சனி, 29 பிப்ரவரி, 2020

256. (819 ) ஆச்சரியம் அல்ல - மன்று போற்ற வேண்டும்!









ஆச்சரியம் அல்ல

அகமும் முகமும் மலர்ந்திட உண்மையாய்
சுகமான வார்த்தை கலந்து பொருளாய்
நல்லதை வாழ்த்தும் மன உயர்வுடை
மனிதர்களோடு வாழ்விணைய வேண்டும்
நல்லதை வாழ்த்திட மனமயர்ந்திட வேண்டாம்.

பள்ளத்தில் நிற்காது துணிந்து
வாழ்த்திடத் தேவை வார்த்தைகள்!
தாழ்ந்திடாத மன எண்ணங்கள!;
சூழ்ந்திடாது பகை!  வாழ்த்துங்கள்!
வீழ்ந்திட மாட்டோம் உயர்வோம்!

17-5-2003





மன்று போற்ற வேண்டும்!

அயர்வு இன்றி அரும் பாடுபடு
முயற்சி பிழிந்து வெற்றி எடு!
மனித முயற்சியில் இது வெற்றிக்கோடு!
இனிது பொருந்துமிது உலக வாழ்வோடு
மென்று முழுங்காத சுய திறமைகள்
பொன்றிடாது ஒளிர வாழ்த்திடும் வரவேற்புகள்
குன்றிடாது உயரும் ஊக்குவிப்புகள்
நன்று திறக்குமது அறிவுக் கண்கள்.

மன்று போற்றும் மார்க்கங்கள்
குன்றில் ஏற்றும் வாய்ப்புகள்
குன்றுக்கும் உண்டு இவ்வாதரவுகள்
எம் முயற்சி தரும் சந்தர்ப்பங்கள்.
வண்ணத் தமிழ் வரிகள் போல்
வளமான கவிதைகள் போல்
ஏறுநடை போட வேண்டும்
வேன்றிட ஏது தடை!

7-6-2003





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...