சனி, 21 டிசம்பர், 2019

233. (801 ) மனிதம் நழுவுவதென்ன







மனிதம்   நழுவுவதென்ன

மனிதநேயம் பேணாமையென்ன
மகத்துவமாய் அதை எண்ணாமையென்ன
வனிதமற்று வாழாமையென்ன
வஞ்சித்து வாழ்வின் வளமிழப்பதென்ன

மனிதப் பிறவியென்ன 
குறி மறந்த நிலையென்ன
புனிதப் பிறவியென்று
அறிவை வளர்க்காமை என்ன

பழமை போற்றாமையென்ன
பெரியவரைப் பெயரிட்டு அழைப்பதென்ன
வழமையைப் பெயர்ப்பதென்ன
உயர் உறவைப் பேணாமையென்ன.

ஒருத்திக்கு ஒருவனென்ன
ஒருவனுக்கு ஒருத்தியான தூயதன்ன
கருத்தைப் பேணாமையென்ன
பெரும் தயக்கம் என்ன

பெண்மையென்ன தாய்மையென்ன
கண்ணெனச் சமனாகக் கருதாமையென்ன
உண்மையாய் பேணுதலாலென்ன
உலகில் பெருமை குறையுமாவென்ன

புத்தியைத் தீட்டாமையென்ன
கத்தியைத் தீட்டும் வன்முறையென்ன
சொத்தையாவதா உறவுகளென்ன
உத்தமமாகி இணைவதில் குறையென்ன

மதிக்க நடந்தாலென்ன
மதிப்பை பிறரிற்குக் கொடுத்தாலுமென்ன
துதிக்கும் பண்புகளென்ன
கதியின்றிப் பேதமாகிப் போவதென்ன.

மதமென்ன இனமென்ன
ஓடும் குருதியில் மாற்றமென்ன
இதயங்களில் கசப்பென்ன
மனிதரில் உயர்வு தாழ்வென்ன


2018







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு