புதன், 26 பிப்ரவரி, 2020

252. (815 ) நேரம்.





நேரம்.

தாளலய சங்கமம்
காலப்பிரமாண அங்கம்.
மாத்திரை விலக இசை 
யாத்திரை பாழாகும்.

நேரமெனப்   படுவது 
சாரமிகு  நிறைகோல்
தூரம் தள்ளப் படுவது
பாரமிகு சிலுவைகள்.

நேரப்பிரமாணம் வாழ்வின் முத்தாரம்
நேரமதிப்பு வாழ்வின் வித்தாரம்
விநாடிகள், மணித்தியாலங்கள்
சுக நாடிகள நற்கணிப்பீடுகளில்

சனி விரதம் ஞாயிறில் வராது
சிவராத்திரி நவராத்திரி ஆகாது
சுபநேரம் விலகிடில் சுப கிரியைக்குத் தடை
தன்நேரமாகினால் காலனும் விரிப்பான் கடை.

காலப்பிரமாணம் தவறிய சிசுவும்
கர்ப்பத்தில் தாயிற்கும் சிசுவிற்கும் காலன்.
நிர்ணய  நேரத்தில் மின்சடப் பொருளும்
நிர்வாகம் புரியும் தன்னியங்கி நிலையில்

ஞாலம் அளக்கும் மானிடம் மட்டுமேன்
ஆலகாலவிசமாய்க் காலத்தைக் கருதுகிறான்.
ஈரமனதில் நேரம் ஓரம் நகரும்
நேரம் தவற பிறர் நேரமும் நகர்த்தப்படும்.

சுயகட்டுப்பாடு நழுவிடில்
நேரக் கட்டுப்பாடு  நழுவும்
ஆசை அளவுக்கு மேவிடில்
நேரம் கட்டுவிட்டு விலகிடும்

வரம்பு கட்டிய ஆசை வயலுள்
தரம்நிறை சுயகட்டுப் பாட்டினுள்
நேரம் மனிதனுக்கு வாய்த்த வரம்.
நேரநிர்வாகம், நன்மதிப்பு,  நாகரீகம்.

செய்வன நேரத்துள்  செய்தல்
செய்வன நன்மையாய்ச் செய்தல்
செய்வன மகிழ்வுடன்  செய்தல்
பெய்திடும் பல நிறைவுகள்.

13-3-2003
(இலண்டன் ரைம் வானொலி பொதுத் தலைப்புக் கவிதை
11-4-2005 ரிஆர்ரி  தமிழ் அலையில்  வாசித்தேன். கே.பி. லோகதாஸ்)
















2 கருத்துகள்:

  1. Vasan Savi
    அருமை
    8-11-2021
    Vetha Langathilakam
    Vasan Savi
    May be an image of flower, outdoors and text that says 'மகிழ்ச்சி இனிமை!'

    பதிலளிநீக்கு
  2. Vetha Langathilakam
    Sarala Vimalarajah >/ வாழ்த்துக்கள் அக்கா அருமை
    11-11-2021
    Vetha Langathilakam
    Sarala Vimalarajah photo thanks

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு