விரலோவியம்.
00
அபிநயமும் ஓருவகை விரலோவியம்
அற்புத நான்கு பிரிவுகளாய்
ஆகார்ய, வாசிக, ஆங்கிக, சாத்வீகமாய்
கருத்தை உணர்வை கலையாக்குதல்.
விரலோவியம் (கைமுத்திரை) நாட்டியத்தில் முதன்மை.
00
ஓவியம் விரலோவியக் கவின்கலை
ஆவியுருகப் பாளை விரியும் வனப்பு
தாவி மனமீடுபடும் கலை
நீவுதலால் (பூசுதலால்) கருத்து நிறப்பூச்சால் வெளிப்பாடு
ஆவணமாகியது மோனலிசா ஓவியமும்.
00
கனவுகளின் கூடாரமாக நர்த்தனமிடும்
தினவெடுக்கும் விரல்கள் அர்த்தமுடனசைந்து
ஆனந்த விருந்திடும் விரலோவியம்.
ஆனந்தித்து அப்பும் குழந்தைக் கிறுக்கலும்
ஆனந்தபரவசம் வண்ணக் கலவையால்
00
புள்ளியிட்டுக் கோலமிடுதல் மனம்
அள்ளும் வல்லவொரு விரலோவியம்.
கொள்ளையிடும் கவிதைக்குப் பெயரென்ன!
தள்ளமுடியாத விரலோவியம் அன்றோ!
தையல் பின்னலென எத்தனை எத்தனை!
00
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக