சனி, 20 ஜூன், 2020

280. (843 ) என் மனச்சுவரில் (Radio)









என் மனச்சுவரில்

(அம்பாரம்- நெற்குவியல், களஞ்சியம்.)

நம்புவீர்களா!  இருபது வருடங்கள்
அம்பாரம் அடுக்குகளுடன்  ஆற்றோட்டமாய்
எம்மவருடன் வாழ்ந்தவென் ஆதிமனை
அம்ணமாய்த் தரை மட்டத்துடன்

கூடிக் குலாவிய உறவுகள் 
ஆடி அவி அடங்கினர்
பாடி ஆடிப் பழகியவை 
ஓடி விடுமா மனதிலிருந்து

வாழ்வியல் படித்த கூடு
தாழ்ந்திடாது மனச் சுவரிலிருந்து
ஆழ்ந்த ஏக்கம் பசையாக ச்
சூழ்ந்து வருத்தும்   இடையிடையே

கூறுபடுத்தும்  மனஎழுச்சி..
கூகிளில்  புகுந்தேன் நிமிடத்தில் 
கூடினேன் ஆருயிர் கிராமத்தில்
கூச்சமின்றி உலாவினேன் ஆ;திநினைவுகளுடன்

மனச்சுவர்  ஓவியச்சுவர் 
தனமாம் ஆவியின் கூர்மையை 
வனமாக்கும் வளமாக்கும்  மனவியல்
கனமின்றி வாழ திடம் திண்மையே வரை கோல்.

 12-6-2020





4 கருத்துகள்:

  1. Ruban Shiva
    வாழ்த்துக்கள் அக்கா.
    20-6-2020

    Thavam Thasan
    அழகு தமிழ் கவிதை வாசித்த பாங்கும் அருமையானதே புலத்திலிருந்து புலந்தோர்க்கே தற்போதைய புலத்தினருமை புரியும்
    20-6-2020

    பதிலளிநீக்கு
  2. அகன்
    அருமை. நல்வாழ்த்துகள் ம்மா வேதா.
    20-6-2020
    சிந்தியா சிந்தி
    வாழ்த்துகள் அம்மா
    20-6-2020

    Mani Thiyages
    வாழ்த்துகள் மா

    கவிதா கவி
    வாழ்த்துக்கள் அக்கா
    20-6-2020
    கண்ணதாச முருகன்
    வாழ்த்துகள் சகோதரி

    Puwaneswarie Shan
    வாழ்த்துகள் கவிதாயினி நட்புக்கு
    20-6-2020
    Sasi Ravichandrarasa
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. Sivaneswary Shanmuganathan
    வாழ்த்துக்கள் அக்கா.

    Sivaneswary Shanmuganathan

    20-6-2020
    Jasmin Kennedy
    அருமை
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. Mathiyuganathan Satgunanathan :- வாழ்த்துகள்

    Like

    Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்ச்சி மதி..
    21-6-2020
    Like

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு