ஞாயிறு, 5 மே, 2019

86. (665) பாதங்களால் நிறையும் வீடு.







பாதங்களால் நிறையும் வீடு.


பூம்பாதம் பஞ்சுப் பாதங்களால் நிறைந்த
பூக்காலம் குழந்தைகள் மழலைக் காலம்.
பூப்பாத அடிகளையும் வரைந்து நிறமாக்கிய
பூம்பனி உணர்வு மனதில் நெகிழ்வு!
பூரணமாய் வளர்ந்தனர், பாலகர் பாதங்கள்
பூரிப்புடன் குதித்து விளையாடி ஓடின.
மிதித்து மிதித்து மினுக்கமானது தரை
குறுமணல்களைப் பெருக்கித் தள்ளுவதும் சுத்தம்.
பாதம் மிதக்காத மாக்கோலமும் வீட்டுக்கழகு.
பாதங்களில் வீழ்ந்து வணங்கினால் ஆசிகள்.
பாதம் பதியாத இடம் வெறுமையன்றோ!
பக்தியற்ற வீட்டில் இறைவனின் பாதங்களேயில்லை.
நண்பர்களின் பாதங்களால் நிறைந்த வீட்டினால்
கண்ணிறைந்த கலகலப்புத் தான் நாளும்!
அன்பும் அறமும் செய்யுங்கள்! தினம்
அன்பான பாதங்களால் வீடு நிறையும்!
வன்முறையாளர்களை அழிக்க இந்த அன்பே
நன்முறை மருந்தாகும் நாளும் புரிந்திடுவோம்!
11-11-2017.


1 கருத்து:

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...