புதுவருட 2022 வாழ்த்துகள்
உனக்கென்று கன்னற் தமிழ் தேடி
கணக்காகக் கவினுறக் கலந்திணைத்து
கவித்தேனில் நனைத்தெழுதி இணைக்கும்
கருத்தான புதுவருடம் மலரட்டும்.
உருத்தான புதுவருட வாழ்த்துகள்
00
கூடல் தமிழால் இணைந்து திறமையில்
பாடல் ஆடல் இன்னும் பல
தேடல் முயல்வாற் தலை நிமிர்ந்து
கோடலின்றி மானுடம் சுயகாலூன்றி
சூடட்டும் திறமையால் வெற்றி மாலை
00
வாடல் வருந்துதல் முற்றாய் மறந்து
நாடல் உயர்வு ஒன்றேயாகட்டும்
கேடலற்ற புதுவருடம் மலரட்டும்.
கோடலற்று ஆணும் பெண்ணும்
கூடி மகிழ்ந்து மாண்புற வாழட்டும்
00
வண்ண மீன்களாய் மண்ணிலே சுழலும்
கண்ணிற்குப் புலப்படாத் திரைமறைவு வாழ்வின்
எண்ணற்ற கோணல்கள் நிமிரட்டும்! இன்பம்
விண்ணுயரும் நம்பிக்கை பெருக விடியட்டும்
தண்ணளி வெண்ணிலவாகட்டும் புது வருடம்
00
கவித்தாமரை - வேதா. இலங்காதிலகம் - டென்மார்க் - 31-12-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக