங்கலமாய்க் கொழுகொழு மழலை
00
எவரின் வழிகாட்டலின்றி எட்டியது
எல்லையற்ற எடுப்பான வினைவண்ணம்.
எதிர் காலத்தில் எதார்த்தமாக
எதிர் காற்றை எளிதாய்
எதிர் கொள்ளும் எமகாதகமோ!
எத்துணையானாலும் சுயமுயற்சி என்றும்
எல்லையற்ற சுயாதிபதி ஆக்கும்
எள்ளலற்றது எழிலன் ஆக்கட்டும்
00
உன் ஓயாத உற்சாகம்
உன் வியக்கும் உந்துதல்
என்னவொரு சுய விளையூக்கம்!
ஊன்னதமாயுலகைத் தனியே அளக்கும்
உன்னுதல் முதற்படி ஆராரோ!
பின்னின்று உதவுங்கள் பெற்றோரே!
என்றும் சார்பாய் இருத்தலே
வென்றிட வலியின்றி வளர்த்தல்
00
(மதர்ப்புடன் - அழகு. மதுரமாய் - இனிமை.)
00
நாவலர் (விருது) வேதா. இலங்காதிலகம்
டென்மார்க். 15-9-2021.
Vetha Langathilakam
பதிலளிநீக்குபேச்சியம்மாள் ப்ரியா ( கவிதைச் சாரல் சங்கம்)
Admin
வணக்கம் கவிதாயினி.
வெகுநாட்களாயிற்றே...
நலமா !
28-9-2021
Vetha Langathilakam
பேச்சியம்மாள் ப்ரியா மிக நலம் நன்றி .
இடையிடையே படங்களில் காண்பேன் தங்களை.
தங்கள் நலமும் செழிக்கட்டும்.
28-9-2021
Manjula Kulendranathan
வாழ்த்துக்கள்
28-9-2021
Sarala Vimalarajah
அருமை அக்கா
28-9-2021
Vetha Langathilakam
Sarala Vimalarajah mikka makilchchy .......
28-9-2021
Vetha Langathilakam
Ratha Mariyaratnam
Admin
அற்புதம் அக்கா
29-9-2021
Vetha Langathilakam
Ratha Mariyaratnam mika makilchchy.
28-9-2021
Vetha Langathilakam
Suseela
Admin
அழகு
29-9-2021
Vetha Langathilakam
Author
Suseela
28-9-2021
Subi Narendran
மழலையை பற்றிய இனிய கவிதையும் படங்களும். அருமை.
29-9-2021
Vetha Langathilakam
கவிதாயினி இராணி பௌசியா
வாழ்த்துக்கள் குழந்தைகளே!
1-10-2021
Vetha Langathilakam
கவிதாயினி இராணி பௌசியா aamm! வாழ்த்துக்கள் குழந்தைகளே!
1-10-2021