ஆண்டவனின் புதிய உலகம்.
அதிகம் கெட்டு விட்டது
அதிகாரம் தலைவிரித்தாடுகிறது.
அதிக சொத்து சேர்த்து
ஆதி இயக்கர் நாகராகிறார்
புதிய உலகம் தேவையே
00
ஆண்டவன் என்னை அழைத்தால்
நாண்டு கொண்டு மறுப்பேன்.
வேண்டுதலும் ஒன்று உண்டு.
தோண்டித் தமிழ் படிக்கும்
பாண்டித்தியத் துணைகள் வேண்டும்
00
மாண்புடை எண்ணங்கள் விதைக்க
மாசற்ற அறிவு வயல்
மழலையில் தொடங்க வேண்டும்.
மண்ணிலே அகரம் எழுதி
மண்ணாசை பெருக்க வேண்டும்.
00
மகிமையுடை தன்னம்பிக்கைத் தூண்
மகாசக்தியாக மழலைகளிடம் ஊன்றி
மனதில் வஞ்சகம் பொறாமை
மகுடம் ஏறாது நேச
மகாநதி பெருக்க வேண்டும்
00
இயற்கைச் செய்வினைகள் உயர்த்தி
அயர்ச்சியற்று உழவு பெருக்கி
சுயநலப் பேய் விரட்டி
சுயாதிபதியாய் புது உலகம்
செயற்கையின்றிச் செயித்தல் வேண்டும்.
00
சோம்பலற்ற சத்திய நல்வினை
சுயகட்டுப்பாடு முதுமை போற்றுதல்
பயமற்ற பெண்மை வாழ்வு
பதியும் மதிக்கும் பெண்மை
புதிய உலகில் வரட்டும்.
00
இறை உணர்வு பெருகட்டும்
கறை துடைத்தால் உலகுய்யும்.
குறையற்ற உழைப்பு இன்பம்.
நிறைவு தராது அகந்தை.
சான்றோர் நட்பு புத்துலகீயும்.
00
-29 -6-2022
Loga Sundharam
பதிலளிநீக்குநன்று 👌நண்பியே
19-9-2022
Vetha Langathilakam
Sarala Vimalarajah
சிறப்பு அக்கா
14-9-2022
Vetha Langathilakam
Author
Sarala Vimalarajah makilchchy nanry Sarala Vimalarajah
19-9-
Vetha Langathilakam
Perumalmurugan Perumal Murugan
👌👌👌
15-9-2022
Vetha Langathilakam
Author
Perumalmurugan Perumal Murugan mikka nanry
19-9-2022