சனி, 15 அக்டோபர், 2022

394. ( 927_ உண்மையின் சுகம்

 


    






       உண்மையின் சுகம்



குடும்ப அமைதி அடிநாதமாய் 

குடியிருப்பு அமைதியிலிதம் பெறுதல்

குருவிகளின் இசையிலும் குதூகலமடைதல்

முகில்களில் ஓரோவியம் தீட்டல்

இவைகள் தலையசைப்பிலும் ஓரிதமான

இசைத்தாளமிணைய இரசித்தல்  இன்பம்

n0

தெளிந்த நீரோடைப் பளிங்கு நீரில்

குளிரக் கால்நனைக்கும் அமைதியும்

களிப்புமென்றும் ஆரத்தி யெடுக்கட்டும்.

வசந்தம் குடிகொள்ளும் சூழலில்

வன்முறை நோய் மொழியாளருக்கு

சின்ன வரவேற்பும் வாசலுமில்லை.

00

இன்னமுத அருளுடைய இதயப்பூங்காவில்

பின்னிய பாசப்பூக்கள் உணர்வுகளாக

இன்புநிலாப் பின்னணியிலாடி அசையும்

சின்ன அசைவிலும் சிலிர்க்க வைக்கும்

என்வீட்டுச் சுதந்திரக் கொடியின்

உன்னத அர்த்தம் உண்மையின் சுகம்.

00

 16-10-2022


1 கருத்து:

  1. செ. இரா. செல்வகுமரன்
    அழகான பா! 😊
    15-10-2022
    Sandradevi Thirunavukkarasu
    Congrats

    Vetha Langathilakam
    Gandhimathi Selvarathinam
    Admin
    Considering parenthood
    அருமை
    16-10-2022
    Vetha Langathilakam
    Author
    Gandhimathi Selvarathinam mikka nanry mkilchchy
    15-10-2022
    Vetha Langathilakam
    Janaki Sreenivasulu
    Very nice 👍
    16-10-2022
    Vetha Langathilakam
    Author
    Janaki Sreenivasulu mikka nanry. makilchchy janaki.....

    Vetha Langathilakam
    NV Easwary
    Awesome 👍
    17-10-2022
    Vetha Langathilakam
    Author
    NV Easwary anpudan...nanry
    2y
    Reply
    Yogarajah Subramanium
    No photo description available.

    Yogarajah Subramanium
    No photo description available.

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...