என்ன மனிதம்!!!!!
வயதானவர்களின் நிம்மதியை
உயர்நிலையாகப் பாதுகாக்க
செயல்-நடைமுறைகளில் இயல்பாய்
வியப்பின்றி நடையிடலாம்.
தயக்கமின்றி நயங்காட்டும்
சுயநலமற்ற நியதியாளராகலாம்.
00
கைபேசியில் பேசவும் கைராசியற்ற
கையறு நிலைமை துன்பம்.
வைகையாறாகச் சுதந்திர வரமோடு
தைரியமாகப் பேசுதல் இன்பம்.
நையாண்டி நிலைக்குச் சென்று
பைத்தியத் தனமாதல் பசுமையல்ல.
00
குரலைக் கே;ட்கவும்
தரமான தகவல்
அரங்கேறலை அறியவும்
இரங்க வேண்டுமா!!!!
இயற்கையாய் வெளியாகாதா!!!!!
இதயம் இறுக்கமா!!!!!
இலுப்பைக் கொப்பை
உலுக்குதலாக உலுக்க வேண்டுமா!!!!!
. 20-9-2022
Vetha Langathilakam
பதிலளிநீக்குஅடுத்தவனை மகிழ்விப்பவன் மனிதன்
கெடுவினையால் துன்புறுத்துவோன் புனிதனல்லன்.
23-9-2022
Vetha Langathilakam
M.A. Ramamoorthy
Group expert in Virtual Reality
இனிய நல்வாழ்த்துகள்
23-9-2022
Vetha Langathilakam
Author
M.A. Ramamoorthy anpudan makilchchy.. Urave....
பசி தீர்ந்தால் பணமிருந்தால் போதும்
பதிலளிநீக்குபொசியும் (கசியும்) அன்பென்ன அன்பு!
புசிப்புடை (நல்லூழ்) உறவென்ன உறவு!...
27-9-2022
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குசாதாரண வரிகளை ஒரு பிரபலம் சொன்னால்
பதிலளிநீக்குஆகா ஓகோ என்று புகழ்வார்கள். நாம்
மகா பிரயத்தனப்பட்டு எழுதுவதை ஒரு
கருத்தால் நிரப்ப மனதின்றி நிற்பார்கள்.
இது என்ன நடிப்பா! அன்றியெது!......26-9-2022
Vetha Langathilakam
பதிலளிநீக்குSarala Vimalarajah
அருமை அக்கா
29-9-2022
Vetha Langathilakam
Author
Sarala Vimalarajah கருத்திடலிற்கு மனமார்ந்த நன்றி மகிழ்ச்சி.சரளா.
தாங்கோ தாங்கோ கைகளையே!
பதிலளிநீக்குவாங்கோ வாங்கோ தமிழாடுவோம்
ஆங்காரம் இன்றி அன்பாக
ஈங்கு புலனைச் செலுத்துங்கள்!
உங்குதலாக (ஆடுதல்) உங்கள் தமிழ்
ஓங்கி உயரட்டும் எழிலாக........31-9-2922
Arivukkan Raju Naidu
பதிலளிநீக்குமிக அருமை, கவியே.💐💐
1-10-2922
Vetha Langathilakam
Author
Arivukkan Raju Naidu அன்புடன் மிக மகிழ்ச்சி
நன்றி உறவே