புதன், 22 மே, 2019

96. (675) 1. வாழ்க நல்மனம்! - 2. காழ்த்தலின்றியே வாழ்த்தலாம்.







வாழ்க நல்மனம்!

வாழ்த்தில் மகிழ்ந்த முதிய உள்ளம்
வாழ்ந்திடட்டும் பல்லாண்டு பல்லாண்டு காலம்!
வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துதல் வழமை.
வாழ்த்திடவும் நல் மனம் வேண்டும்.
வாழ்த்தை ஏற்றிடவும் பண்பு வேண்டும்.

சேந்தனார் சிவனையும், பெரியாழ்வார் திருமாலையும்
ஏந்தி வாழ்த்திய பாடல்கள் திருப்பல்லாண்டாம்.
வாழ்த்தினை விரும்பி ஆசியாக ஏற்பதும்
வாழ்த்தினை ஏற்றிட்டால் வசவு விழுமோ!
வாசலுக்கு    எடுக்காரென்றும்    அச்சமும் பலருக்கு

வாழ்ந்த முதியோர்  இளையோரை வாழ்த்தல்
தாழ்ந்திடா வாழையடி வாழ்வான மரபாம்.
சூழ்கலி நீங்க வாழ்வு துலங்க
ஆழ்க தீயதென நல்மனதோர் வாழ்த்துவோர்.
வீழ்க ஆணவம்!   வாழ்க நல்மனம்!

    14-2-2019





காழ்த்தலின்றியே வாழ்த்தலாம். 
00








சொற் பொருள் -
(காழ்த்தல் - மனவயிரங் கொள்ளுதல்.   பேழ் -பெருமை.  போழ்வு - பிளவு.
00
வாழ்ந்த மனது  நல்லதற்கு
வாழ்த்த எண்ணுதல் இயற்கை.
ஆழ்ந்த புரிந்துணர்வு அங்கீகரிக்கும்
தாழ்ந்த புரிதல் நிராகரிக்கும்.
வாழ்த்தை மதிப்புடையோர் மதிப்பார்.
00
வாழ்த்திற்காகப் பலர் ஏங்குவார்
வாழ்த்திடார் வக்கிரங் கொள்வோர்.
வாழ்த்துங்கள்! மனதார வாழ்த்துதல்
வீழ்த்தி விடாது யாரையும்.
வாழ்த்தவுமொரு மனம் வேண்டும்
00
வாழ்த்துங்கள் தராதரம் அறிந்து
வாழ்த்து உயர்த்தும் ஆசியுடைத்து.
ஆழ்த்துவது மதிப்பு! மகிழ்ச்சி!
வாழ்த்துகள் தொண்ணூற்றொன்பதுடன் ஒரு
வாழ்த்து   நூறு ஆக்கிடும்.
00
வாழ்த்தும் மனமொரு கொடை
வாழ்த்து கேட்டும் பெறுவார்.
கீழ்மையாய்ப்  பணத்திற்கும் வாங்குவார்.
நிகழ்விலிருந்தும்  நன்மையாய் வாழ்த்தாதோர்
காழ்த்தல் நெஞ்சுடைய கீழோர்.
00
வாழ்த்து குவிதலால் வருந்திடார்.
பேழ் மனம் பெறுமதியறியும்.
போழ்வு மனம் நல்லதையும் வெறுக்கும்.
வாழ்த்து ஒவ்வொன்றும் ஈடற்றது.
வாழ்த்துங்கள் காழ்த்தலின்றி வாழ்த்துங்கள்
00


வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 2-8-2022





5 கருத்துகள்:

  1. Subajini Sriranjan :- அருமையான பா
    வாழ்த்தை யாரும் கேட்டுப் பெறுவதில்லை
    நாமாக கொடுக்க வேண்டும் அதை பண்போடு ஏற்க வேண்டும்

    Vetha Langathilakam :- மகிழ்வு ஆழ்ந்த அன்பு Suba...
    2019
    Rathy Mohan:- வாழ்த்துவதற்கும் நல்ல மனம் வேண்டும்.. வரிகள் சிறப்பு வேதாமா
    2019
    Vetha Langathilakam :- மகிழ்வு ஆழ்ந்த அன்பு ரதி.
    2019

    பதிலளிநீக்கு
  2. காழ்த்தலின்றியே வாழ்த்தலாம். - comments -

    சுதா நாதன் வாழ்க வளமுடன்
    வாழ்த்துகள் அக்கா
    4-8-2022
    Janaki Sreenivasulu
    வழங்கிய வாழ்த்துக்கவிதை ஈடற்றது;வாழ்த்துங்கள் சகோதரி!தங்களுக்கு நெஞ்சார்ந்த நல் வாழ்த்துகள்
    4-8-2022
    Vetha Langathilakam
    Janaki Sreenivasulu
    May be an image wish
    4-8-2022
    Vetha Langathilakam
    Sarala Vimalarajah
    அருமை அக்கா
    4-8-2022
    Vetha Langathilakam
    Author
    Sarala Vimalarajah..
    May be an image of flower and text that says 'அன்புடன் மிக மகிழ்வு. நலமுடன் நீடு வாழ்க! வேதா இலங்காதிலகம் டென்மார்க்2022 டென்மார்க் 2022.'
    5-8-2022
    Vetha Langathilakam
    தேடித் தேடிக் கருத்துகள் அறிந்து
    கூடித் தமிழ் சொற்களோடு
    சோடித்து எழுதுதல் இன்பம்
    நாடி நீங்கள் கருத்து
    போடுதலும் இன்பம்
    Reply5d
    Vetha Langathilakam
    வரிகள் ஒரு பக்கம்
    உரிய படம் தேடல்
    மறு பக்கம். இனிமை
    5-8-2022
    Vetha Langathilakam
    என் முதலாவது வலையில்
    வாழ்த்து விரயமாகாது
    என்ற தலைப்பில் ஒரு கவிதை
    19-1-2012ம் ஆண்டு எழுதியுள்ளேன்
    அதையும் வாசித்துப் பாருங்கள்
    மிக்க நன்றி..........https://kovaikkavi.wordpress.com/.../29-%e0%ae%b5%e0%ae.../

    பதிலளிநீக்கு
  3. Sarala Vimalarajah
    Vetha Langathilakam அருமை அக்கா
    10-8
    Vetha Langathilakam
    Sarala Vimalarajah நன்றியம்மா! மகிழ்ச்சி;
    வாழ்க வளமுடன்!
    10-8-
    Loga Sundharam
    நன்று 👌நண்பியே
    10-8-2033
    Vetha Langathilakam
    Loga Sundharam mikka nanry urave
    10-8-2022
    Vetha Langathilakam
    Ratha Mariyaratnam ---நன்றி அக்கா....

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு