-(இலங்கை சஞ்சிகை ஜீவநதி யில். ஜீவநதிக்கு மிக்க நன்றி 22-3-2021)
மனிதர்கள். -
00
மனிதர்கள் மனம் கடல்
புனித குணவிரிப்பில் அசுத்தங்களை
வனிதமாகச் சுத்திகரிக்காது அதனுள்
விழுந்து அழிகின்றனர் சிலர்
அறிவோசைi அன்போசையை நிதம்
குறியாக அத்திவாரமாக்கும் பெற்றவர்.
பொறியாகி அனுபவங்கள் பொசுக்கியும்
தறித்தும் வீழ்த்தப் பார்க்கிறது. எம்மை.
00
பொல்லாத் துரோகங்களும் அவமானங்களும்
வல்லமையாய் ஏமாற்றித் துகிலுரிய
செல்லாது இது என்னிடமென்று
நல்ல அத்திவாரத்தை உணர்ந்து வாழ்!
வேடிக்கை மனிதராக இன்றி
வாடி வீழாது---------இரக்கம்
கூடிய அன்பு கருணையோடு
தேடித் தலைவனாகு! தெய்வமாவாய்!
00
வள்ளலாகித் தியாகி ஆகு!
எள்ளலற்ற வாழ்வை நோக்கு!
கொள்முதலான பகுத்தறிவை வளர்த்து
குள்ளமனமற்ற பேரறிவாளன் ஆகு!
மனிதநேயம் நிறைந்தவன் மனிதன்.
மனிதம் எங்கே தேடுகிறோம்.
மனிதம் பாதி மிருகம் முழுவதுமாய்
புனிதம் கெட்ட மனதர்களாகிறாரே இன்று.
00
6-11-2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக