வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

334. (897) (ஊடகம் - காற்றுவெளி) மனரேகைகளின் பரமபதம்.

 





காற்றுவெளி சஞ்சிகை 2021- மாசி மாதம் எனது கவிதை...

பிரசுரிப்பிற்கு மனமார்நத நன்றிகள்


மனரேகைகளின் பரமபதம்.


(அகிற் கூட்டு – சநதனம். சுகித்தல் .நலமாக. 

ஆரணித்தல் - காவல் செய்தல்  இரணியம் - பொன்);


அகம் திறந்து பாராட்டி

முகம் மலர்ந்து வரியொட்டல்

மகிமையுடன் திறனை ஒப்புதலாக்கும்.

அகிற்கூட்டு வார்த்தை அங்கீகாரம்

சுகித்தலாகி வேர் நீண்டு

திகிலழித்துத் திராணியேற்றும் சிகரமேற.


கரணமடித்துப் பாலனுக்கும் பலமேற்றும்

அரணித்தலாகும் அன்பு வார்த்தைகள்

இரணியமாகும், மழையாகும் இதமிகுமொழிகள்.

பரணிபாடும் பாங்காக எழுத்துலகில்.

உரமிகு அங்கீகார மொழியால்

தரமற்றுத் தோற்பவனும் நந்தவனமாகும் நிலையுண்டு


கனமான தோல்வியால் நிலைமாறினும்

தனமாகும் பாராட்டால் வனமாகும்

மனதின் ரேகைகளின் பரமபதம்

தினம் வெற்றிக் கதிரொளி விரிக்கட்டும்.

வானளாவிய அதிகாரம்  ஏளன 

இளக்காரம் தோல்வியின்றுp உயரட்டும்.


இனிய வலியகற்றும் மென்மை

கனியும் இதமுடை வார்த்தைகள்.

மனித இதயத்துச் சிறகுகளே

புனிதமாய் அடைகாக்கிறது வார்த்தைகளை.

காலையோ மாலையோவெனும் இதமான

மானசீக  பேறுதான் மொழி.


தீராநதி ஓயாத போராட்டம்

சீராயோடும்  நிபந்தனையற்ற எழுத்து

சோராது இதயத்துச் சிறகுகள் வெப்பமாகி

போராக ஏவாது இதமாயெழுதுவது

மனித நுண்ணறிவின் விரிப்பு

புனிதப் பழமாகும் கருத்து.


 25-10-2020






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...