(இல்லை ஒரு) எல்லை
00
சுதந்திரம் உரிமை உணர்வுக்கு
எல்லை தேவை.
பிறரை நோகடித்துக் காயமாக்குதல்
துன்பப்படுத்தல் எல்லை தாண்டிய பயங்கரவாதம்
மன ஆற்றலுக்கு இல்லை எல்லை
உடல் வலிமைக்கு உண்டு எல்லை
பொறாமை கோபம் பேராசை அடுத்தவர்
துன்பத்தில் இன்பம் மன எல்லைகளைக் கட்டுப்படுத்தாது
00
உறவுகளுக்கு எல்லையுண்டு பாசத்தின்
எல்லை மீறலால் துன்பங்கள் பெருகும்.
எழுத்திற்கு எல்லை ஏது!
கவிதைக்கும் இல்லை எல்லை
''கற்றது கைமண்ணளவு கல்லாதது
உலகளவு '' கல்விக்கில்லை எல்லை
வயதிற்கு எல்லை மரணம் எதையும்
எல்லைக்குள் வைத்திருப்பது எல்லையற்ற நிம்மதி.
00
உறவுகளுக்கு எல்லை போடக்கூடாது அதுவரை
இதுவரை செல்லலாமென்பது மாயத்தன்மை
நாகரீகம் சமூகப் பார்வையுமொரு எல்லை
தேவையற்ற இறுக்கம் தரும் அன்பைப்
பாழ்படுத்தாத எல்லை இனிமை தரும்.
ஆசை இலட்சியத்திற்கு எல்லையிடுதல் கூடாது.
பிறருடைய எல்லைக்கோட்டை மிதிக்காத வரை
எல்லையற்ற சுதந்திரம் தனிவிதி சமைக்கும்.
00
19-10-2022
Sarala Vimalarajah
பதிலளிநீக்குசிறப்பு அக்கா
19-10-2022
Vetha Langathilakam
anpu nanry Makilchchy..
Janaki Sreenivasulu
மிகவும் சிறப்பு சகோதரி!
Vetha Langathilakam
Janaki Sreenivasulu Anpu nanry makilchchy..
Manjula Kulendranathan
photo wish
Vetha Langathilakam
Manjula Kulendranathan Nanry
லோக சுந்தரம்
photo wish
Paval Rajadurai
photo wish
Vetha Langathilakam
Paval Rajadurai Thank you
மெய்யன் நடராஜ்
சிறப்பு
Vetha Langathilakam
மெய்யன் நடராஜ் Nanry
19-1-2022